Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Shani Uday 2023 Effects: சனி உதயமாவதால் மார்ச் 06 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமா இருக்கப் போகுது...
சனி 2023 மார்ச் 06 ஆம் தேதி கும்ப ராசியில் உதயமாகவுள்ளார். கும்பத்தில் உதயமாகும் சனியின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்படும். அந்த தாக்கமானது நல்லதாவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம்.
Saturn Rise In Aquarius on 6 March 2023: நவகிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலனை வழங்குபவர் தான் சனி பகவான். கிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம். இந்த சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நுழைந்தார். அதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே, அதாவது ஜனவரி 30 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமானார்.

கிரகங்கள் அஸ்தமன நிலையில் இருக்கும் போது, அது வழங்கும் நற்பலன்கள் தாமதமாகும் மற்றும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்நிலையில் சனி 2023 மார்ச் 06 ஆம் தேதி கும்ப ராசியில் உதயமாகவுள்ளார். கும்பத்தில் உதயமாகும் சனியின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்படும். அந்த தாக்கமானது நல்லதாவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். இப்போது 2023 மார்ச் 06 ஆம் தேதி கும்ப ராசியில் உதயமாகும் சனியால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்கள் கையில் பணம் அதிகம் சேரும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் மரியாதை இக்காலத்தில் அதிகரிக்கும். வேலையை மாற்ற நினைத்தால், சனி உதயத்திற்கு பின் முயற்சிப்பது நல்லது.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இதுவரை வங்கி, ஆசிரியர் ஆகிய துறைகளில் இருப்பவர்கள் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், சனி உதயத்திற்கு பின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் இக்காலத்தில் முடிவுக்கு வரும் மற்றும் உங்கள் இருவருக்கும் இடையேயான உறவு இன்னும் வலுவாகும். ஒருவேளை உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்தால், அதில் முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இதுவரை நீங்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், சனி உதயத்திற்கு பின் உங்களின் ஆரோக்கியம் மேம்படும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். ஆனால் கடக ராசிக்கு சனி எதிரி கிரகம் என்பதால், இக்காலத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் செய்வதில் இருந்த தடைகள் நீங்கும். ஏற்கனவே திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், சனி உதயத்திற்கு பின் பிரச்சனைகள் நீங்கி, பிணைப்பு அதிகரிக்கும். அதே சமயம் இக்காலத்தில் எதிரிகள் உங்களுக்கு எதிராக பல சதி செய்வார்கள். உங்களின் இமேஜை கெடுக்க முயற்சிப்பார்கள். எனவே உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் கன்னி ராசிக்காரர்களின் குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பணியிடத்தில் உள்ள எதிரிகளால் இதுவரை சிரமத்தை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். குடும்பத்தினருடனான உறவு மென்மையாக இருக்கும். இதுவரை ஆரோக்கியத்தில் அக்கறை காட்டாமல் இருந்தால், இனிமேல் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். மேலும் சனி துலாம் ராசிக்காரர்களுக்கு யோக காரக கிரகம் என்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்குவார். குறிப்பாக குடும்பத்தினருடனான உறவு மேம்படும். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதுவரை படிப்பில் பிரச்சனைகளை சந்தித்து வந்த துலாம் ராசிக்கார மாணவர்கள், சனி உதயத்திற்கு பின் படிப்பில் நன்கு கவனத்தை செலுத்த முடியும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இதுவரை குடும்பத்தில் எதிர்கொண்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும். நீங்கள் இதுவரை சொத்து வாங்க நினைத்து, அதை தள்ளிப் போட்டு வந்தால், சனி உதயத்திற்கு பின் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உடன்பிறந்தவர்களுடன் பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனை ஏதேனும் இருந்தால், அது இந்த காலகட்டத்தில் தீர்க்கப்படும்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் ஏழரை சனியில் இருந்து பெரிய நிவாரணம் கிடைப்பதோடு, தகவல் தொடர்பு திறனானது மிகவும் சிறப்பாக இருக்கும். இதுவரை நீங்கள் நிதி பிரச்சனைகளை சந்தித்து வந்தால் மற்றும் உங்களால் எந்த சேமிப்பும் செய்ய முடியாமல் இருந்தால், சனி உதயத்திற்கு பின் உங்களால் பணத்தை சேமிக்க முடியும் மற்றும் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுடனான உறவு மேம்படும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும் மற்றும் உங்கள் சேமிப்புகள் பெருகும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இதுவரை பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், சனி உதயத்திற்கு பின் ஒரு நிலையான வருமானத்தைப் பெறுவீர்கள். உங்கள் ஆளுமையில் அதிக தாக்கத்தை சனி பகவான் ஏற்படுத்துவார். சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மொத்தத்தில் சனி உதயமானது வாழ்வில் ஒரு நல்ல வளர்ச்சியைத் தரும் என்பதால் உங்கள் முயற்சிகளை மட்டும் கைவிடாதீர்கள்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இக்காலத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் அதை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். எந்த ஒரு செலவை செய்வதாக இருந்தாலும், சிந்தித்து பின்னரே செய்ய வேண்டும். அதேப் போல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











