Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
புதனின் அருளால் புத்தாண்டு இந்த 4 ராசிக்கு ரொம்பவும் ஸ்பெஷலா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்டின் இறுதியில் நடைபெறும் வக்ர புதன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக இருக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
Retrograde Mercury Transit In Sagittarius: 2022 ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் உள்ளோம். இந்த கடைசி வாரத்தில் 3 கிரக பெயர்ச்சிகள் நிகழ்கின்றன. அதில் டிசம்பர் 28 ஆம் தேதி புதன் மகர ராசிக்கு செல்கிறார். பின் டிசம்பர் 29 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசிக்கு செல்கிறார். ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி புதன் வக்ர நிலையில் தனுசு ராசிக்கு செல்கிறார். இதனால் கடைசி வாரத்தில் பல ராசிக்காரர்கள் பலவிதமான பலன்களைப் பெறவுள்ளார்கள்.

குறிப்பாக 2022 டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 12.58 மணிக்கு புத்திகாரகனான புதன் வக்ர நிலையில் தனுசு ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து தெரியும். பொதுவாக கிரகங்கள் வக்ரமாகும் போது, அதன் நற்பலன்கள் தாமதமாகும் மற்றும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் ஆண்டின் இறுதியில் நடைபெறும் வக்ர புதன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக இருக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
வக்ர புதன் பெயர்ச்சியால் 2023 புத்தாண்டின் தொடக்கத்தில் மேஷ ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் பணியால் பாராட்டைப் பெறுவார்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வேலைகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்காது. எளிதில் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். பண பரிவர்த்தனைகளுக்கு சிறந்த காலம் இது. முதலீடு செய்வதற்கும் உகந்த காலம். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.

விருச்சிகம்
வக்ர புதன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். மொத்தத்தில் இந்த காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும்.

தனுசு
2023 ஆம் ஆண்டின் தொடக்கமானது வக்ர புதன் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். பணத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். உங்களின் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடு செய்வதற்கு உகந்த காலம். ஏனெனில் இக்காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
