Latest Updates
-
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
இந்த 6 ராசி ஆண்களை எப்பவும் நம்பிராதீங்க... முக்கியமா கல்யாணமான ஆண்களை தெரியாமகூட நம்பிராதீங்க...!
எந்தவொரு உறவாக இருந்தாலும் அதிலிருக்கும் நேர்மைதான் அதன் உறுதித்தன்மையை நிர்ணயிக்கிறது. குறிப்பாக காதல் மற்றும் திருமணத்தில் நேர்மைதான் அந்த உறவு இறுதிவரை நிலையாக இருக்க முக்கியமானது.
எந்தவொரு உறவாக இருந்தாலும் அதிலிருக்கும் நேர்மைதான் அதன் உறுதித்தன்மையை நிர்ணயிக்கிறது. குறிப்பாக காதல் மற்றும் திருமணத்தில் நேர்மைதான் அந்த உறவு இறுதிவரை நிலையாக இருக்க முக்கியமானது. அது குறையும்போது திருமண உறவில் எண்ணற்ற சிக்கல்கள் ஏற்படத் தொடங்கும். துரதிர்ஷ்டவசமாக பலரும் இந்த நேர்மையைக் கடைபிடிப்பதில்லை.

ஆண்களைப் பொறுத்தவரை ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் துணைக்கு நேர்மையாக இருக்க மாட்டார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ராசி ஆண்களிடம் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது எந்தெந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம்
இவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள், சிறிய விஷயங்களுக்காகக் கூட அதிக உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். உறவில் ஏற்படும் சிறிய அசௌகரியம் அல்லது ஏமாற்றத்தைக் கூட இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே சண்டைகள் வரும்போது இவர்களின் மூளை குறுக்கு வழியில் வேறு உறவுகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிடும். அதே நேரத்தில், உறவு ஒரு கொந்தளிப்பான கட்டத்திற்கு சென்றாலும் அவர்கள் தங்கள் உறவைத் தக்க வைத்துக்கொள்ள கடினமாக உழைக்கிறார்கள். இதுவும் சிக்கலாக உள்ளது, ஏனெனில் ஒரு இறுக்கமான உறவை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, அவர்கள் இந்த செயல்பாட்டில் பலரை காயப்படுத்தி வழிதவறலாம்.

மிதுனம்
உறவுகளைப் பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்கள் அதிக கவனம் மற்றும் முக்கியத்துவத்தை எதிர்பார்பார்கள். அவர்களின் துணை 24 மணி நேரமும் அவர்களுக்கு கவனம் அளிக்க வேண்டும். பிரச்சனை என்னவென்றால், அது குறையும்போது, அவர்கள் வேறோருவரைக் கண்டுபிடிக்க ஆசைப்படுகிறார்கள். மிதுன ராசிக்காரர்கள் உறுதியற்றவர்கள், எனவே அவர்கள் தங்கள் விருப்பங்களைத் திறந்து வைத்திருப்பார்கள் அல்லது B திட்டத்தை தயாராக வைத்திருப்பார்கள். எனவே அவர்களின் தேவைகள் நிறைவேறாத போது அவர்கள் வேறு உறவை தேடிச்செல்வார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அதிகமாக கடலை போடுபவர்கள் மற்றும் மக்கள் அவர்களுடன் உறவில் இருக்க தயங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். இருப்பினும், இந்தக் குணம் அவர்களை வேடிக்கையாகச் சுற்றி இருக்கச் செய்கிறது, மேலும் அவர்கள் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும்போது நீங்கள் அதிக கவனத்தைப் பெறுவீர்கள். இருப்பினும், கவனமாக இருங்கள், ஏனென்றால் துலாம் ராசிக்காரர்கள் மற்ற பெண்களிடமும் அதே பாராட்டுகளையும் கவனத்தையும் எளிதில் பொழிவார்கள். அதில் பெரும்பாலானவை பாதிப்பில்லாதவையாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் அது விவகாரமானதாக மாறக்கூடும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் துரோகம் செய்யாமல் இருக்கலாம், ஆனால் காதல் மற்றும் பிற தொடர்புகளில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அவர்கள் முன்னாள் காதலியுடன் விஷயங்களை நெருக்கமாக வைத்திருக்கலாம் அல்லது அவர்களுடன் இன்னும் தொடர்பிலும் இருக்கலாம். அவர்கள் உடல்ரீதியாக உங்களை ஏமாற்றுவது அரிதாக இருந்தாலும் மனரீதியாக நிச்சயம் உங்களுக்கு துரோகம் இழைக்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில் இவர்கள் தங்கள் துணைக்கு எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் தங்கள் துணை தனக்கு உண்மையாக இல்லை என்று உணரும்போது இவர்களின் மனநிலை முற்றிலும் மாறிவிடும். தங்கள் துணை தனக்கு ஏற்படுத்திய வலியை விட நூறு மடங்கு வலியை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென்று நினைப்பார்கள், அதற்கான செயல்களிலும் இறங்குவார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் உறவின் குறிப்பிட்ட அம்சங்களைப் பார்க்கிறார்கள். இது பொதுவாக மகிழ்ச்சி, ஆதரவு மற்றும் ஸ்திரத்தன்மையை மையமாகக் கொண்டது. இருப்பினும், எந்தவொரு துணையும் இவை அனைத்தையும் எல்லா நேரத்திலும் வழங்க முடியாது. எனவே அவர்கள் வீட்டில் அதை பெறாதபோது, அவர்கள் அதை வெளியே தேடும் வாய்ப்பு உள்ளது.



Click it and Unblock the Notifications