இலட்சக்கணக்கான மக்களை கொன்ற இந்தியாவின் மோசமான கொடுங்கோல் அரசன் யார் தெரியுமா?

இந்தியாவை பல மன்னர்கள் ஆண்டிருந்தாலும் அதில் சில மன்னர்களின் பெயரே வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா என்னும் உலகின் வலிமையான நிலப்பரப்பு பூமி தோன்றிய காலம் முதல் பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்டுள்ளது. இந்தியாவின் வரலாறை எழுதும்போது அதனை ஆண்ட மன்னர்களின் பெயர்கள் கண்டிப்பாக தவிர்க்க இயலாது. அனைத்து வளங்களும் நிறைந்திருந்தாலும் இந்தியா இன்றும் முழுமையான வளர்ந்த நாடாக இல்லாமல் இருப்பதற்கு அதனை ஆண்ட ஆட்சியாளர்களும் ஒரு முக்கிய காரணம்.

Most Cruel Emperors In Indian History

இந்தியாவை பல மன்னர்கள் ஆண்டிருந்தாலும் அதில் சில மன்னர்களின் பெயரே வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஆனால் வரலாற்றில் இடம் பிடித்த அரசர்கள் அனைவரும் நல்ல அரசர்கள் என்று கூறிவிட முடியாது. ஏனெனில் மோசமான ஆட்சியாலும், கொடூரமான செயல்களாலும் இந்த பட்டியலில் இடம்பிடித்த அரசர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இதன்படி இந்தியாவில் இருந்து மோசமான அரசர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபிரூஸ் ஷா துக்ளக்

ஃபிரூஸ் ஷா துக்ளக்

ஃபிரூஸ் ஷா துக்ளக்கின் தலைவராக இருந்தார், டெல்லி சுல்தானில் சுமார் 37 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அடிமைத்தனம் அவரது ஆட்சியின் கீழ் மிகவும் பொதுவான விஷயமாக இருந்தது, அவர் இறந்தபோதும் கூட, அவருக்கு கீழ் இருந்த அனைத்து அடிமைகளும் அவரால் தூக்கிலிடப்பட்டனர். அவர் பல இந்து கோவில்களையும் அழித்தார், அவர் இஸ்லாத்தை நம்பினார் மற்றும் இஸ்லாமிய மதத்தை அனைவரின் மீதும் பலவந்தமாக திணித்தார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்களது குடும்பத்தில் உள்ள ஆண்களை கொன்ற பின்னர் தனது அடிமைகளாக்கினார். இன்றும் மோசமான ஆட்சியாளர்க்ளை துக்ளக் என்று கூறும் வழக்கம் இருக்கிறது.

புஷ்யமித்ரா ஷுங்கா

புஷ்யமித்ரா ஷுங்கா

புஷ்யமித்ரா ஷுங்கா கடைசி மௌரிய மன்னரான பிருஹத்ரதனைக் கொன்று அரியணையில் அமர்ந்தார். அவரது ஆட்சியின் போது தன்னுடைய இராஜ்ஜியத்தில் இருந்த அனைத்து புத்த மதத்தினரையும், அவர்களது கோவில்களையும் அழித்தார். இந்த கொடூரமான நடைமுறையை இவர் இறக்கும் வரை கடைப்பிடித்தார்.

மிஹிரகுலா

மிஹிரகுலா

மிஹிரகுலா ஹெப்டலைட் சாம்ராஜ்யத்திற்கு அரசனாக இருந்தார். மிஹிரகுலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது அவர் காஷ்மீர் மன்னருக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கி புத்தர்களையும் அவர்களின் மடங்களையும் அழிக்கத் தொடங்கினார். புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இன்றும் தங்கள் மதத்திற்கு மிஹிரகுலா செய்த கொடூரங்களை மறக்காமல்தான் உள்ளனர். புத்த மதத்தினரின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்பட்டவர் இவர்.

அலாவுதீன் கில்ஜி

அலாவுதீன் கில்ஜி

அலாவுதீன் கில்ஜி வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க ஆட்சியாளர்களில் ஒருவராகவும், டெல்லி சுல்தானை ஆண்டவராகவும், கில்ஜி வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மங்கோலியர்களின் மீது படையெடுத்த இவர் ஒரே நாளில் கிட்டதட்ட 30000 பேரை படுகொலை செய்தார். மேலும் அவர்களது குழந்தைகளையும், பெண்களையும் அடிமையாக மாற்றினார். இவரது ஆட்சியில் பெண்களை அடிமையாக வைத்திருப்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக இருந்தது.

அசோகர்

அசோகர்

அசோகபேரரசர் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான மன்னர்களில் ஒருவர், ஆனால் அவர் தனது ஆட்சியின் கீழ் ஒரு சித்திரவதை அறையை உருவாக்கினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான், அந்த அறை புத்த மதத்தின் நரகத்தில் சித்திரவதை செய்யும் அறையாக கருதப்பட்டது. கலிங்கத்திற்கு எதிரான போரில் இவர் இரண்டு இலட்சம் பேரைக் கொன்றார். இந்திய வரலாற்றில் மிகப்பெரிய படுகொலையாக இது கருதப்படுகிறது. அதன்பின் அசோகர் புத்த மதத்தைத் தழுவினார்.

திப்பு சுல்தான்

திப்பு சுல்தான்

ஐதர் அலியின் மகனான திப்பு சுல்தான் மைசூரின் புலி என்று அழைக்கப்படுகிறார். அவர் கோடவா இந்துக்களுக்கு எதிரானவராக இருந்தார், இவர் 85 ஆயிரம் கோடவா இந்துக்களை சிறைபிடித்து அவர்களை இஸ்லாம் மதத்தை பின்பற்றும்படி அவர்களை சித்திரவதை செய்தார். அவருடைய கொள்கையை பின்பற்றாதவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

ஒளரங்கசீப்

ஒளரங்கசீப்

ஒளரங்கசீப் முகலாயர்களின் கடைசி ஆட்சியாளராக இருந்தார், அவர் ஷாஜகானின் மூன்றாவது மகனாகவும் மிகவும் கொடூரமான பேரரசராகவும் இருந்தார். இவர் பல இந்து கோவில்களை இடித்ததுடன் இந்து கோவில்களை தொடக்கூடாது எனவும், புதிதாக இந்து கோவில்கள் எதையும் கட்டக்கூடாது எனவும் தடைவிதித்தார். அவர் தனது ஆட்சியின் கீழ் இருந்த மக்களை இஸ்லாத்தை பின்பற்றும்படி கட்டாயப்படுத்தினார், மேலும் அவர் தனது ஆட்சியின் கீழ் 5 மில்லியன் மக்களைக் கொன்றதாகவும், மேலும் தனது சொந்த தந்தையை சிறைபிடித்து சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஷாஜஹான்

ஷாஜஹான்

தாஜ்மஹால் கட்டுவதற்கு பங்களித்த ஒவ்வொரு மனிதனின் கைகளையும் ஷாஜகான் வெட்டியதாக நம்பப்படுகிறது, ஆனால் இது வெறும் கட்டுக்கதை என்று பலரும் கூறுகிறார்கள். அவர் இஸ்லாத்தின் கொள்கையைப் பின்பற்றி, தனது ஆட்சியின் கீழ் உள்ள அனைவரின் மீதும் இஸ்லாம் மதத்தை கட்டாயப்படுத்தினார், மேலும் புதிய கோவில்களைக் கட்டுவதற்கு தடை விதித்தார். மேலும் இந்து மற்றும் முஸ்லீம்களுக்கு இடையிலான திருமணத்தையும் தடை செய்தார், ஆனால் அவரின் தந்தை அக்பர் ராஜபுத்திர இந்து இளவரசியை திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்பர்

அக்பர்

இவர் ஒரு நல்ல அரசர் என்று அறியப்பட்டாலும், இவருக்கு ஒரு கொடூரமான பக்கமும் இருந்தது, அவர் சித்தோர்கரை வென்றபோது ஒரு மண்டை ஓடுகளின் மலையை உருவாக்கினார், அந்த மலையை கட்டும் பொருட்டு ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். சித்தோர்கர் மீது வெற்றி பெற்ற பின்னர் எதிரிகளின் தலைகளையும் அவர் வெட்டினார்.

சிக்கந்தர் புட்ஷிகன்

சிக்கந்தர் புட்ஷிகன்

இவர் பண்டைய வரலாற்றின் மிக மோசமான சக்கரவர்த்தியாக அறியப்படுகிறார், இஸ்லாத்தை பின்பற்றிய இவர் இந்துக்கள் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்களை வெறுத்தார். இந்துக்கள் மற்றும் புத்த மதத்தில் இறந்தவர்களை தகனம் செய்வதை நிறுத்தி, அவர்கள் மீது இஸ்லாமிய சட்டங்களை விதித்து, எந்தவிதமான இந்து நடவடிக்கைகளையும் தடைசெய்து, கோவில்களிலோ அல்லது வேறு எந்த இந்து புனித ஸ்தலங்களிலோ மக்கள் நுழைய தடை விதித்தார். இவரது கொள்கைகளுக்கு எதிராகச் சென்றவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, December 4, 2019, 12:20 [IST]
Desktop Bottom Promotion