Latest Updates
-
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம்
சனி-சூரிய சேர்க்கையால் பிப்ரவரி 13 முதல் இந்த 5 ராசிக்காரங்க நிறைய பிரச்சனையை சந்திக்க போறாங்க... உஷார்..
சனியும், சூரியனும் ஒரே ராசியில் ஒன்றாக பயணிப்பதால், அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் மார்ச் மாதம் வரை இருக்கும். இதில் சில ராசிக்காரர்கள் நல்ல அமோகமான பலன்களையும், சிலர் அதிக பிரச்சனைகளையும் சந்திக்கலாம்.
ஜோதிடத்தின் படி, சனியும் சூரியனும் தந்தை மகன் உறவைக் கொண்டுள்ளனர். இருப்பினும் இவ்விருவரும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இதில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். அதே சமயம் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இதில் சனி பகவான் ஜனவரி 17 ஆம் தேதி தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்தார். இந்நிலையில் 2023 பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார். இதனால் கும்ப ராசியில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது.

சனியும், சூரியனும் ஒரே ராசியில் ஒன்றாக பயணிப்பதால், அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் மார்ச் மாதம் வரை இருக்கும். இதில் சில ராசிக்காரர்கள் நல்ல அமோகமான பலன்களையும், சிலர் அதிக பிரச்சனைகளையும் சந்திக்கலாம். இப்போது கும்பத்தில் நிகழவுள்ள சனி சூரிய சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முதலீடு செய்ய நினைத்தால், சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் சொத்துக்களைப் பெறுவதில் தடைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் திருமண வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் அதிகரிக்கும். இக்காலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, அதனால் சட்ட பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். ஏனெனில் உங்களுக்கு நெருக்கமானவர் கூட உங்களுக்கு துரோகம் செய்யலாம். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதன் காரணமாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நிதியைப் பொறுத்தவரை, உங்கள் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு இக்காலம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் அவ்வளவு பெரிய பிரச்சனை எதுவும் ஏற்படாது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்ப பிரச்சனையால் தொழில் வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இவ்விரண்டிலும் சமநிலையைப் பராமரிக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் பிரச்சனைகளில் சிக்க வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனக்குறைவாக இருக்காதீர்கள். சிறு பிரச்சனைகளையும் உடனே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய செலவுகளை வைத்துவிடும். திருமண வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் ஆணவத்தை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே பல பிரச்சனைகளை உருவாக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
