Latest Updates
-
10,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் தோன்றிய முதல் காய்கறி எது தெரியுமா? இப்போதும் நாம இதை சாப்பிடுறோம் -
வெயில் கொடுமையா? இந்த எளிய வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா போதும், வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கன் வறுவல் ரெசிபி - ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க..
மகரத்தில் புதன் இருப்பதால் பிப்ரவரி மாதம் இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசிக்கு எப்படி?
நவகிரகங்களில் புத்திகாரகனான புதன் இதுவரை மகர ராசியில் வக்ர நிலையில் பயணித்து வந்தார். இந்நிலையில் புதன் 2022 பிப்ரவரி 04 அம் தேதி காலை 9.16 மணிக்கு நேர்கதியில் திரும்பி மகர ராசியில் பயணிக்கவுள்ளார்.
நவகிரகங்களில் புத்திகாரகனான புதன் இதுவரை மகர ராசியில் வக்ர நிலையில் பயணித்து வந்தார். இந்நிலையில் புதன் 2022 பிப்ரவரி 04 அம் தேதி காலை 9.16 மணிக்கு நேர்கதியில் திரும்பி மகர ராசியில் பயணிக்கவுள்ளார். புதன் நேர்பாதையில் பயணிப்பதால், இக்காலத்தில் தன்னம்பிக்கை மற்றும் பகுப்பாய்வு திறன்கள் மேம்படும். வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பரம்பரை அல்லது எதிர்பாராத ஆதாரங்கள் மூலம் நிதி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் புதிய தொழில் செய்து கொண்டிருந்தாலோ அல்லது புதிதாகத் தொழில் தொடங்கியிருந்தாலோ, இந்தக் காலத்தில் செழிப்பாக இருக்கும்.

இப்போது 2022 பிப்ரவரி மாதம் புதன் நேர்கதியில் மகர ராசியில் பயணிப்பதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் தொழிலில் வளர்ச்சியைக் காணலாம். வியாபாரிகள், மிதமான லாபத்தைக் காணலாம். ஒரு காதல் உறவில், பரஸ்பர புரிதலில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இக்காலத்தில் நீங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வேலையில் அதிக கவனம் செலுத்துவதால், உங்கள் குடும்பத்திற்காக அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் காரணமாக உங்கள் கால்களில் வலி ஏற்படலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் தொழில் வாழ்க்கையில் நீங்கள் அதிர்ஷ்டம் அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் வியாபாரத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் நல்ல வெற்றியைக் காணும் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள்.உங்கள் வாழ்க்கைத் துணையின் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிக ஆற்றலுடன் நிறைந்திருப்பீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் தொழிலில் சில தடைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் வேலைகளில் தாமதம் ஏற்படலாம். வணிகர்கள் பின்னடைவை சந்திக்க நேரிடும். பண விஷயத்திலும், அதைப் பாதுகாப்பாகக் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே தவறான புரிதல் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் கண்களை பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் உங்கள் தொழில் மற்றும் வேலை முன்னணியில் மிதமான முடிவுகளை சந்திக்க நேரிடும். தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உங்களின் வேலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுவதற்கான நேரம் இதுவாக இருக்காது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவுப் பழக்கத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் நல்ல வேலை வாய்ப்பு காரணமாக, நீங்கள் உங்கள் தொழிலில் வெற்றியை சந்திப்பீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரிகள் வெற்றி பெறுவார்கள். இக்காலத்தில் உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிக அளவிலான உற்சாகத்தால் ஆற்றலுடன் இருப்பீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் உங்கள் வேலையைக் கையாளும் போது நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கை துணையுடன் ஈகோ தொடர்பான பிரச்சனைகளால் குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் பெரும்பாலும் நன்றாக இருப்பீர்கள். மன அழுத்தத்தைத் தவிர பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் பதவி உயர்வு பெறுவது போன்ற தொழிலில் நன்மையான முடிவுகளைப் பெறுவீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். புதிய வணிகத் தொடர்புகளையும் வளர்த்துக் கொள்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருப்பீர்கள். இருப்பினும், ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் தொழில் வளர்ச்சியில் சில தாமதங்களை சந்திக்க நேரிடலாம். வேலை அழுத்தம் அதிகமாக இருக்கலாம். அதன் காரணமாக வேலையை மாற்ற விரும்புவீர்கள். வியாபாரத்தில் இருந்தால், நீங்கள் சில நஷ்டங்களை இழக்க நேரிடலாம். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே சரியான தகவல்தொடர்பு இல்லாமையால் பிரச்சனைகள் வரக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, போதுமான நோயெதிர்ப்பு சக்தி இல்லாமையால் முதுகு வலியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் நிதி தொடர்பாக சற்று சிரமமாக இருக்கும். தொழிலைப் பொறுத்தவரை, நீங்கள் சரியான நேரத்தில் வேலையை முடிக்கக்கூடிய வகையில் உங்கள் வேலையை திட்டமிட வேண்டியிருக்கும். வணிகர்கள் மிதமான லாபத்தையே பெறக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்களை பரிசோதிக்க வேண்டியிருக்கும்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் நல்ல தருணங்களையும் வாய்ப்புகளையும் பெறுவீர்கள். வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வணிகர்கள் லாபத்தை பெறலாம். இக்காலத்தில் பண வரவு உங்களுக்கு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிக ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் இருப்பதால் உங்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் தொழிலில் மிதமான முடிவுகளைக் காண்பீர்கள். வணிகர்கள் அதிக லாபத்தைப் பெற முடியாது. அப்படியே பெற்றாலும், அது பாதுகாப்பாக இருக்காது. இந்த காலத்தில் பணப்புழக்கம் சீராக இருக்காது. உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் வேலையைப் பொறுத்தவரை நல்ல வெற்றியைக் காண்பீர்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்புள்ளது. புதிய நல்ல யோசனையுடன் இருப்பீர்கள். புதிய வணிக முயற்சிகளில் இறங்குவீர்கள் மற்றும் அதை விரிவுபடுத்துவீர்கள். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவைப் பேணுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications