Latest Updates
-
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் அடுத்த 68 நாட்கள் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
புதனின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரித்து, வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். ரிஷபம் செல்லும் புதனால் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சி பெருகப் போகிறது?
கிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே கிரகங்களின் நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அது அனைத்து ராசிகளையும் பாதிக்கின்றன. அதில் புத்திகாரகனான புதன் நவகிரகங்களிலேயே நடுநிலை கிரகமாக கருதப்படுகிறார். இத்தகைய புதன் மேஷ ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் புதன் 2022 ஏப்ரல் 25, அதாவது இன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறியுள்ளார்.

புதனின் இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரித்து, வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். இப்போது ரிஷபம் செல்லும் புதனால் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சி பெருகப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
இந்த புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல சிறப்பான பலனைத் தரப் போகிறது. இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். வருமான உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் திறமையான பேச்சால் பல விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். மார்கெட்டிங், ஊடகம் மற்றும் கல்வி போன்றவற்றில் இருப்போருக்கு பெரிய வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் எதிரிகளை எளிதில் வீழ்த்தி வெற்றி காண்பார்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்
புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலத்தில் தொழில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தத்தால் பெரிய லாபம் கிடைக்கும். வாகனம் அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி காலம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குறிப்பாக இக்காலத்தில் அதிக பணம் சம்பாதிகும் வாய்ப்பு கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் விருப்பம் நிறைவேறும். பணியிடத்தில் சம்பள உயர்வுக்கான வாய்ப்புள்ளது. புதிய முதலீடு செய்வதற்கு சாதகமான காலம் இது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். எந்தவொரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் 68 நாட்களும் நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. வேலை மற்றும் வியாபாரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். எங்கேனும் பணம் சிக்கியிருந்தால், இக்காலத்தில் அது கிடைக்கும். மொத்தத்தில் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

கன்னி
இந்த புதன் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவார்கள். இக்காலத்தில் செலவுகள் அதிகரித்தாலும், வருமானமும் அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் உங்களின் மரியாதை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலனைத் தரப் போகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும் மற்றும் வேலையில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். புதிய வேலைகளைத் தொடங்க இது நல்ல காலம்.



Click it and Unblock the Notifications
