Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
மொஹரம் 2020: மொஹரம் குறித்த சுவாரஸ்யமான சில விஷயங்கள்!
இஸ்லாமியர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தில், இஸ்லாமிய காலெண்டர் படி, மொஹரம் என்பது முதல் மாதமாகும். அதனால் இது மிகவும் முக்கியமானதாகும். ரமலான் மாதத்திற்கு பின் புனிதத்துவம் வாய்ந்த மாதம் இதுவாகும்.
உலகம் முழுவதும் உள்ள இசுலாமியர்கள் கொண்டாடும் இஸ்லாமிய புத்தாண்டு மொஹரம்/முஹர்ரம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு புனிதமான மற்றும் முக்கியமான விழாவாக இஸ்லாமிய சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் புனிதமான மாதங்களாக கருதும் நான்கு மாதங்களில் இதுவும் ஒன்றாகும்.

இஸ்லாமியர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தில், இஸ்லாமிய காலெண்டர் படி, மொஹரம் என்பது முதல் மாதமாகும். அதனால் இது மிகவும் முக்கியமானதாகும். ரமலான் மாதத்திற்கு பின் புனிதத்துவம் வாய்ந்த மாதம் இதுவாகும்.

மொஹரம் என்றால் என்ன?
மொஹரம் என்றால் "தடைசெய்யப்பட்ட" என்ற பொருளாகும். ஆகவே இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் மிகவும் புனிதத்தன்மையுடன் தொழுகைக்கான காலமாக கருதி தொழுகையில் ஈடுபடுவார்கள். மொஹரம் காலத்தில் நோன்பு இருப்பதை சிலர் வழக்கமாகிக் கொள்வார்கள்.

மொஹரம் எதனால் கொண்டாடப்படுகிறது?
இஸ்லாமிய தீர்க்கதரிசி முஹம்மது நபிகளின் பேரன் இமாம் உசேன் இப்னு அலி கொல்லப்பட்ட கர்பலா போரின் ஆண்டு நிறைவையும் மொஹரம் குறிக்கிறது. இந்த படுகொலை ஆஷுரா 10 ஆம் நாள் நடைபெற்றதாகவும், இந்த நாளில் சிலர் நோன்பு இருந்து நினைவு கூர்வார்கள்.
ஆகஸ்ட் 30, 2020 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமியர்களின் புத்தாண்டாக இஸ்லாம் சமூகத்தினரால் கொண்டாடப்படவுள்ளது. இது ஹிஜ்ரி அல்லது இஸ்லாமிய காலெண்டர் 1440 ஆம் ஆண்டில் முதல் நாளைக் குறிக்கும்.
உலகம் முழுவதும் உள்ள ஷியா முஸ்லிம்கள் இந்த நாளை கௌரவப்படுத்துகின்றனர். தீர்க்கதரிசி முகம்மது நபிகள் இந்த காலகட்டத்தில் தான் மெக்காவில் இருந்து மெதீனாவிற்கு புலம் பெயர்ந்தார் . இது ஹிஜிராஹ் என்று அறியப்படுவதால், மொஹரம் இந்த நிகழ்வையும் முக்கியமாக குறிக்கிறது.
இஸ்லாமியர்கள் இந்த விழாவை சிறப்பாக, மகிழ்ச்சியாக, மிகவும் அர்ப்பணிப்புடன் கொண்டாடும் இந்த நேரத்தில் மொஹரம் குறித்த சில சுவாரஸ்யமான செய்திகளை நாம் அறிந்து கொள்வோம்.

பாவங்கள் நீங்கும்
ஆஷுராவின் இந்த நாளில் நோன்பு இருப்பதால் சென்ற ஆண்டு செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று முகமது நபிகள் கூறுகிறார். அதனால் இஸ்லாமியர்கள் இந்த மாதத்தின் 9 மற்றும் 10 ஆம் நாளை நோன்பு இருக்கும் நாளாக தேர்ந்தெடுக்கின்றனர்.

கசையடி
ஷியா முஸ்லிம் பிரிவினர் "லாட்டிமா" என்று அறியப்படும் மார்பில் அறைந்து கொள்ளும் பழக்கத்தை பின்பற்றுகின்றனர். சிலர் கசையடி மற்றும் ஒரு சிலர் நெற்றியில் வெட்டிக் கொள்வது போன்றவற்றையும் பின்பற்றுகின்றனர். தீர்க்கதரிசி மோசஸ் அவரக்ளுக்கு மரியாதை செலுத்துவதை சன்னி முஸ்லிம்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் மேலே கூறிய சடங்குகளில் பங்கு கொள்வதில்லை.

ஆஷுராவைப் படித்தல்
முஹரமின் இந்த புனிதமான காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுகளிலும் பங்கெடுப்பதில்லை. கர்பலாவின் தியாகிகளுக்கு வணக்கங்கள் கொண்ட புத்தகமான சியாரத் ஆஷுராவைப் படிப்பது ஆஷுரா நாளில் ஒரு வழக்கம்.

நோன்பு மேற்கொள்வர்
புத்தாண்டு அன்று இஸ்லாமியர்கள் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம். தாங்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் வேண்டி , விடுமுறை நாளன்று தங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களுடன் அந்த நாளை செலவிடுவர். நோன்பு நிறைவுற்றதும், இனிப்புகள் செய்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications
