இறந்த உடலை சாப்பிட்ட அரசர்கள் முதல் அரசவையில் சுயஇன்பம் செய்த அரசர் வரை தலைசுற்ற வைத்த மன்னர்கள்...!

வரலாற்றில் வாழ்ந்த அரச குடும்பங்கள் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது ஆடம்பர வாழ்க்கையும், கலாச்சாரமும், இரத்தத்தால் எழுதப்பட்ட போர் கதைகளும்தான்.

வரலாற்றில் வாழ்ந்த அரச குடும்பங்கள் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது ஆடம்பர வாழ்க்கையும், கலாச்சாரமும், இரத்தத்தால் எழுதப்பட்ட போர் கதைகளும்தான். ஆனால் அரச குடும்பத்தினர் அனைவரின் வாழ்க்கையும் அப்படித்தான் இருந்ததா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் வினோதமாக வாழ்ந்த எண்ணற்ற அரச குடும்பத்தினர் பலர் வரலாற்றில் உள்ளனர்.

Most Weirdest Things Royals Done Through History

அரச குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக மிகவும் விசித்திரமான வழிகளில் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்த மற்றும் வினோதமான ஆசைகள் கொண்ட பலர் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வரலாற்றில் வினோத காரணங்களுக்காக இடம் பெற்றது. அவர்களில் சில முக்கியமானவர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டென்மார்க்கின் மன்னர் கிறிஸ்டியன் VII சுயஇன்பத்திற்கு அடிமையாக இருந்தார்

டென்மார்க்கின் மன்னர் கிறிஸ்டியன் VII சுயஇன்பத்திற்கு அடிமையாக இருந்தார்

கிறிஸ்டியன் VII 17 வயதில் டென்மார்க்கின் மன்னரானார், இளம் வயதிலேயே மன்னரான அவர் மனமுதிர்ச்சி இல்லாமல் குழந்தைத்தனமாக நடந்து கொண்டார் மற்றும் பல சமூக விரோத நடத்தைகளை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் அரசவையில் அனைவரின் முன்னிலையிலும் அடிக்கடி சுயஇன்பம் செய்யும் பழக்கம் கொண்டவராக இருந்தார்.. அவர் ஸ்கிசோஃப்ரினிக் மற்றும் பைபோலார் அல்லது போர்பிரியா என்ற மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் இப்போது அனுமானிக்கப்படுகிறது.

கண்ணாடி பியானோவை விழுங்கியதாக நம்பிய இளவரசி

கண்ணாடி பியானோவை விழுங்கியதாக நம்பிய இளவரசி

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த பவேரிய இளவரசி எமிலி புத்தகங்களை காதலித்து பல சிறந்த இலக்கிய படைப்புகளை உருவாக்கினார். இருப்பினும், அவருக்கு ஒரு வித்தியாசமான நம்பிக்கை இருந்தது. அவள் ஒரு கண்ணாடி பியானோவை விழுங்கிவிட்டதாக நம்பினார், அதனால் அந்த கண்ணாடி பியானோ உடைந்துவிடாதபடி எப்போதும் எச்சரிக்கையுடன் நடப்பார்.

மனிதர்களை விட குதிரையை அதிகம் நேசித்த ஜூலியஸ் சீஸர்

மனிதர்களை விட குதிரையை அதிகம் நேசித்த ஜூலியஸ் சீஸர்

கலிகுலா என்றும் அழைக்கப்பட்ட கயஸ் ஜூலியஸ் சீசர் ஜெர்மானிக்கஸ் தனது செல்லக் குதிரையான இன்சிடேட்டஸுடன் ஒரு வித்தியாசமான ஒப்பந்தம் செய்தார். இந்த ரோமானியப் பேரரசர் தனது குதிரையான இன்சிடேடஸை அனைத்தையும் விட அதிகம் நேசித்தார், மேலும் அதற்கு தந்தத்தால் கட்டப்பட்ட தொழுவத்துடன் கூடிய பளிங்கு மாளிகையைக் கட்டிக்கொடுத்தார். கலிகுலா குதிரையை அமைச்சகத்தின் உயர் பதவிக்கு நியமிக்க திட்டமிட்டார், ஆனால் அவர் அதைச் செய்வதற்கு முன்பே படுகொலை செய்யப்பட்டார்.

இறந்த உடலை மருந்தாக சாப்பிட்ட அரசர்கள்

இறந்த உடலை மருந்தாக சாப்பிட்ட அரசர்கள்

இங்கிலாந்தின் சார்லஸ் II மற்றும் வில்லியம் II, பிரான்சின் பிரான்சுவா I மற்றும் டென்மார்க்கின் கிறிஸ்டியன் IV ஆகியோர் மருத்துவ நன்மைக்காக நரமாமிசம் உண்டார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன் ‘முமியா' என்றழைக்கப்படும் இறந்த உடல் உறுப்புகள் மருந்தகங்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அடிக்கடி விற்கப்பட்டன. அவர்களில் பலர் இந்த பாகங்களில் ஒரு நபரிடமிருந்து எஞ்சியிருக்கும் உயிர் சக்தியின் சில வடிவங்கள் இருப்பதாக நம்பினர். பொதுவாக, அது ஒரு ஆரோக்கியமான அல்லது ஒரு இளம் நபரின் உறுப்புகளாக இருக்கும், இவை ராஜாக்கள் மற்றும் ராணிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.

சாகாவரம் பெற முயன்று இறந்த சீன அரசர் கின் ஷிஹுவாங்

சாகாவரம் பெற முயன்று இறந்த சீன அரசர் கின் ஷிஹுவாங்

கின் ஷிஹுவாங்தான் கின் வம்சத்தை நிறுவினார் மற்றும் சீனாவின் முதல் சக்திவாய்ந்த பேரரசராகக் கருதப்படுகிறார். அழியாதவர்கள் வாழும் கடலில் மூன்று ‘ஆவி மலைகள்' இருப்பதாக அவர் ஒரு பழைய புராணத்தை நம்பினார். அவருக்கு சாகாவரத்தை வழங்குவதற்கான மூலிகைகளை எடுத்து வருவதற்காக அவர் பல் தேடுதல் குழுக்களை அனுப்பினார், பின்னர் அவற்றை அமுதமாக அருந்தினார். இருப்பினும், இந்த அமுதங்கள் பெரும்பாலும் ரசவாதிகளால் செய்யப்பட்டவையாக இருந்தது மற்றும் அவற்றில் பாதரசத்தின் தடயங்கள் இருந்தன, இதுவே அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தது.

உடைந்து பொம்மைக்காக முழு ராணுவ அணிவகுப்பு நடத்திய ரஷ்யாவின் ஜார் பீட்டர் III

உடைந்து பொம்மைக்காக முழு ராணுவ அணிவகுப்பு நடத்திய ரஷ்யாவின் ஜார் பீட்டர் III

ரஷ்யாவின் ஜார் பீட்டர் III தனக்கு பிடித்த பொம்மையின் தலையை எலி கிழித்த பிறகு அதற்கு மரியாதை முழு இராணுவ அணிவகுப்பு நடத்தினார். பீட்டர் நல்ல மனநிலையில் இல்லை. அவர் பொம்மை சிப்பாய்கள் மீது மிகவும் ஆர்வமாக இருந்தார். அவரை வளர்ந்த குழந்தை என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.

இறந்த கணவரின் உடலுடன் வாழ்ந்த ராணி ஜுவானா I

இறந்த கணவரின் உடலுடன் வாழ்ந்த ராணி ஜுவானா I

1506 இல் பிலிப் தனது 28 வயதில் கடந்து இறந்தபோது, ​​ராணி ஜுவானா ஏற்கனவே அரசரின் துரோகத்தால் பலவீனமான மனநிலையில் இருந்தார். ஆனால் அவரது மறைவு அவரது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பிலிப்பின் சடலத்தை எம்பாமிங் செய்து மடாலயத்தில் அடக்கம் செய்யும் வரை அவர் இறந்த கணவரின் உடலை முத்தமிட்டார். ஆயுதமேந்திய காவலர்களால் பிலிப்பின் உடல் பாதுகாக்கப்பட்டது, அவர்களுக்கு எந்தப் பெண்ணையும் அதன் அருகே அனுமதிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டது. பிலிப்பின் உடல்1509 இல் அவரது சிறைவாசம் வரை அவரிடமே இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion