Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சனியும், சந்திரனும் உருவாக்கும் விஷ யோகத்தால் இந்த ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் மகர ராசியில் உருவான விஷ யோகத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது தங்களின் ராசியை மாற்றிக் கொண்டிருக்கும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில கிரகங்களுடன் சேரும் போது அது சுப, அசுப யோகங்களை உருவாக்கும். அந்த வகையில் அக்டோபர் 23 ஆம் தேதி சனி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 31 ஆம் தேதி சந்திரன் மகர ராசிக்குள் நுழைந்தார். அதனால் மகர ராசியில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவானது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, விஷ யோகம் மங்களகரமானதாக கருதப்படவில்லை. மகர ராசியில் விஷ யோகம் உருவாகியிருப்பது சில ராசிக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இப்போது சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் மகர ராசியில் உருவான விஷ யோகத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்
விஷ யோகமானது மிதுன ராசிக்காரங்களுக்கு தீங்கை விளைவிக்கும். ஏனெனில் இந்த யோகமானது மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க வேண்டாம். பணியிடத்தில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது மற்றும் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அதைத் திரும்ப பெறுவது கடினம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு விஷ யோக காலமானது சற்று வேதனை நிறைந்ததாக இருக்கும். ஏனெனில் இந்த யோகமானது சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. எனவே இந்த காலத்தில் உங்கள் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகள் பண பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் வணிகம் தொடர்பான பயணம் மேற்கொள்ள நினைத்தால், அதை சற்று தள்ளிப் போடுங்கள். இந்த காலக்கட்டத்தில் வியாபாரம் சற்று மந்தமாகவே இருக்கும். உங்கள் தாயுடனான உறவு மோசமடையலாம்.

கும்பம்
விஷ யோகமானது கும்ப ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை அதிகம் உருவாக்கும். ஏனென்றால் இந்த யோகம் கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இது பணம் மற்றும் பேச்சு ஆகியவற்றின் வீடாகும். எனவே இந்த காலத்தில் பண இழப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். மேலும் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை பயணம் மேற்கொள்வதாக இருந்தால் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வியாபாரம் மற்றும் வணிகத்தில் லாபம் குறைவாகவே இருக்கும். இக்காலத்தில் எதிர்மறை பலன்களைக் குறைக்க சிவபெருமானை மனதார வணங்குங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications