Latest Updates
-
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம்
Budh Gochar 2023: மகரம் செல்லும் புதனால் இன்று முதல் பிப்ரவரி 27 வரை இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
புதன் தற்போது தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி சனி ஆளும் மகர ராசிக்கு புதன் செல்கிறார். இந்த மகர ராசியில் 20 நாட்கள் வரை புதன் பயணிப்பார்.

நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி, அதாவது இன்று சனி ஆளும் மகர ராசிக்கு செல்கிறார். இந்த மகர ராசியில் 20 நாட்கள் வரை புதன் பயணிப்பார். அதன் பின் புதன் 2023 பிப்ரவரி 27 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்வார். புதன் மகர ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். இப்போது புதன் மகர ராசிக்கு செல்வதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வியாபாரிகளுக்கு இந்த பெயர்ச்சியானது நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் அதிக வேலைச்சுமையையும், அதிக செலவுகளையும் சந்திக்க நேரிடும். இதுவரை சொத்து விஷயங்களில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது இக்காலத்தில் முடிவுக்கு வரும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் வேலை மாற்றம் அல்லது இடமாற்றத்தை விரும்பினால், அதற்கு இக்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். வெளிநாட்டில் வேலை செய்ய அல்லது வெளிநாட்டில் குடியேற விரும்பினால், இக்காலத்தில் அதற்கு முயற்சி எடுத்தால் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள். நீதிமன்றம் தொடர்பான விவகாரங்களை வெளியே தீர்த்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் இக்காலத்தில் நீங்கும். கூட்டுத் தொழில் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும் என்று கூற முடியாது. ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இக்காலகட்டத்தில் பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள், இக்காலத்தில் முயற்சித்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். மாணவர்கள் இக்காலத்தில் தேர்வுகள் மற்றும் போட்டியில் வெற்றியைப் பெறுவார்கள்.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் துலாம் ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பதோடு, பல இனிமையான பலன்களையும் வாரி வழங்குவார். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அதிக செலவுகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிகப்படியான தைரியத்தால், கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிக தொண்டுகளை செய்வீர்கள். விசாவிற்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அது கிடைக்கும். பிள்ளைகளின் பொறுப்புக்களை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் நிதி நிலை வலுபெறும. சிக்கிய பணம் இக்காலத்தில் திரும்ப கிடைக்கும். ஆடம்பர பொருட்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். பேச்சால் மற்றவர்களை கவர்வீர்கள். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் கௌரவம் அதிகரிப்பதோடு, நிதி நிலையும் வலுபெறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். உங்களின் பணிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் உங்களை வீழ்த்த நினைத்தவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். சண்டைகளில் இருந்து விலகி இருங்கள். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது. இக்காலத்தில் வெளிநாடு செல்ல விசா விண்ணப்பித்தால், அது விரைவில் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல முடிவைப் பெற கடினமாக உழைக்க வேண்டும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications