Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
புதனின் வக்ர நிலையால் 2023 புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமா இருக்கப்போகுது..
வக்ர நிலையில் இருக்கும் புதனால் 2023 ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் ஞானத்தை வழங்குபவர் தான் புதன். இந்த புதனின் நிலை மிகவும் முக்கியமானது. ஏனெனில் புதன் நல்ல நிலையில் இருந்தால் தான், அவரது தகவல் தொடர்பு திறன் சிறப்பாக இருக்கும், எதையும் நன்கு கற்க முடியும் மற்றும் எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக கையாள முடியும். அதுவே புதன் மோசமான நிலையில் இருந்தால், அவரால் எதையும் சிறப்பாக கையாள முடியாமல் திணறுவார்கள்.

இந்த புதன் 2022 ஆம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி மகர ராசியில் இருந்து வக்ர நிலையில் தனுசு ராசிக்கு செல்கிறார். கிரகங்கள் வக்ர நிலையில் கெடுபலன்களை அதிகம் வழங்கும் என்பார்கள். ஆனால் வக்ர நிலையில் இருக்கும் புதனால் 2023 ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

புதனின் முக்கியத்துவம்
ஜோதிடத்தில் புதன் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. புதன் புத்திசாலித்தனம், அறிவு, தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மேலும் பல நற்பலன்களும் கிடைப்பதாக நம்பப்படுகிறது. அதே வேளையில், புதன் அசுப நிலையில் இருந்தால், பல இழப்புக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இப்போது வக்ர புதனின் நிலையில் 2023-ல் எந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மிதுனம்
ராசிநாதனான புதன் வக்ர நிலையில் இருப்பதால், மிதுன ராசிக்காரர்கள் பல சாதககமான பலன்களைப் பெறப் போகிறார்கள். தொழில் மற்றும் பணியிடத்தில் பல முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும் மற்றும் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் அனுசரித்து நடந்து கொள்வார்கள்.

கடகம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, வக்ர புதனின் நிலையால் கடக ராசிக்காரர்களும் பல நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் துறைகளில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அதே வேளையில், தொழிலில் நல்ல லாபமும், வெற்றியும் கிடைக்கும்.

துலாம்
புத்தாண்டின் தொடக்கத்தில் புதன் வக்ர நிலையில் இருப்பதால், துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். முக்கியமாக பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள், நல்ல முடிவுகளை இக்காலத்தில் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
