Latest Updates
-
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
முட்டையை வைச்சு இந்த மாதிரி மசாலா கீமா பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம் -
காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..!
Ram Navami 2023: ராமர் மட்டும் ஏன் ஏகபத்தினி விரதனாக கொண்டாடப்படுகிறார் தெரியுமா?
Ram Navami 2023: ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஏகபத்தினி விரதனாக கொண்டாடப்படுகிறார். மன்னர்கள் பல மனைவிகளை மணப்பார்கள். பல தாரங்களை மணக்கும் ராஜ வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஒரே தாரத்தை போற்றும் அவதாரமாக இருப்பதால், ராமர் ஓர் இல்லுக்குச் சொந்தக்காரர் ஆனார்.
தன்னை சரணம் என்று வந்தோர்க்கு அபயம் என்ற வாக்கு ஒரு சொல்! ஜென்மம் முழுவதும் இணைந்து வாழ ஒரு மனைவி ஒரு இல்!, துஷ்டர்களுக்கு ஒரே பாணம் ஒரு வில்!. ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் ஸ்ரீ ராமரின் பெருமைகளை அறிந்து கொள்வோம்.

சீதாதேவியை மீட்க ராவணனுடன் போரிட்டு, அவனை கொன்ற பின்பு, போர் புரிந்த அசதியில், ஒரு பாறையின் மீது கால்களை நீட்டிக்கொண்டு ஆழ்ந்த யோசனையோடு அமர்ந்திருந்தார் ஸ்ரீ ராமர் . அப்போது அவரை பார்க்க மண்டோதரி வந்தார். அவரிடம் ஸ்ரீராமபிரான், எதற்காக பார்க்க வந்தீர்கள் தாயே என்று மீண்டும் கேட்டார்.
அதற்கு மண்டோதரி, என் கணவரை வெல்வதற்கு மூவுலகிலும் யாரும் பிறக்கவில்லை. சர்வ வல்லமை படைத்த என் கணவரையே வென்ற உங்களுக்கு அப்படி என்ன பெரிதாக சிறப்பு இருக்கப்போகிறது, என்று பார்க்க வந்தேன், அவ்வளவு தான் என்று மண்டோதரி பதிலளித்தார். பார்த்துவிட்டீர்களா தாயே, என்று ஸ்ரீராமபிரான் கேட்க, அதற்கு மண்டோதரி, பார்த்தேன், என் நிழல் கூட உங்கள் மீது படக்கூடாது என்பதற்காக நீட்டியிருந்த கால்களை சட்டென்று மடக்கி உட்கார்ந்தபோதே, உங்களைப் பற்றி நான் முழுமையாக தெரிந்துகொண்டேன், என்றார்.
சூரிய குலத் தோன்றலாக அறுபதாயிரம் மனைவியரோடு வாழ்க்கை நடத்திய தசரத சக்கரவர்த்தி திருமகனாக அவதரித்தாலும், தான் கடவுளாக இருந்தாலும் கூட, மனிதப் பிறவி எடுத்த காரணத்தால், கட்டிய மனைவியைத் தவிர வேறு ஓரு பெண்ணை மனதால் கூட ஏறெடுத்தும் பாரக்காமல் ஏகபத்தினி விரதனாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராம பிரான்.
மற்ற கடவுள்கள் எல்லாம் ஒன்றுக்கு இரண்டு மனைவியரோடு இருக்க, ஸ்ரீராம பிரான் மட்டும் அன்னை சீதாதேவியோடு வாழ்ந்தவர். எத்தனையோ பெண்கள் ஸ்ரீராம பிரானை அடைய நினைத்தாலும் அதற்கு சந்தர்ப்பமே கொடுக்காமல் வாழ்ந்தவர்.

ராமர் சீதை
இப்பூவுலகில் மனிதராக பிறந்தவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், ஆட்சியை வழிநடத்திச் செல்லும் மன்னன் என்பவன் மக்களையும், ஆட்சியையும் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமபிரான். அன்னை சீதாதேவியை ராவணன் கடத்திச் சென்ற பின்பு, அவரை பிரிந்து சோகத்தில் இருந்தபோதும், அன்னை சீதாதேவியை மட்டுமே மனதில் நினைத்து வாழ்ந்து வந்தவர்.

ராவணனுடன் போர்
சீதாதேவியை மீட்க ராவணனுடன் போரிட்டு, அவனை கொன்ற பின்பு, போர் புரிந்த அசதியில், ஒரு பாறையின் மீது கால்களை நீட்டிக்கொண்டு ஆழ்ந்த யோசனையோடு அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் அவருடைய கால்களின் மீது ஒரு நிழல் விழந்தது. அந்த நிழல் ஒரு பெண் நிழல் என்று உணர்ந்த உடனேயே, சடாரென்று தன்னுடைய கால்களை மடக்கி சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டார். வந்தது யார் என்று ஸ்ரீராமபிரான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

ஸ்ரீராவணன் மனைவி
வந்த பெண்ணும் ஸ்ரீராமபிரானிடம் எதுவும் பேசாமல் திரும்பிச் சென்றுவிட்டார். ஸ்ரீராமரோ அந்த பெண்ணை பார்க்காமலேயே, தாயே யார் நீங்கள், என்று கேட்டார். அதற்கு அந்த பெண்மணி, நான் தான் மண்டோதரி, உங்களால் கொல்லப்பட்ட ராவணேஸ்வரனின் மனைவி என்று பதலளித்தார். உடனே, ஸ்ரீராமர், என்னை எதற்காக பார்க்க வந்தீர்கள் தாயே என்று மீண்டும் கேட்டார். அதற்கு மண்டோதரி,

ஸ்ரீ ராமரின் சிறப்பு
என் கணவரை வெல்வதற்கு மூவுலகிலும் யாரும் பிறக்கவில்லை. சர்வ வல்லமை படைத்த என் கணவரையே வென்ற உங்களுக்கு அப்படி என்ன பெரிதாக சிறப்பு இருக்கப்போகிறது, என்று பார்க்க வந்தேன், அவ்வளவு தான் என்று மண்டோதரி பதிலளித்தார். பார்த்துவிட்டீர்களா தாயே, என்று ஸ்ரீராமபிரான் கேட்க, அதற்கு மண்டோதரி, பார்த்தேன், என் நிழல் கூட உங்கள் மீது படக்கூடாது என்பதற்காக நீட்டியிருந்த கால்களை சட்டென்று மடக்கி உட்கார்ந்தபோதே, உங்களைப் பற்றி நான் முழுமையாக தெரிந்துகொண்டேன், என்றார்.

ராமருக்கும் ராவணனுக்கும் வித்தியாசம்
அதற்கு ஸ்ரீராம பிரான், எப்படி புரிந்துகொண்டீர்கள் தாயே என்று கேட்டார். அதற்கு மண்டோதரி, உங்கள் மனைவி சீதாதேவியின் நிழலை தவிர்த்து வேறு பெண்களின் நிழலைக் கூட உங்களை நெருங்க விடாதவர் என்று புரிந்து கொண்டான் என்று பதிலளித்தார். அதனால் என்ன தாயே என்று கேட்டார் ஸ்ரீராமபிரான். அதற்கு மண்டோதரி, என் கணவர் ராவணனோ, போரில் தோற்கடித்த ஆண்களின் மனைவிகளை உடனேயே தன் நிழலில் கொண்டு வருபவர். அது தான் உங்களுக்கும் என் கணவருக்கும் இடையில் உள்ள வித்தியாசம், என்று கூறிவிட்டு, ஸ்ரீராமபிரானின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் திரும்பி சென்றுவிட்டார். அது தான் ஸ்ரீராம பிரானின் சிறப்பு.

நவீன ஆண்கள்
சமீபத்தில் சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ பதிவு வந்திருந்தது. அதில், ஒரு பெண் நீச்சல் குளத்தின் அருகில் நீச்சல் உடையில் குப்புற படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், வெயிலில் கைகள் இரண்டையும் நீட்டிக்கொண்டு காற்றில் அருவருக்கத்தக்க வகையில் சைகை செய்து கொண்டிருக்கிறார். அந்த கைகளின் நிழல் நீண்டு சரியாக படுத்திருந்த பெண்ணின் பின்புறத்தை மேய்ந்து கொண்டிருந்தது. அது தான் இன்றைய ஆண்கள்.

சந்தர்ப்பம் கிடைக்கும் வரை ஸ்ரீராமர்தான்
இன்றைய நவீன யுகத்தில், சந்தர்ப்பம் கிடைக்காத வரையிலும், ஆண்கள் பெரும்பாலானவர்கள் யோக்கிய சிகாமணிகள் தான். ஆனால், சந்தர்ப்பம் கிடைத்தால், கிடைத்த கேப்பிலேயே கிடா வெட்டி பொங்கல் வைக்கும் அளவுக்கு மிக மிக நல்லவர்கள். இந்த கசப்பான உண்மையை ஆண்கள் யாருமே மறைக்கவோ மறுக்க முடியாது. வெகு சிலர் மட்டுமே கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பயந்து, வாழ்ந்து வருபவர்கள். இன்னும் சிலர் கட்டிய மனைவிக்கு பயந்தே தப்பு தண்டா செய்யாமல் பயந்து வாழ்ந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications