Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
மகாளய பட்சம் 2022: படையல் உணவு சமைக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்...
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் பவுர்ணமி பிறகு வரும் பிரதமைத் தொடங்கி புரட்டாசி மாத அமாவாசை வரை மகாளய பட்ச காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு, செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 25 வரை, மகாளய பட்ச காலமாகும்.
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள் மகாளய பட்ச/பித்ரு பட்ச காலமாக கருதப்படுகிறது. அதாவது, மகாளய பட்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதமாகும் இந்த 15 நாட்களும் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நாட்களாக விளங்குகிறது. இந்த ஆண்டு, செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 25 வரை, மகாளய பட்ச காலமாகும்.

நமது பித்ருகளுக்கு இவ்வாறு தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை. அது மட்டுமின்றி, இந்த 15 நாட்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, படையல் வைத்து, பிறருக்கு அன்னதானம் வழங்குவதன் மூலம் முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றிடலாம் என்று நம்பப்படுகிறது. பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மகாளய பட்ச காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெறலாம்.
ஆனால், அந்த படையலுக்கான உணவை தயாரிக்கும் போது சில குறிப்பிட்ட விஷயங்களை கவனிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் முன்னோரிகளின் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே, இந்த மகாளய பட்ச காலத்தில் சமைக்கப்படும் படையல் உணவை சமைப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம் ...

எந்த திசை பார்த்து சமைக்க வேண்டும்?
படையல் உணவு தயாரிக்கும் போது, சமைப்பவரின் முகம் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். இதிலும் குறிப்பாக, படையல் உணவை எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கியவாறு நின்று சமைக்கவே கூடாது. ஆம், உங்கள் வீட்டின் சமையலறை எந்த திசையில் வேண்டுமானால் இருக்கட்டும். ஆனால் உணவு சமைக்கும் போது, உங்கள் முகம் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

படையலில் பாயாசத்தின் முக்கியத்துவம்
படையல் உணவில் பாயாசம் இடம் பெற்றிருக்க வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பண்டிதர்களின் கூற்றுப்படி, எந்தவொரு சுப நிகழ்வுகளிலும் பாசாயம் என்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது. பிராமணர்கள் அதனை உண்பதன் மூலம் முழு திருப்தி அடைகிறார்கள். இதனால், முன்னோர்களின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற முடியும். கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் கூட பாயாசத்தை மிகவும் விரும்புகிறார்கள் என்று நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சிறப்பு வேலைகளிலும் பாயாசம் தயாரித்தல் மங்களகரமானதாகும். பாயாசத்தை தயாரிக்க எப்போதும் பசும் பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இது தவிர, பால், தயிர், நெய் என படையல் உணவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்துமே பசுவில் இருந்து பெறப்பட்டதாகவே இருக்க வேண்டும். ஒருபோதும், எருமை மாட்டின் பாலையோ, அதிலிருந்து பெறப்பட்ட பொருட்களையே பயன்படுத்தவே கூடாது.

கல் உப்பு
படையல் உணவு மிகவும் தூய்மையாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், தூள் உப்பிற்கு பதிலாக கல் உப்பை பயன்படுத்தி மட்டுமே உணவை தயாரிக்க வேண்டும். ஆயுர்வேதம் கூறுவது என்னவென்றால், கல் உப்பை தினமும் சாப்பிட வேண்டும் என்பதாகும். உண்மையில், இது ரசாயனம் இல்லாததாகவும் மிகவும் தூய்மையாகவும் கருதப்படுகிறது. எனவே, படையல் உணவை கல் உப்பு பயன்படுத்தி மட்டுமே தயாரிக்க வேண்டும். மேலும், இது முதலில் பிராமணர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனால் இதைச் செய்யும் போது உப்பு சரியாக உள்ளதா என ருசி பார்த்து சமைக்கவே கூடாது. எனவே சரியான அளவில் உப்பு சேர்ப்பதில் கவனமாக இருக்கவும்.

சமைக்கும் போது செருப்பு அணியக்கூடாது
இந்து மத நம்பிக்கைகளின் அடிப்படியில், படையல் உணவு தயாரிக்கும்போது செருப்பு அணியவே கூடாது. மரம் மிகவும் தூய்மையானதாக கருதப்படுவதால், மரத்தினால் செய்யப்பட்ட செருப்புகளை இந்த சமயத்தில் அணியலாம்.

பூண்டு மற்றும் வெங்காயத்தைப் பயன்படுத்தக் கூடாது
ஆயுர்வேதத்தின் அடிப்படையில் பூண்டு மற்றும் வெங்காயம் விரும்பத்தகாத, துர்நாற்றம் வீசக்கூடிய உணவாக கருதப்படுகிறது. எனவே தான் தர்ப்பண நாளில் தயாரிக்கப்டும் படையல் உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தர்ப்பண நாளில் பால் மற்றும் நெய்யால் தயாரிக்கப்பட்ட பருப்பு உணவுகள், அரிசி பாயாசம், பருவகால காய்கறிகளான வாழைப்பழம், பூசணி, சுரைக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை பயன்படுத்தி உணவை தயார் செய்யவும்.

சமையலுக்கு வெள்ளி பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள்
மத நம்பிக்கைகளின்படி, வெள்ளி மிகவும் தூய்மையான மற்றும் புனிதமான உலோகமாக கருதப்படுகிறது. எனவே, படையல் நாளில் பிராமணர்களுக்கு வெள்ளி பாத்திரங்களில் உணவை வழங்குவது நல்லதாக கருதப்படுகிறது. இது அனைத்து வகையான தோஷங்கள் மற்றும் எதிர்மறை சக்திகளிலிருந்து விடுபட உதவுவதாக நம்பப்படுகிறது. இது தவிர, ஒரு வெள்ளி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி முன்னோர்களுக்கு வழங்குவதன் மூலம், அவர்களின் முழு ஆசீர்வாதங்களை பெற்றிடலாம் என்பதும் நம்பிக்கை. உங்களிடம் வெள்ளி பாத்திரங்கள் இல்லையென்றால், நீங்கள் சாதாரண பாத்திரங்களிலேயே உணவை பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications