Latest Updates
-
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க! -
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
அமேசான் சம்மர் சேல்: உங்கள் வீட்டில் செல்வத்தை அள்ளித்தரும் வாஸ்து ரகசியங்கள் இதோ! -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மே 17 முதல் அடுத்த 5 மாதம் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, எடை மடமடன்னு குறையும்.. -
இன்றைய ராசிபலன் 05 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது!
இந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...!
பயம்தான் நமது பலவீனம் என்பதை உணர்ந்து அதனை தாண்டி ஒரு விஷயத்தை நாம் சாதிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை எதனுடனும் ஒப்பிட முடியாது.
நமக்கு வசதியான எல்லைக்குள் இருந்து வெளியே வருவது என்பது மிகவும் பயத்தையும், தயக்கத்தையும் தரக்கூடிய ஒன்றாகும். ஆனால் அவ்வாறு வெளியே வந்தால்தான் நம்மால் புதிய அனுபவங்களையும், எல்லைகளையும் எட்ட முடியும். இயற்கையாகவே நமக்கு தெரியாதவை நம்மை பயமுறுத்தக்கூடும். ஆனால் பயத்தைக் கடந்தால்தான் வாய்ப்புகளை பெறமுடியும் என்பது இயற்கையின் நியதி ஆகும்.

பயம்தான் நமது பலவீனம் என்பதை உணர்ந்து அதனை தாண்டி ஒரு விஷயத்தை நாம் சாதிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை எதனுடனும் ஒப்பிட முடியாது. பயமின்றி வாழும் போதுதான் நம்மை சுற்றியுள்ள வாய்ப்புகளை நம்மால் உணர முடியும். சிலருக்கு இந்த தைரியம் அவர்களின் பிறப்பில் இருந்தே வரக்கூடும். இந்த பதவில் எந்தெந்த ராசிகள் அவ்வாறு தைரியமும், துணிச்சலும் நிரந்தவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரையில் அவர்கள் அகராதியில் பயம் என்ற வார்த்தையே கிடையாது. தங்களின் எல்லைகளை தாண்டி வெளியே வர இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள். மற்றவர்கள் ஆபத்து மற்றும் அபாயங்கள் நிறைந்ததாக பார்க்கும் ஒரு விஷயத்தை இவர்கள் வாய்ப்பு மற்றும் உற்சாகம் நிறைந்த சவாலாக பார்ப்பார்கள். வசதியாக வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்வதே மகிழ்ச்சியான வழி என்று சிந்திப்பவர்கள் இவர்கள். தைரியமே வெற்றியை பெற்றுத்தரும் என்பது இவர்களின் ஆழ்மனதில் இருக்கும் நம்பிக்கையாகும்.

தனுசு
நம்பிக்கையும், பயமின்மையும் தனுசு ராசிக்காரர்களின் வலிமையான ஆயுதங்களாகும். முன்வைத்த காலை பின் வைக்காத இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு செயலையும் சவாலாகவே சந்திப்பதுடன் அதற்கான சிறப்பான முடிவையும் எதிர்பார்ப்பார்கள். அவர்கள் நினைத்தது போலவே அவர்களின் தைரியத்திற்காக அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். ஒருவேளை இவர்கள் எதிர்பார்த்தது போல முடிவு வராவிட்டால் இவர்கள் அதனை வாய்ப்பாகவும், அனுபவமாகவும் பார்ப்பார்களே தவிர தோல்வியாக எண்ண மாட்டார்கள். அவர்களின் தைரியம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.

விருச்சிகம்
மிகவும் புத்திசாலித்தனமான ராசிகளில் ஒருவரான இவர்கள் தைரியமான ராசியும் கூட. ஆபத்தை எதிர்கொள்வதுதான் உண்மையான வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள். இவர்கள் பயத்தை எதிர்கொள்வதற்கோ, தாண்டி செல்வதற்கோ இவர்களை தூண்டிவிட வேண்டிய அவசியமில்லை. இவர்களின் குறிக்கோளே இவர்களுக்கு தேவையான ஆற்றலையும், உற்சாகத்தையும் கொடுக்கும். தைரியமாக இருக்க முடியாக சூழ்நிலை இவர்களை உள்ளிருந்து கொல்லும், எனவே இவர்கள் எப்பொழுதும் தைரியமாக இருக்க முயல்வார்கள்.

சிம்மம்
இவர்கள் எப்போதாவது நிச்சயமற்ற தன்மைக்கு ஆளாக நேரிடலாம், ஆனால் சிம்ம ராசிக்காரர்கள் எப்போதுமே பெருமைமிக்க இராசியாக இருப்பார்கள். இவர்களின் ராசி அடையாளமே இவர்களுக்கு தனித்துவமான தைரியத்தையும், சிறப்பையும் கொடுக்கும். இவர்களின் ஈகோவே இவர்களின் திறன்கள் மீது மற்றவர்களுக்கு இருக்கும் சந்தேகத்தை விரட்ட போதுமானது. அனைத்து சந்தர்ப்பத்தையும் அவர்கள் தங்களை நிரூபிக்க கிடைக்கும் வாய்ப்பாக பார்ப்பார்கள், அதனால் அவர்களின் தைரியத்தை வெளிப்படுத்த இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.

கும்பம்
இவர்களின் துணிச்சலும், தைரியமும் மற்ற ராசிகளிடம் இருந்து வித்தியாசமாக வெளிப்படும். இவர்களின் ராசியில் இருக்கும் ரகசியம் என்னவெனில் இவர்களின் தனித்துவமான குணங்கள் இவர்களை இயற்கையாகவே தைரியசாலிகளாகக் காட்டும். மிகவும் சுயாதீனமாக சிந்திக்கும் இவர்கள் முற்போக்கான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறக்கூடியவர்கள். அதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள கூடியவர்கள் இவர்கள். தைரியமாக இருப்பது எப்படி என்பது மட்டுமே இவர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றாகும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அவர்களின் பாதுகாப்பற்ற உணர்வால் தைரியம் குறைவாக உள்ள ராசிக்காரர்களாக தோன்றலாம் ஆனால் இவர்களின் வீரமும், தைரியமும் யாருக்கும் குறைந்ததல்ல அதனால்தான் அவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்கள் மற்ற ராசிகளை போல நேரடி செயல்களில் ஈடுபடாவிட்டாலும் எந்த சூழ்நிலையையும் கண்டு ஓட மாட்டார்கள், மாறாக எதிர்த்து நிற்பார்கள். மற்றவர்களின் நன்மைக்காக தன்னுடைய நலனை தியாகம் செய்ய இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள். தைரியத்திலேயே மிகப்பெரிய தைரியம் இதுதான்.



Click it and Unblock the Notifications