Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
New Year 2023: சிவ-சித்தி யோகங்களில் தொடங்கும் 2023 புத்தாண்டு: இந்த 3 ராசிகளுக்கு பிரமாதமா இருக்கும்...
ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின் படி, 2023 ஜனவரி 01 ஆம் தேதி இரண்டு மங்களகரமான சுப யோகங்கள் உருவாகின்றன. அதில் சிவ யோகம் காலை 07.23 மணி வரை நீடித்திருக்கும். அதே வேளையில், சித்தி யோகம் தொடங்குகிறது.
New Year 2023: 2022 ஆம் ஆண்டு முடிய இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. 2023 ஆம் புத்தாண்டு நல்ல ஆண்டாக, நல்ல செல்வத்தை வாரி வழங்கும் மற்றும் முன்னேற்றப் பாதைகளை அமைத்து தரும் ஆண்டாக இருக்க வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கம் அனைத்து ராசிக்காரர்களையுமே பாதிக்கிறது. மேலும் கிரக இயக்கங்களின் போது உருவாகும் கிரக சேர்க்கைகளால் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும்.

அந்த வகையில் 2023 புத்தாண்டு பிறக்கும் போது இரண்டு மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன. அதாவது வரக்கூடிய 2023 புத்தாண்டானது மங்களகரமான 2 சுப யோகங்களில் பிறக்கிறது. இந்த யோகங்களால் சில ராசிக்காரர்களுக்கு 2023 புத்தாண்டானது பிரமாதமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

2023 ஜனவரி 01-ல் உருவாகும் 2 சுப யோகங்கள்
ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின் படி, 2023 ஜனவரி 01 ஆம் தேதி இரண்டு மங்களகரமான சுப யோகங்கள் உருவாகின்றன. அதில் சிவ யோகம் காலை 07.23 மணி வரை நீடித்திருக்கும். அதே வேளையில், சித்தி யோகம் தொடங்குகிறது. இந்த சித்தி யோகம் 2023 ஜனவரி 02 ஆம் தேதி காலை 06.55 மணி வரை நீடித்திருக்கும். ஜோதிடத்தில், இவ்விரு யோகங்களுமே மிகவும் மங்களகரமான சுப யோகங்களாக கருதப்படுகின்றன.

சிவ யோகம்
ஜோதிடத்தின் படி, சிவயோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த சிவ யோகத்தில் சிவபெருமானை வழிபட்டால், அவரின் பரிபூர்ண அருளையும், ஆசியையும் பெறலாம். ஏனெனில் இந்த யோகத்தில் சிவபெருமானை வழிபட்டால், அவர் மிகவும் மகிழ்ச்சியடைவதாக நம்பப்படுகிறது. மேலும் சிவனின் அருளால் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைக்குமாம்.

சித்தி யோகம்
ஜோதிடத்தின் படி, சித்தி யோகமானது சர்வார்த்த சித்தி யோகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யோகமும் மிகவும் மங்ளகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தில் தொடங்கும் எந்த காரியமும் நிச்சயம் வெற்றி பெறும். முக்கியமாக இந்த யோகத்தில் தொழிலை தொடங்கினால், அந்த தொழில் நல்ல வெற்றிகரமாக நடக்கும். மேலும் இந்த யோகத்தில் திருமணம் போன்ற சுப வேலைகளையும் செய்யலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கும். இந்த யோக காலத்தில் முக்கியமான வேலைகளை செய்தால் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் இப்பயணம் எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்களானது நன்மை பயக்கும். ஆண்டின் முதல் நாளே இந்த சுப யோகங்களில் தொடங்கியுள்ளதால், இந்த ஆண்டில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் பணிபுரிபவர்கள் ஏப்ரல் மாதத்தில் பதவி உயர்வப் பெறுவார்கள். இந்த ஆண்டில் தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும். தந்தையின் ஒத்துழைப்பால் நல்ல லாபம் கிடைக்கும். அதே வேளையில் அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களின் கனவுகள் நனவாக வாய்ப்புள்ளது.

மகரம்
சிவ மற்றும் சித்தி யோகம் மகர ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தைப் பிரகாசிக்க வைக்கும். இந்த ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த ஆண்டில் சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். தடைபட்ட வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். அதே வேளையில் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தை விரிவாக்க வாய்ப்புக்களும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
