Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்!
குரு-சனி உருவாக்கும் அகண்ட சாம்ராஜ்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
மிகவும் மங்களகரமான மற்றும் ஒருவரது வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தைத் தரக்கூடிய ஒரு யோகம் தான் அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம். இந்த அரிய யோகமானது குரு மற்றும் சனியினால் உருவாகவுள்ளது.
கிரகங்கள் மற்றம் நட்சத்திரங்களின் இயக்கங்கள் தான் யோகம் மற்றும் தோஷங்கள் உருவாவதற்கு காரணங்களாகும். ஒருவரது ஜாதகத்தில் மங்களகரமான சுப யோகம் உருவானால், அந்நபர் புகழ் மற்றும் வெற்றியின் உச்சியை அடைவார். அதேப் போல் ஒருவரது ஜாதகத்தில் தோஷங்கள் உருவானால், அந்நபர் பல சவால்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

அந்த வகையில் மிகவும் மங்களகரமான மற்றும் ஒருவரது வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தைத் தரக்கூடிய ஒரு யோகம் தான் அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம். இந்த அரிய யோகமானது குரு மற்றும் சனியினால் உருவாகவுள்ளது. மேலும் இந்த யோகத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாக இருக்கப் போகிறது மற்றும் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படப் போகிறது.

அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் எப்படி உருவாகிறது?
எப்போது ஒரு கிரகம் நீண்ட காலத்திற்கு 2 ஆவது மற்றும் 11 ஆவது வீடுகளான செல்வத்தின் வீட்டிற்கு செல்கிறதோ, அப்போது அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகமானது உருவாகிறது. வேத ஜோதிடத்தில், இந்த யோகம் நற்பலன்களை வாரி வழங்கும் அற்புதமான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கத்தால், சில ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதோடு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

2023 குருப் பெயர்ச்சி எப்போது?
ஏற்கனவே 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். அதைத் தொடர்ந்து மீன ராசியில் பயணித்து வரும் குரு பகவான், நட்புறவு கொண்ட செவ்வாயின் ராசியான மேஷ ராசிக்கு செல்லவிருக்கிறார். இந்த குரு பெயர்ச்சியானது 2023 ஏப்ரல் 22 ஆம் தேதி அதிகாலை 03.33 மணிக்கு நிகழ்கிறது. இந்த குரு பெயர்ச்சிக்கு பின் அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இப்போது இந்த யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகமானது ஏராளமான நற்பலன்களை வழங்கவுள்ளது. குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் திடீரென்று நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் இந்த யோக காலத்தில் தங்கள் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பங்கு சந்தையில் இருப்பவர்கள், நல்ல நிதி வருமனத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோக காலத்தில் பணப்பிரச்சனைகள் நீங்கி, நல்ல பண பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் பரம்பரை சொத்துக்களில் இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அப்பிரச்சனை நீங்கி, விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறலாம். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகமானது நல்ல செழிப்பைத் தரும். பண வரவு அதிகரிக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
