Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
2023-ல் மீனம் செல்லும் ராகுவால் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும்..
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராகு மேஷ ராசியில் தான் இருப்பார். ஆனால் 2023 அக்டோபர் 30 ஆம் தேதி மதியம் 2.13 மணிக்கு ராகு மேஷ ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு செல்லவுள்ளார்.
நவகிரகங்களில் ராகு ஒரு நிழல் கிரகம். ராகுவிற்கு என்று தனி ராசி எதுவும் இல்லை. மேலும் ராகு எப்போதும் வக்ர நிலையில், அதாவது பின்னோக்கி நகரும். ராகு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல எடுத்துக் கொள்ளும் காலம் ஒன்றரை ஆண்டுகள், அதாவது 18 மாதங்கள் ஆகும். மேலும் ராகு சனியைப் போன்றே பலன்களைத் தரக்கூடியது.

இந்த ராகு தற்போது செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராகு மேஷ ராசியில் தான் இருப்பார். ஆனால் 2023 அக்டோபர் 30 ஆம் தேதி மதியம் 2.13 மணிக்கு ராகு மேஷ ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு செல்லவுள்ளார். இந்த ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். எனவே இப்பெயர்ச்சிக்கு பின் மேஷ ராசிக்காரர்கள் சில விஷயங்களில் முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அவசரமாக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் சதித்திட்டங்களுக்கு பலியாக வாய்ப்புள்ளது. மற்றவர்களுடன் சண்டைகள் அல்லது சச்சரவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனா இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கலாம். இதனால் உங்களின் பட்ஜட் பாதிக்கப்படும். வருமானம் குறைவாக இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் முடிவடைவதில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ராகு மன உளைச்சலை ஏற்படுத்துவார்.

மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தல் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் மோசமடையும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். முக்கியமாக ரகசிய எதிரிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு ராகு செல்கிறார். எனவே மீன ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது. மேலும் புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதை செய்யாதீர்கள். இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications