Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
30 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரி அன்று உருவாகும் அபூர்வ யோகம்: இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கும்...
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்தசி திதியில் வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு மகா சிவராத்திரியானது 2023 பிப்ரவரி 18 ஆம் தேதி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்தசி திதியில் வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரியானது 2023 பிப்ரவரி 18 ஆம் தேதி வருகிறது. இந்த ஆண்டில் வரும் மகா சிவராத்திரியில் இரண்டு சிறப்பான அம்சங்கள் உள்ளன. அதில் ஒன்று இந்த மகா சிவராத்திரி நாளில் தான் சனி பிரதோஷமும் வருகிறது. மற்றொன்று, இந்த சிவராத்திரியில் ஒரு அபூர்வ யோகம் உருவாகிறது. இந்த இரண்டின் காரணமாக, வருகிற மகா சிவராத்திரி இன்னமும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மகா சிவராத்திரி நாளில் சிவபெருமான் தனது பக்தர்களுக்கு எல்லையற்ற ஆசியை வழங்குவார். மேலும் இந்த நாளில் விரதமிருந்து சிவனை வழிபடும் போது, சிவனின் அருளால் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதுவும் ராசிக்கேற்ப சிவனை வழிபட்டு வந்தால், இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

சனி-சூரிய சேர்க்கை
வருகிற மகா சிவராத்திரி நாளில், 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அபூர்வமான நிகழ்வு நடைபெறவுள்ளது. அது தான் கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய சேர்க்கை நிகழ்ந்திருப்பது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் பல ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறப் போகிறார்கள். மேலும் சிவராத்திரியில் இவ்விரு கிரகங்களும் சேர்ந்திருப்பதால், சிவனின் அருளால் மகிழ்ச்சியும், செழிப்பும் பெருகும்.
இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் சனி-சூரியன் சேர்ந்திருப்பதால், எந்தெந்த ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசி அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மகா சிவராத்திரியில் இருந்து நன்றாக இருக்கப் போகிறது. சிவனின் அருளால் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தின் நிலை மேம்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரியில் இருந்து பொற்காலம் தொடங்கப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் சிவராத்திரி நாளில் சிவனை விரமிருந்து வழிபட்டால், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் குடும்பத்தின் நிலை உயரும். செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்
மகா சிவராத்திரியில் சனி-சூரியன் இணைந்திருப்பதால் கும்ப ராசிக்காரர்கள் சிவனின் அருளால் நல்ல வெற்றியைக் காண்பார்கள். சிவராத்திரியில் இருந்து அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications