Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
புதன் சுக்கிர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
ரிஷப ராசியில் நிகழும் புதன் சுக்கிர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.
வேத ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுக்கும் சிறப்பான முக்கியத்துவம் உண்டு. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கங்களைக் கணக்கிட்டு சுதிடர்கள் மக்களின் தலைவிதியை கணிக்கிறார்கள். கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, சில கிரகங்களுடன் இணைகின்றன. இப்படி கிரகங்கள் இணையும் போது சில யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களால் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2022 ஜூன் மாதம் இரண்டு கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது.

ஏற்கனவே ரிஷப ராசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 ஜூன் 18 ஆம் தேதி சுக்கிரன் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் புதன் சுக்கிர சேர்க்கை ரிஷப ராசியில் நிகழ்கிறது. அதுவும் ரிஷபம் சுக்கிரனின் சொந்த ராசியாகும்.

மகாலட்சுமி யோகம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பு உள்ளது. அதற்கேற்ப சுப மற்றும் அசுப பலன்களும் கிடைக்கின்றன. இதில் சுக்கிரன் மகிழ்ச்சி, காதல், இன்பம், ஆடம்பரம் போன்றவற்றை வழங்கும் கிரகமாக கருதப்படுகிறது. புதன் பேச்சு, தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம், வணிகம் மற்றும் பகுத்தறிவு திறன் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ரிஷப ராசியின் புதன் சுக்கிர சேர்க்கை நிகழும் போது மங்களகரமான யோகமான மகாலட்சுமி யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தை லட்சுமி நாராயண யோகம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

நற்பலன்களை அள்ளித்தரும் சுப யோகம்
ஜோதிடத்தில் மகாலட்சுமி யோகம் ஒரு சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த யோக பலன் உள்ளவர்கள் வாழ்க்கையில் அனைத்துவிதமன மகிழ்ச்சியையும், புகழையும் எளிதில் பெறுவார்கள். ரிஷப ராசியில் நிகழும் புதன் சுக்கிர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
புதன் சுக்கிர யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். உங்கள் ஜாதகத்தின் இரண்டாவது வீட்டில் இந்த யோகம் உருவாவதால், பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் திடீரென்று லாபம் கிடைக்கும். இதனால் நிதி நிலைமை மேம்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிலத்தை விற்பதன் மூலம் நிறைய பணம் கிடைக்கும். பணியிடத்தில் புகழ் உயரும். மொத்தத்தில் இக்காலம் சாதகமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கையால் மகாலட்சுமி யோகம் உருவாகிறது. இந்த வீடு வேலை தொடர்புடையது. ஆகவே இக்காலத்தில் புதிய வேலை சலுகைகளைப் பெற வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மறுபுறம் வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் மகாலட்சுமியின் அருளும் சிம்ம ராசிக்காரர்களுக்கு உண்டு. எனவே இந்த காலத்தில் எந்த ஒரு காரியத்தை முயற்சி செய்தாலும், அதில் சிறப்பான வெற்றி கிடைக்கும்.

கன்னி
புதன் சுக்கிர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். கௌரவம் அதிகரிக்கும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் ஜாகத்தில் 11 ஆவது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகிறது. ஆகவே உங்களின் வருமானம் அதிகரிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வு கிடைக்கும் வலுவான வாய்ப்புள்ளது. வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புக்களும் உருவாகும்.



Click it and Unblock the Notifications
