Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
பெண் வேடமிட்டு ஆணை திருமணம் செய்து கொண்ட வாலிபர்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்...!
ஏமாறுவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது நாம் நினைக்கிறோம். ஆனால் நம்மை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அவ்வாறு இல்லையோ என்று நம்மை நினைக்க வைக்கிறது.
இந்த உலகத்தில் ஏமாற்றுபவர்களை விட ஏமாறுபவர்களுக்குத்தான் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். இது நூறு சதவீதம் உண்மையான கருத்தாகும். ஏனெனில் ஒருவரிடம் ஏமாந்ததை உணரும்போது நாம் முட்டாளாகியதை நினைத்து நமக்குள் ஏற்படும் குற்ற உணர்ச்சியும், அவமானமும் நம்மைக் கொல்லாமல் கொல்லும்.
ஏமாறுவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது நாம் நினைக்கிறோம். ஆனால் நம்மை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அவ்வாறு இல்லையோ என்று நம்மை நினைக்க வைக்கிறது. ஏனெனில் இளைஞர் ஒருவர் பெண் என நினைத்து ஒரு ஆணை திருமணம் செய்து அவருடன் பத்து நாட்கள் குடும்பம் நடத்தியுள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியையும், சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் இறுதிவரை அந்த கணவன் அதனை கண்டுபிடிக்கவில்லை. இந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

உகாண்டா
இந்த விசித்திரமான சம்பவம் உகாண்டாவில்தான் நடந்தது. பாரம்பரியத்திற்கு பெயர் போன உகாண்டாவில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியானதாகத்தான் இருக்கிறது. இதில் கூடுதல் அதிர்ச்சி என்னவென்றால் ஏமாந்த இளைஞர் ஒரு இஸ்லாமிய மதபோதகர் ஆவார்.

திருமணம்
கயுங்கா மாவட்டத்தின் கியாம்பிசி மஸ்ஜித் நூர் மசூதியின் இமாம் ஷேக் முகமது முத்தும்பா, கடந்த மாதம் ஒரு பாரம்பரிய இஸ்லாமிய விழாவில் திருமணம் செய்துகொண்டபோது ஸ்வாபுல்லா நபுகீரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக நினைத்தார்.

முதலிரவு
முத்தும்பாவிற்கும், நபுகீராவிற்கும் முதலிரவு நடைபெறவே இல்லை. ஏனெனில் நபுகீரா தான் மாதவிடாய் காலத்தில் இருப்பதாக அனைவரையும் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் நபுகீராவாக நடித்தவர் ஒரு திருடர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல். இந்த திருட்டுதான் நபுகீராவை காட்டிக்கொடுத்துள்ளது.

எப்படி சிக்கினார்?
முத்தும்பாவின் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களின் இல்லங்களில் இருந்த தொலைக்காட்சி மற்றும் உடைகள் திடீரென காணாமல் போனது. இந்த திருட்டு பழி நபுகீரா மீது விழுந்தது, இது தொடர்பாக நபுகீரா கைதுசெய்யப்பட்ட போதுதான் உண்மை வெளிவந்தது. ஒரு பெண் போலீஸ் அதிகாரி நபுகீராவை விசாரிக்க சோதனை செய்தபோது அவரின் உடைகளை கழட்டி சோதனை செய்தார். பெண் என்று நினைத்து நிர்வாணமாக சோதனை செய்தபோது அவர் ஆண் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதன்மூலம் அவர்தான் திருடன் என்று போலீஸார் முடிவுக்கு வந்தனர்.

ரிச்சர்ட் துமுஷாபே
விசாரணையின் போது குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். நபுகீராவாக நடித்த ஆணின் உண்மையான பெயர் ரிச்சர்ட் துமுஷாபே ஆகும். மதகுருவின் பணத்தை திருடும் முயற்சியில் தான் முத்தும்பாவை மணந்ததாக ஒப்புக்கொண்டார். பணத்தை திருடுவதற்காக பெண் வேடமிட்டு திருமணம் வரை சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்தும்பா மீது விசாரணை
பிராந்தியத்தின் உயர் முஸ்லீம் அதிகாரிகளில் ஒருவரான ஷேக் அப்துல் நூர் ககாண்டே இதைப்பற்றி கூறுகையில் துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவம் தொடர்பாக 27 வயதான ஷேக் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நபுகீரா ஒரு பெண் என்று நினைத்து அவர் திருமண உறவுக்குள் நுழைந்ததை உறுதிப்படுத்திய போதிலும், அவர் இமாமை விட்டு வெளியேற வேண்டும் மசூதி அதிகாரிகள் கூறுவதாக கூறியுள்ளார்.

இடைநீக்கம்
கியாம்பிசி மஸ்ஜித் நூர் மசூதியின் தலைமை இமாம், ஷேக் ஈசா புசுல்வா கூறுகையில் முத்தும்பாவின் இடைநீக்கம் "அவர்களின் நம்பிக்கையின் நேர்மையை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது" என்று கூறினார். மேலும் முத்தும்பா மசூதியில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியதாகவும், அதன் மூன்று இமாம்களில் ஒருவராகவும் இருந்தார் என்று புஸுல்வா கூறினார்.

ரிச்சர்டின் நடிப்பு
முத்தும்பாவின் சக ஊழியர்கள் சிலர் கூறுகையில் முத்தும்பாவின் மனைவியாக நடித்தவர் எந்த சூழ்நிலையிலும் சந்தேகம் வரும்படி நடந்து கொள்ளவில்லை என்று கூறினார். மேலும் அவர் இனிமையான குரலை கொண்டிருந்ததாகவும், பெண்ணை போலவே நடந்து கொண்டதாகவும் கூறினார். அவர் அவரை சந்தித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நபுகீரா ஹிஜாப் அணிந்திருந்ததாக கூறினார். தூங்கும்போதும் ஆடைகளை அவிழ்க்க அவர் மறுத்ததாக முத்தும்பா கூறியதாக அவரின் நண்பர் கூறினார்.



Click it and Unblock the Notifications