Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
2022 சனி பெயர்ச்சியால் இந்த ராசிக்காரங்களோட வலியும், வேதனையும் தீரப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஆம் ஆண்டில் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறப் போகிறார். இந்த சனியின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும், சிலருக்கு பிரச்சனைகளையும் வழங்கலாம்.
ஜோதிடத்தில், எந்த கிரகங்கள் ராசியை மாற்றினாலும், அது ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கும். மேலும் ஜோதிடத்தில் எந்த கிரகங்களின் பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு அதிக முக்கியதுவம் உள்ளது. ஏனெனில் கிரகங்களில் சனி பகவான் மிக மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற 2 1/2 ஆண்டுகள் ஆகும்.

இவரைக் கண்டால் பலருக்கும் அச்சம் இருக்கும். ஏனெனில் சனி பகவான் ஒருவரின் கர்மவினைகளுக்கு ஏற்ப பலனை அளிக்கக்கூடியவர். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறப் போகிறார். இந்த சனியின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும், சிலருக்கு பிரச்சனைகளையும் வழங்கலாம். இப்போது 2022 சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் பிரச்சனையும், வலியும் தீரப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை படித்து பாருங்கள்.

சனி பெயர்ச்சி 2022 எப்போது?
2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 29 ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. இந்த சனி பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். அதே வேளையில் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் ஆரம்பமாகிறது. மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் அஷ்டம மற்றும் அர்தாஷ்டம சனியில் இருந்து விடுபடுகிறார்கள். அதே சமயம், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டம மற்றும் அர்தாஷ்டம சனி தொடங்குகிறது.

மேஷம்
2022 சனிபெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள். இப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது. அதோடு, பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வும், மரியாதையும் கிடைக்கும்.

ரிஷபம்
ஜோதிடத்தின் படி, ரிஷப ராசிக்காரர்கள் 2022 சனி பெயர்ச்சியால் விரும்பிய வேலையைப் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றமும், வருமான உயர்வையும் பெறுவார்கள். இந்த சனி பெயர்ச்சி காலம் ஒட்டுமொத்தமாக நல்ல காலமாக இருக்கும். அதே வேளையில், இதுவரை உங்களின் வேலையில் இருந்த தடைகள் நீங்கி, நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

மிதுனம்
2022 சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கப் போகிறது. வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகள் சனி பெயர்ச்சிக்குப் பின் வெற்றிகரமாக முடிக்கப்படும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அமையும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி
2022 சனிப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மைகளைப் பெறப் போகிறார்கள். இக்காலத்தில் எந்த இன்டர்வியூ சென்றாலும் அல்லது தேர்வு எழுதினாலும், அதில் வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான கதவுகள் திறக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு சம்பளம் உயரக்கூடும். சிக்கிய பணம் இக்காலத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.



Click it and Unblock the Notifications
