Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சனி-புதன் வக்ர நிவர்த்தி: அக்டோபரில் இருந்து இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பிக்குது...
வக்ரமாக இருக்கும் சனி மற்றும் புதனால் நிறைய ராசிக்காரர்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆனால் அக்டோபரில் இருந்து இந்நிலை மாறப்போகிறது.
ஜோதிடத்தின் படி, அக்டோபர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் வக்ரமாக இருக்கும் புதன் மற்றும் சனி அக்டோபர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையில் பயணிக்கவுள்ளன. இதில் சனி பகவான் நீதிமான், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை வழங்கக்கூடியவர். புதன் புத்திகாரகன் மற்றும் கிரகங்களின் இளவரசன் ஆவார்.

பொதுவாக கிரகங்கள் வக்ரமாக இருக்கும் போது, நற்பலனை விட கெடுபலன்களே அதிகம் கிடைக்கும். அதுவும் வக்ரமாக இருக்கும் சனி மற்றும் புதனால் நிறைய ராசிக்காரர்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆனால் அக்டோபரில் இருந்து இந்நிலை மாறப்போகிறது. ஏனெனில் புதன் மற்றும் சனி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்கவுள்ளன. இதனால் 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பிக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
சனி மற்றும் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் வழக்கத்தை விட மிகவும் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக வியாபாரம் செய்யும் மேஷ ராசிக்காரர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். அதோடு, நீண்ட நாட்களாக வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இம்மாதத்தில் ஒரு நல்ல வேலை கிடைக்கும்.

ரிஷபம்
அக்டோபரில் சனி, புதன் ஆகிய இரண்டு கிரகங்களின் வக்ர நிவர்த்தியால் ரிஷப ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலனைப் பெறுவார்கள். முக்கியமாக சனி வக்ர நிவர்த்திக்கு பின் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். அதுவும் சமூகத்தில் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

மிதுனம்
சனி, புதன் கிரகங்களின் வக்ர நிவர்த்தியால் மிதுன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் புதன், சனி வக்ர நிவர்த்தியால் மிகுந்த நற்பலனைப் பெறுவார்கள். தீபாவளி முதல் இவர்களிடம் செல்வம் அதிகம் சேரும். வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். நீண்ட நாட்களாக வேலை தேடி கிடைக்காத தனுசு ராசிக்காரர்களுக்கு, இம்மாதத்தில் ஒரு நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications