Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
குடும்பத்துடன் ஒரு மணிநேரம் செலவிடுங்கள் - பேரண்ட் சர்க்கிள் நடத்தும் ஓர் புதிய பிரச்சாரம்!
குடும்ப உறவுகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் பேரன்ட் சர்க்கிள் என்னும் அமைப்பானது #GadgetFreeHour என்ற ஒரு பிரச்சாரத்தை நடத்தி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஒரு மணிநேரத்தை செலவழிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போதைய பரபரப்பான உலகில் பல குடும்பத்தினர் கேஜெட்டுகளால் ஒரே வீட்டில் இருந்தும் பிரிந்தே இருக்கின்றனர். எனவே குடும்ப உறவுகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் பேரன்ட் சர்க்கிள் என்னும் அமைப்பானது #GadgetFreeHour என்ற ஒரு பிரச்சாரத்தை நடத்தி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஒரு மணிநேரத்தை செலவழிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பேரன்ட் சர்க்கிள் என்ற அமைப்பு இந்தியாவில் முதன்முதலாக கடந்த 2019 ஆம் ஆண்டில் குழந்தைகள் தினமான நவம்பர் 14 ஆம் தேதி #GadgetFreeHour பிரச்சாரத்தை தொடங்கியது. இந்த பிரச்சாரத்தின் நோக்கம் ஒரு மணிநேரம் அனைத்து கேஜேட்டுகளையும் அணைத்துவிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதாகும் மற்றும் இது நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை சென்றடைந்து வெற்றி பெற்றது. இந்த ஆண்டு #GadgetFreeHour பிரச்சாரமானது நவம்பர் 20 ஆம் தேதி நடக்கிறது. இந்த பிரச்சாரமானது சமூக வலைத்தளங்களில் 5 மில்லியனுக்கும் அதிகமானவர்களை ஈர்த்ததோடு, இன்னும் வேகமெடுத்து வருகிறது.

#GadgetFreeHour என்ற பிரச்சாரம் நடத்துவதற்கு முக்கிய காரணம் நல்ல உறவுகளை உருவாக்குவது தான். அதற்கு மொபைல் மற்றும் டிவி ஆகியவற்றின் இடையூறு ஏதும் இல்லாமல், குழந்தைகளுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவது, குழந்தைகளுடன் விளையாடுவது, நல்ல தகவல்தொடர்பை கொண்டிருப்பது மிகவும் அவசியம்.
தற்போது பலரது குடும்ப உறவுகள் மொபைல் போனால் பாழாகி கொண்டிருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் அதை உணர்ந்து, குடும்ப உறவுகளை எவ்வாறு உருவாக்குவது, தொழில்நுட்ப-வாழ்க்கை சமநிலையை கண்டறிவது, ஆரோக்கியமான டிஜிட்டல் நடைமுறைகளை பின்பற்றுவது மற்றும் ஓய்வு நேரங்களில் கேஜேட் பயன்படுத்தாமல் குடும்பத்தினருடன் தினமும் நேரத்தை செலவிடும் வழக்கத்தை கொண்டிருப்பது பற்றி சித்திக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்.
இதன் ஓர் முயற்சியாக பேரன்ட் சர்க்கிள் உலக குழந்தைகள் தினமான 2022 நவம்பர் 20 ஆம் தேதி அன்று இரவு 7.30 மற்றும் இரவு 8.30 மணி வரை நடக்கும் #GadgetFreeHour சமூக முன் முயற்சியில் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்குமாறு கேட்டுக்கோள்கிறது. இந்த ஒரு மணிநேரத்தில் பங்கேற்கும் குடும்பங்கள் தங்கள் கேட்ஜெட்டுகளை அணைத்துவிட்டு, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவது, விளையாடுவது, சாப்பிடுவது, ஒன்றாக சிரிப்பது, வேடிக்கையான வழியில் நேரத்தை செலவிடுவது என இருப்பார்கள்.
இந்த #GadgetFreeHour முயற்சியில் புதுச்சேரி அரசும் கைகோர்த்துள்ளது. மேலும் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதுக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைப்பை காட்டி வருவதாக பேரன்ட் சர்க்கிள் அமைப்பு கூறியுள்ளது.
ஒன்றாக விளையாடுவதும், ஒருவருக்கொருவர் நல்ல தரமான நேரத்தை செலவிடுவதும் ஒரு இனிமையான மற்றும் சக்தி வாய்ந்த நினைவுகளை உருவாக்குகிறது மற்றும் இது குழந்தைகளுக்கு அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களையும் பெற உதவுகிறது. இந்த ஆண்டு நடக்கும் #GadgetFreeHour முயற்சியில் குடும்பத்தினருடனான பிணைப்பை மேம்படுத்தவும், எவ்வித கேட்ஜெட்டுகள் இல்லாமலும் குடும்பதினருடன் நேரத்தை செலவிடுவதை ஊக்குவிக்கும் வகையில், பல உற்சாகமான ஆக்டிவிட்டிஸ் மற்றும் குடும்பங்களுக்கான போட்டிகளை நடத்துவதாக பேரண்ட் சர்க்கிள் அமைப்பு கூறியுள்ளது.
குடும்பத்தில் உள்ளவர்கள் நேருக்கு நேர் இணைந்திருக்காமல், ஒன்றாக நேரத்தை செலவிடாமல், வீட்டில் இருந்து கொண்டே ஒருவருக்கொருவர் பேசாமல் மற்றும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால் என்ன நடக்கும்? கேட்ஜெட்டுகள் தான் குடும்பத்தை மாற்றத் தொடங்கும். எனவே குடும்ப வாழ்க்கை இனிமையாக மகிழ்ச்சி நிறைந்து இருக்க வேண்டுமானால், வீட்டில் கேட்ஜெட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, குடும்பத்தினருடன் நெருங்கி பழக முயற்சி செய்யுங்கள் என்று பேரன்ட் சர்க்கிள் அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் நளினா ராமலட்சுமி கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications


