Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
2022 டிசம்பர் 03 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்கு செல்லும் போது பத்ர ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறவுள்ளார்கள்.
ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அது மனித வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பாதிப்பை நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். அதில் புத்திகாரகனான புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் முதலாவதாக 05 ஆம் தேதி புதன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறவுள்ளார். அதன் பின் டிசம்பர் 28 ஆம் தேதி மகர ராசிக்கு செல்லவுள்ளார்.

இதில் புதன் தனுசு ராசிக்கு செல்லும் போது பத்ர ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக இந்த ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரும். இப்போது தனுசு ராசியில் புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் எந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்
பத்ர ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சூப்பராக இருக்கும். ஏனெனில் இந்த ராஜயோகம் ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இது வயது மற்றும் மறைமுக நோய்களுக்கான வீடாகும். எனவே இந்த யோக காலத்தில் இதுவரை பாடாய் படுத்திய நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சொத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதை இக்காலத்தில் வாங்குவது நல்லது. வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

மிதுனம்
பத்ர ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. இந்த யோகத்தின் போது மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் இருப்பார். இது திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மையின் வீடாகும். எனவே இக்காலத்தில் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். திருமணமானவர்களுக்கு இக்காலம் சூப்பராக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பத்ர ராஜயோகம் அபரிமிதமான பலன்களைத் தரப்போகிறது. ஏனெனில் புதன் மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது வேலை மற்றும் பணியிடத்திற்கான வீடாகும். இதனால் வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இக்காலம் லாபகரமாக இருக்கும். முதலீடு செய்ய இது ஏற்ற காலமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டம் இக்காலத்தில் ஆதரவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications