Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
மகர ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கையால் இன்று முதல் யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு துரதிர்ஷ்டம்?
நவகிரகங்களில் செவ்வாய் 2022 பிப்ரவரி 26 ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். ஏற்கனவே மகர ராசியில் புதனும் சனியும் ஒன்றாக பயணித்து வருகின்றனர்.
நவகிரகங்களில் செவ்வாய் 2022 பிப்ரவரி 26 ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். ஏற்கனவே மகர ராசியில் புதனும் சனியும் ஒன்றாக பயணித்து வருகின்றனர். இப்போது மகர ராசியில் புதன், சனி, செவ்வாய் ஆகிய 3 கிரகங்கள் ஒன்றாக பயணிக்கின்றன. ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.

கிரகங்களின் சேர்க்கை நல்ல பலன்களையும் வழங்கலாம், அசுப பலன்களையும் வாங்கலாம். மகர ராசியில் சனி, செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிப்பதால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி, புதன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சனி, புதன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் உங்கள் தாயின் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் வாழ்க்கை குழப்பம் நிறைந்திருக்கும். வியாபாரத்தில் நண்பரின் உதவியைப் பெறக்கூடும்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் சனி, புதன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் தொழில் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. பயணங்களால் நன்மை உண்டாகும். உங்கள் பேச்சின் தாக்கம் அதிகரிக்கும். பணியிடத்தில் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சனி, புதன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உங்கள் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் தந்தையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் சனி, புதன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் உங்களைத் தேடி உங்கள் நண்பர்கள் வரலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லும் வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சனி, புதன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் சனி, புதன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களின் உதவியால் வருமானம் ஈட்டுவீர்கள். திட்டமிடப்படாத செலவுகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் சனி, புதன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். பணியிட மாற்றம் ஏற்பட கூட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் வேலை அதிகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி, புதன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் மன அமைதியைப் பெறுவீர்கள். இருப்பினும் எதிலும் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். வேலை காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடலாம். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் சனி, புதன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் கல்வி பணிகள் மேம்படும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் மகிழ்ச்சியான முடிவுகள் இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் நன்மை தரும்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் சனி, புதன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் நிதானமாக இருங்கள். தொழில் காரணமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புக்கள் உண்டு. வியாபாரிகள் லாபங்களைப் பெறலாம். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி, புதன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் ஆதரவு கிடைக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தை மேம்படுத்த உடன்பிறப்புக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
