Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
நீர் கூட குடிக்காமல் விரதம் இருக்கும் நிர்ஜல ஏகாதசியின் மகிமை என்ன தெரியுமா?
ஏகாதசி விரதம் மகிமை வாய்ந்தது. நிர்ஜல ஏகாதசி நாளில் தண்ணீர்கூட குடிக்காமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. பீம ஏகாதசி என்றும் பாண்டவ ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.
இந்துக்கள் இருக்கும் விரதத்திலேயே சிறந்த விரதம் என்று ஏகாதசி விரதத்தை வைஷ்ணவர்கள் சொல்வார்கள். ஏகாதசி திதி மாதத்திற்கு இரண்டு முறை வருவதாகும். அமாவாசை முடிந்து 11வது நாள் வளர்பிறை ஏகாதசி, பௌர்ணமி முடிந்து 11வது நாள் தேய்பிறை ஏகாதசியாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆனி வளர்பிறை ஏகாதசி இந்த ஆண்டு நிர்ஜல ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது. ஜூன் 21 ஆம் தேதி நிர்ஜல ஏகாதசியாக அனுஷ்டிக்கப்படுகிறது. தண்ணீர் கூட குடிக்காமல் இருக்கும் இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு பல தலைமுறையினர் செய்த பாவங்கள் நீங்கும்.

இந்துக்கள் அனைவருமே, வைகுண்ட ஏகாதசிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்தாலும், ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசிக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால். வைணவர்கள் அனைவருமே ஒவ்வொரு மாதமும் வரும் இரண்டு ஏகாதசிக்கும் முக்கியத்துவம் அளித்து விரதமும் இருந்து வருகின்றனர். காரணம் ஏகாதசி தினமானது, மோட்சத்தை அளிப்பதற்கு உரிய தினமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசிக்கு ஒவ்வொரு பெயரும், அந்த நாட்களில் இருக்கும் ஏகாதசி விரதத்துக்கு உரிய பலன்களும் கிடைக்கும் என்றாலும், அனைத்து ஏகாதசி நாட்களிலும் இருக்கும் விரதமும், வைகுண்ட பதவிக்கு நம்மை இட்டுச்செல்லம் என்பது நிச்சயம். வைகுண்ட ஏகாதசி விரதம் மிகவும் விசேஷமானது. இந்தத் திதியில் பிரம்மா குபேரனைத் தோற்றுவித்தார் என்பது ஐதீகம். அவர் ஆணைப்படி குபேரன் நிதிக்கு அதிபதி ஆனார். ஏகாதசி விரதம் அன்று வெறும் பழம் மட்டும் உண்டு குபேரனைப் பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வைகாசி ஏகாதசி விரதம்
சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் மாதமே வைகாசி மாதம் எனப்படுகிறது. வைகாசி மாதம் என்பது பொதுவாக முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய மாதம் என்று பலர் நினைத்தாலும் திருமாலின் வழிபாட்டிற்குரிய மாதமாகவும் இது இருக்கிறது. வாழ்வில் நீங்கள் விரும்பியவற்றை பெற வைகாசி ஏகாதசி விரதம் இருப்பது நல்லது.

பெருமாளுக்கு விரதம்
வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபடுவார்கள். உடல் சோர்வு நீங்கும். இவ்விரதம் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப் போக்கு ஏற்படும் நிலை தீரும். உடலில் ரத்த சோகை ஏற்பட்டு இருப்பவர்களுக்கு அக்குறைபாடு நீங்கும். பெருமாளின் அருளால் சிறப்பான வெற்றிகளை பெறும்.

நிர்ஜல ஏகாதசி
ஏகாதசி விரதம் மகிமை வாய்ந்தது. நிர்ஜல ஏகாதசி நாளில் தண்ணீர்கூட குடிக்காமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. பீம ஏகாதசி என்றும் பாண்டவ ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது. இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரருக்கு வியாசர் அருளியுள்ளார்.

துன்பம் நீக்கும் விரதம்
பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் ஒரு முறை வியாசரை தரிசித்தபோது மக்கள் பல துன்பங்களில் சிக்கியுள்ளனர். இந்த துன்பங்கள் நீங்கும்படியான ஒரு சுலபமான வழியைச் சொல்லுங்கள் என வேண்டினார். "தர்மபுத்திரா, எல்லாத் துன்பங்களையும் நீக்கக் கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே. ஏகாதசியன்று, விரதம் இருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை என்று பதில் சொன்னார் வியாசர்.

சாப்பிடாமல் இருக்க முடியுமா?
வியாசர் சொன்னதைக் கேட்ட பீமன், முனிவரே என்னால் அனைத்து ஏகாதசி நாட்களிலும் விரதம் இருக்க முடியாது. என் வயிற்றில் எரியும் நெருப்புக்கு நான் தீனி போட்டே ஆக வேண்டும். வருடத்தில் ஒரே ஒருநாள் மட்டுமே விரதம் இருக்கும் வகையிலும் அந்த விரதம் இருந்தால் 24 ஏகாதசி விரதம் இருந்த மகிமை இருக்கும் வகையிலும் இருக்க வேண்டும் அப்படி ஒரு ஏகாதசி விரதத்தை சொல்லுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.

பீம ஏகாதசி
வியாசர் சிரித்துக்கொண்டே, கவலைப்படாதே பீமா அப்படி ஒரு ஏகாதசி இருக்கிறது. இது தண்ணீர் கூட குடிக்காமல் இருக்க வேண்டும். அதனால்தான் அது நிர்ஜல ஏகாதசியாக போற்றப்படுகிறது. அந்த விரதம் கடைபிடித்தால் போதும் 24 ஏகாதசி விரதம் இருந்த புண்ணியம் கிடைக்கும் என்று சொன்னார். அந்த விரதத்தை பீமன் கடைபிடித்ததால் பீம ஏகாதசியாகவும் போற்றப்படுகிறது.

நிர்ஜல ஏகாதசி நன்மைகள்
இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு புண்ணிய ஆறுகளில் புனித நீராடிய பலனும் பலவிதமான தானங்கள் செய்த பலனும் கிடைக்கும் நேரடியாக வைகுண்டத்திற்கு செல்லும் பேறு கிடைக்கும். வாழ்க்கையில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். நோய்கள் தீரும். பிரம்மஹத்தி தோறும் நீங்கும். இந்த ஏகாதசி விரதம் பற்றி கேட்டவர்களுக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த புண்ணியம் கிடைக்கும்.

தண்ணீர் தானம் புண்ணியம்
நிர்ஜல ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தங்களின் பாபங்களில் இருந்து மட்டுமல்ல நூறு தலைமுறைக்கான முன்னோர்களின் பாவ சுமையும் நீங்கும். அன்றைய தினம் தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் கிடைக்கும். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்டாலே வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நிச்சயம் என்கிறது தர்ம சாஸ்திரம்.



Click it and Unblock the Notifications