Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சனி-சந்திர சேர்க்கையால் உருவான விஷ யோகம்: இந்த 3 ராசிக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு... உஷார்..
கும்ப ராசியில் சனி இருக்கும் நிலையில், சந்திரனும் கும்ப ராசிக்கு சென்றதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் விஷ யோகம் உருவானது. விஷ யோகமானது ஒரு அசுப யோகமாக கருதப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவரும், மனித வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவரும் தான் சனி. இவர் ஒரு ராசியை மாற்ற 2 1/2 ஆண்டுகள் ஆகும். இந்த சனி 2023 ஜனவரி 17 ஆம் தேதி தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு சென்றார்.

இந்நிலையில் சந்திரனும் கும்ப ராசிக்கு சென்றுள்ளார். ஏற்கனவே கும்ப ராசியில் சனி இருக்கும் நிலையில், சந்திரனும் கும்ப ராசிக்கு சென்றதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் விஷ யோகம் உருவானது. விஷ யோகமானது ஒரு அசுப யோகமாக கருதப்படுகிறது. இந்த விஷ யோக காலத்தில் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் பல இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போது சனி சந்திர சேர்க்கையால் உருவான விஷ யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் விஷ யோகம் உருவாவதால், கடக ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் எந்த புதிய வேலைகளையும் தொடங்க வேண்டாம். விவாதத்தில் ஈடுபடாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய சண்டை ஏற்படும். வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கு இக்காலம் சாதகமானது அல்ல. இக்காலத்தில் மன அழுத்தம் சற்று அதிகமாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் விஷ யோகம் உருவாவதால், இக்காலத்தில் நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இக்காலகட்டத்தில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஒருவேலை பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், உங்களின் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலதிபராக இருந்தால், இக்காலத்தில் பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் விஷ யோகம் உருவாவதால், மீன ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். இதனால் உங்கள் பட்ஜெட் பாழாகி, நிதி பிரச்சனையில் சிக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் புதிய வேலைகளை தொடங்காதீர்கள். வியாபாரிகள் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். கூட்டு தொழில் செய்ய நினைத்தால், அதை தள்ளிப் போடுங்கள். இக்காலத்தில் தொடங்கினால் பண இழப்பை சந்திப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
