Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
இந்த 5 ராசி பெண்களுடன் சாதாரணமாக பழகுவதே கடினமாம்.... காதலிக்கிறத பத்தி நினைச்சுக்கூட பாத்துறாதீங்க!
பொதுவாகவவே பெண்கள் நடமாடும் புதிர்கள் என்று கருதப்படுகிறார்கள். ஏனெனில் பெண்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
பொதுவாகவவே பெண்கள் நடமாடும் புதிர்கள் என்று கருதப்படுகிறார்கள். ஏனெனில் பெண்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது மிகவும் கடினம். ஒருவேளை அவர்களுடன் பழகினால் அவர்களின் மனதை ஓரளவிற்கு புரிந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்களால் பழக முடியாத சில பெண்கள் இருக்கிறார்கள்.

இந்த வகை பெண்கள் எங்கு சென்றாலும் நாடகம் மற்றும் பிரச்சனைகளை உருவாக்க விரும்புகிறார்கள். அவர்களை கையாள்வது கடினம் மட்டுமல்ல, உடன் இருப்பது மிகவும் எரிச்சலூட்டும் மற்றும் கோபத்தை உண்டாக்கும். உண்மையைச் சொல்லப் போனால், அவர்களின் ஆளுமை மட்டுமல்ல, அவர்களின் சில குணாதிசயங்களும் அவர்களை மிகவும் கடினமானவர்களாக மாற்றுகிறது. இதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் கையாளுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும் பெண்களின் ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

விருச்சிகம்
யாரேனும் இவர்களுக்குத் தடையாக நின்றால் இவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். விருச்சிக ராசி பெண்கள் கடுமையான மற்றும் கையாளும் நபர்கள், இவர்களுக்கு பயன் கிடைக்காதவரை இவர்கள் எதற்கும் அட்ஜஸ்ட் செய்ய மாட்டார்கள். இவர்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டார்கள், மற்றவர்களுக்கு நிறைய சிரமங்களை ஏற்படுத்துகிறார்கள். இவர்களை கோபப்படுத்தியவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும், ஏனெனில் இவர்கள் அவ்வளவு வன்மத்துடன் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

கும்பம்
இவர்கள் மிகவும் நட்பாகவும், பழகுவதற்கு எளிதாகவும் தோன்றலாம் ஆனால் உண்மையில் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. இவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள் என்பதால் இவர்களுடன் இருப்பது மிகவும் கடினம். இந்த ராசி பெண்கள் எதைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்பதை மக்கள் ஒருபோதும் அறிய மாட்டார்கள், இருப்பினும், கும்ப ராசி பெண்கள் அனைவரும் தங்கள் மனதில் இருப்பதை தானாகவே மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கன்னி
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் மக்களை விமர்சிப்பதன் மூலம் அவர்களை உடைக்கும் அளவுக்கு அவர்கள் மீது மிகக் கடுமையாக நடந்து கொள்ளலாம். இவர்கள் சுயநலவாதிகளாகவும், பிறருக்கு உதவாதவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இவர்கள் ஒரு நபரை தாழ்வாக உணர வைப்பார்கள், இதனால் அவர்களின் தன்னம்பிக்கையை உடைத்து அவர்களுக்கு மேலானவர்களாக இவர்களை உணர வைப்பார்கள். எப்பொழுதும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையே இலட்சியமாக கொண்டிருப்பார்கள்.

மிதுனம்
இந்த ராசி பெண்கள் கவனத்தைப் பெறாத நேரத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக இவர்கள் காயப்பட்டதாகவோ அல்லது பயப்படுவதாகவோ நடிக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து திசைதிருப்பப்படுவதால் இவர்களின் கவனத்தை தக்க வைப்பது மிகவும் கடினமானதாகும். ஆனால், இந்த விஷயத்தைப் பற்றி இவர்களிடம் சொன்னால், இவர்கள் உங்களை ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். இவர்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு நடமாடும் பேரழிவாக மாற்றுவார்கள்.

மேஷம்
இவர்கள் எப்பொழுதும் சண்டைகள், வாக்குவாதங்கள் மற்றும் மோதல்கள் போன்றவற்றில் ஈடுபட தயாராக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் மேஷம் தங்களைத் தங்கள் முதல் முன்னுரிமையாகக் கருதுகிறது. இவர்களுக்கு பொறுமை இல்லை, தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பிறர் மீது பழியை விரைவாக போடுவார்கள்.



Click it and Unblock the Notifications
