Latest Updates
-
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டு இந்தியாவில் இன்றும் விற்கப்படும் பொருட்கள்!
இந்தியாவில் விற்கப்படும் பல பொருட்கள் வெளிநாடுகளில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளன என்பது தெரியுமா? ஆம், ஏனெனில் அந்த பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தடைசெய்துள்ளனர்.
நாம் அனைவருமே கடைகளில் விற்கப்படும் பொருட்கள் அனைத்துமே உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியவை என்று தான் நினைப்போம். ஆனால் இந்தியாவில் விற்கப்படும் பல பொருட்கள் வெளிநாடுகளில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளன என்பது தெரியுமா? ஆம், ஏனெனில் அந்த பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தடைசெய்துள்ளனர்.
அப்படி வெளிநாட்டில் தடைசெய்யப்பட்டு இந்தியாவில் இன்று வரை விற்கப்பட்டு வரும் பொருட்கள் எவையென்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். ஆகவே நாங்கள் அந்த பொருட்கள் எவை என்பதை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

தேன்
டாபர், ஹிமாலயா போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளின் தேன் மாசுபட்டது என்று 2010 ஆம் ஆண்டு வெளியான தி ஹிந்துவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிராண்டுகளின் தேன்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் 10-க்கும் மேற்பட்ட மாதிரிகளில் மிகவும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இருப்பது கண்டறிப்பட்டன. இருப்பினும், இன்றும் இந்தியாவில் இந்த பிராண்டு தேன்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேனை வெளிநாடுகளில் விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ச்யவன்பிரஷ்
தினமும் காலை ச்யவன்பிரஷ் சாப்பிடுவது நன்மையை விட தீங்கு தான் விளைவிக்கும். கனடா அரசு 2005 ஆம் ஆண்டு இந்த ச்யவன்பிரஷ் விற்பனையை தடை செய்தது. ஏனெனில் இதில் ஈயம் மற்றும் பாதரசம் அதிகம் இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள்
ஆம், சில மருந்துகளும் இந்தியாவில் விற்கப்படுகின்றன. அதுவும், D-Cold, Vicks Action 500, Enteroquinol, Analgin, Syspride போன்ற பல மருந்துகள் இந்தியாவிற்கு வெளியே பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இதில் விக்ஸ் ஆக்ஷன் 500 இந்தியாவில் குறுகிய காலத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் அதன் விற்பனை தொடங்கிவிட்டது.

பூச்சிக்கொல்லிகள்
இந்தியாவில் விற்கப்படும் சுமார் 70 வகையான பூச்சிக்கொல்லி பொருட்கள் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டவையாகும். இதில் பெரும்பானா பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கமிட்டி வழங்கியது. சில பூச்சிக்கொல்லிகளை மிதமானதாக பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.

ஹல்டிராம்ஸ்
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்த நிர்வாகம் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹல்திராம் தின்பண்டங்களை விற்பனை செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்துள்ளது. இந்த பிராண்ட்டைச் சேர்ந்த பிஸ்கட், வேஃபர் மற்றும் குக்கீகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்த நிர்வாகம் ஹல்டிராமின் தயாரிப்புகளை "அசுத்தமான, அழுகிய அல்லது சிதைந்த அல்லது நுகர்வுக்கு தகுதியற்றவை" என்று குறிப்பிட்டனர்.

பெயரில்லாத ஸ்நாக்ஸ்கள்
குஜராத்தில் தயாரிக்கப்படும் பெயரில்லாத ஸ்நாக்ஸ் தயாரிப்பாளருக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இது விற்கப்படுகிறது. இந்த பெயரில்லாத ஸ்நாக்ஸானது ஹல்திராமின் தயாரிப்புகளை தடைசெய்வதற்கு கொடுக்கப்பட்ட அதே காரணம் கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெய்
அமெரிக்காவில் நெய் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் பெரும்பாலும் பருப்பு சாதம், சப்பாத்தி போன்றவற்றிற்கு நெய் சேர்த்து உண்பார்கள். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களால் இம்மாதிரி சாப்பிட முடியாது. ஏனெனில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நெய்யை தடை செய்துள்ளது. இதற்கு நெய் பாட்டிலில் இதில் உள்ள உட்பொருட்கள் எதுவும் குறிப்பிடப்படாதது தான் காரணம்.

லைஃப்பாய் சோப்பு
இந்த வகை சோப்புகள் சருமத்திற்கு மோசமானதாக கருதப்படுகிறது. மேலும் இந்த வகை சோப்புகள் விலங்குகளை சுத்தம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த சோப்புக்களை இந்தியாவில் மனிதர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஜெல்லி மிட்டாய்கள்
அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஜெல்லி மிட்டாய்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் இவை குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக தெரிகிறது. மேலும் இதுப்போன்ற வழக்குகளும் உள்ளன. ஆனால் இந்த ஆபத்தான ஜெல்லி மிட்டாய்கள் இந்தியாவில் எளிதில் கிடைக்கின்றன.



Click it and Unblock the Notifications
