Just In
- 14 hrs ago
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- 15 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் கொடூரமான பாலியல் ஆசைகள்... இப்படிலாம் கூடவா ஆசைப்படுவாங்க...!
- 19 hrs ago
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- 20 hrs ago
இன்றைய ராசிப்பலன் (24.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டணும்…
Don't Miss
- News
சசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Movies
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 2 பொருளை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால், பணம் அதிகம் சேரும் தெரியுமா?
தற்போது மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடத்துடன், பணமும் சேர்ந்துவிட்டது. நம்முடைய தேவையை பூர்த்தி செய்வதற்கு பணம் மிகவும் இன்றியமையாதது. எனவே நாம் அனைவரும் பணம் சம்பாதிப்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பணம் சம்பாதித்தால் மட்டும் போதுமா? சம்பாதிக்கும் பணம் நம்மிடம் நிலைத்து இருக்க வேண்டும் அல்லவா? அதற்கு என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம்.
ஆன்மீக சூட்சம விதியின் படி, நம் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் ஒருசில பொருட்களை சேர்த்து வைக்கும் போது பணம் அதிகம் சேரும். பொதுவாக நல்ல மணம் நிறைந்த இடத்தில் மகாலட்சுமி எப்போதும் நிலைத்திருப்பாள் என்பது ஐதீகம். இத்தகைய மணம் நிறைந்த பொருட்கள் பல உள்ளன. ஆனால் அதில் முக்கியமான இரண்டு பொருட்களை பணம் வைக்கும் இடத்தில் வைக்கும் போது, பணம் அதிகம் சேரும். இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.
MOST READ: புரட்டாசி மாசத்துல இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் நீங்களும் குபேரன் தான்...

பச்சை கற்பூரம்
நம் அனைவருமே பச்சை கற்பூரம் பணத்தை ஈர்க்கும் என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவ்வளவு பணம் சேர்கிறதே அது எப்படி தெரியுமா? திருப்பதியில் கொடுக்கப்படும் லட்டு, தீர்த்தம் என அனைத்திலுமே பச்சை கற்பூரம் சேர்க்கப்படுகிறது. இந்த காரணத்தினால் கூட அங்கு பணம் சேரலாம் என்றும் கூறப்படுகிறது.

பணத்தை ஈர்ப்பது என்றால் என்ன?
பணத்தை ஈர்ப்பது என்பது நீங்கள் சம்பாதிக்கும் பணம் வீண் செலவு ஆகாமல் உங்களிடம் தங்குவது. அதோடு மேன்மேலும் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைப்பது மற்றும் உங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமாகாமல் உடனே கிடைப்பது. முக்கியமாக உங்களை நோக்கி அடிக்கவிக்கும் அதிர்ஷ்டம் தடையின்றி கிடைப்பது ஆகும்.
இப்போது பணத்தை ஈர்க்க உதவும் அந்த இரண்டு பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.

மாதுளை குச்சி மற்றும் மல்லிகை
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை வீட்டின் தென்மேற்கு திசையில், வடக்கு திசையை நோக்கி வைப்பது மிகவும் நல்லது. அதோடு நீங்கள் பணம் வைக்கும் போது, அத்துடன் ஒரு சிறிய துண்டு மாதுளை குச்சியையும் வையுங்கள். அதனுடன் சிறிது மணம் நிறைந்த மல்லிகை பூவையும் வையுங்கள்.

மல்லிகை
பூக்களில் மிகவும் வாசனை நிறைந்த பூ என்றால் அது மல்லிகை தான். நல்ல மணமுள்ள மல்லிகைப் பூ மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த மலராகும். இந்த மல்லிகையை பணத்துடன் சேர்த்து வைக்கும் போது, அங்கு பணம் குறையாமல் அதிகம் சேர்ந்து கொண்டே இருக்குமாம்.

மாதுளை குச்சி
மாதுளையின் குச்சி மகாலட்சுமி அம்சம் பொருந்தியது என்று கூறுவார்கள். எனவே மாதுளை மரத்தில் இருந்து சிறு குச்சியை உடைத்து வந்து, வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள் .இதனால் பணம் வைக்கும் இடத்தில் பணம் பெருகும் சக்தி அதிகரிக்கும்.

மாதுளை மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?
உங்கள் வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமென்று நினைத்தால், மாதுளை மரத்தை வளர்ப்பது நல்லது. அதேப் போல் நெல்லிக்காய் மரத்தையும் வளர்ப்பது மிகவும் நல்லது. இரண்டு இரண்டு மரங்களிலும் மகாலட்சுமி குடியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. மாதுளை ஒருவரது உடலில் இரத்த அளவை அதிகரிக்கக்கூடியது மட்டுமல்ல, நம் வீட்டில் பணச் சேர்க்கையையும் அதிகரிக்க கூடியது என்று கூறலாம்.

நகை அதிகம் சேர வேண்டுமா?
மாதுளை குச்சி பணம் அதிகம் சேர மட்டுமின்றி, நகைகளையும் அதிகம் சேர வைக்கும். அதற்கு நீங்கள் நகை வைக்கும் பெட்டியில் மாதுளை குச்சியை மட்டும் வையுங்கள். இதனால் நகை அதிகம் சேர்வதோடு, நகைகளை விற்கும் நிலைமை வராது. அந்த அளவிற்கு மாதுளை குச்சிக்கு தெய்வீக சக்தி உள்ளது. எனவே இவற்றை நம்பிக்கையுடன் மேற்கொள்ளுங்கள், நிச்சயம் நல்ல பலனைத் தரும்.