Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
நவராத்திரி எதற்காக கொண்டாடப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும், தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியை போற்றி வழிபட சிறந்த காலங்களாகும். இதில் புரட்டாசி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே,முக்கியத்துவம் வாய்ந்தது
நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்று பொருள். நவம் என்றால் ஒன்பது என்றும், புதுமை என்றும் பொருளுண்டு. இந்த இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை ஒன்பது வடிவங்களில் ஆராதித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று இந்த நவராத்திரி விரதம் ஆகும். மனிதனுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படக்கூடிய ஆற்றலின், அதிதேவதையாக விளங்குகின்ற தேவி சக்தியைப் போற்றும் விரதமாகவும் இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்து புராணங்களில், இரவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம். ஹோலி, தீபாவளி, சிவராத்திரி, ஜென்மாஷ்டமி, தசரா போன்ற பல பண்டிகைகள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தான் கொண்டாடப்படுகின்றன.

புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் நோற்கப்படும் நோன்பு தான் இந்த நவராத்திரி நோன்பாகும். இந்த நோன்பு மேற்கொள்ளப்படும் காலமானது தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராகு காலமாக விளங்குகிறது. உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும், தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியை போற்றி வழிபட சிறந்த காலங்களாகும். இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே, முக்கியத்துவம் வாய்ந்தது.

நவராத்திரி தொடங்குவது எப்போது?
நவராத்திரி பூசையானது, புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை பின்னர் வரும் பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து, நவமி வரை கொண்டாடப்படும். எனவே, புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும்.

வழிபடும் முறை
வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து அலங்கரித்து தினந்தோறும், சாயங்கால வேளைகளில் சிறப்பு பூஜைகள் செய்வர். ஒவ்வொரு நாளும் தேவியின் ஒவ்வொரு அவதாரத்தையும் வழிபடுவர். மேலும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானிய வகைகளை வேக வைத்து, தேவிக்கு நெய்வேத்யம் செய்து படைத்து, அக்கம் பக்கத்தினருடன் பகிர்ந்து உண்பர். சில பக்தர்கள் பத்மாசனத்திலும் சித்தசனத்திலும் அமர்ந்து மந்திரத்தை உச்சரிப்பர். மேலும் சிலர், சக்தி பீடங்களுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டிருப்பர். இந்தியாவை சுற்றிலும் மொத்தம் 51 சக்தி பீடங்கள் அமைந்துள்ளன. சக்தி பீடங்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், தங்களது இல்லங்களிலேயே தேவியை வரவழைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

நவராத்தியின் ஒன்பது நாட்கள்
* நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையம்மனின் ஆட்சிக் காலம்.
* நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான லட்சுமி தேவியின் ஆட்சிக்காலம்.
* இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதி தேவியின் ஆட்சிக்காலம்.

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நவராத்திரி
புரட்டாசி மாதத்தின் போது, கன்னி ராசியின் அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான் ஆவார். புதன் பகவான்ர் சைவ கடவுளாக விளங்குவதால், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. இதற்கு பின்னால் ஓர் அறிவியல் காரணமுண்டு என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக, வெயில் காலம் முடிந்து, மழைக்காலம் ஆரம்பிக்கும் மாதம் தான் இந்த புரட்டாசி மாதம். அதனால், இத்தனை நாளாக பூமி தன்னுள் அடக்கி வைத்திருந்த உஷ்ணத்தை, வெளியிடத் தொடங்கும். அதனால், நமது உடலில் உஷ்ணம் அதிகரிக்கத் தொடங்கும். இத்தகைய காலத்தில் அசைவம் சாப்பிடுவது, உஷ்ணம் தொடர்பான வியாதிக்கு ஆளாக காரணமாகிவிடும். எனவே, தான் இந்த நவராத்திரி விரதத்தின் மூலம், விரதமிருந்து, சுத்தப்பத்தமாக வழிபட்டு, ஆரோக்கியமான தானியங்களையும், காய்கறிகளையும் உண்டு நமது ஆரோக்கியத்தை மேம்படுத்திடுவோம்.

நவராத்திரியின் காரணம்
இந்த நவராத்திரி காலத்தில், ஒருவர் தன்னிடம் உள்ள நல்லதை எல்லாம் ஒன்றாக சேர்த்து, கெட்ட எண்ணங்களை அழிப்பதற்காக தம்மை தாமே பக்குவப்படுத்திக் கொள்ள உதவும், மிகச் சிறந்த தவக்காலமாகவே நவராத்திரி விரத காலத்தை கருத வேண்டும். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, இதன் பின்னால் அறிவியல் காரணங்களும் உள்ளன என்பதை உங்களது தலைமுறையினருக்கும், உங்களுக்கு அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரையுங்கள். அப்போது தான் நமது பாரம்பரியம் அழியாமல், அடுத்தடுத்த தலைமுறையினரால் தொடர்ந்து பின்பற்றப்படும்.



Click it and Unblock the Notifications