Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
புதன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு அடுத்த 20 நாள் அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
கிரகங்கள் அஸ்தமனமானால் நற்பலன்களை விட கெடு பலன்களே அதிகம் கிடைக்கும் என்பார்கள். ஆனால் 2022 மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் அஸ்தமனமாகும் புதனால் 4 ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன.
ஜோதிடத்தில், புத்தி, செல்வம், வியாபாரம் போன்றவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இத்தகைய புதன் ஏற்கனவே கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் மாதத்தில் புதன் அஸ்தமனமாகிறார். பொதுவாக கிரகங்கள் ராசியை மாற்றுவதால் மட்டுன்றி, அந்த கிரகங்களில் ஏற்படும் சிறு மாற்றமும் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்கள் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, சில கிரகங்கள் அஸ்தமனம் மற்றும் உதயம் ஆகும்.

கிரகங்கள் அஸ்தமனமானால் நற்பலன்களை விட கெடு பலன்களே அதிகம் கிடைக்கும் என்பார்கள். ஆனால் 2022 மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் அஸ்தமனமாகும் புதனால் 4 ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார், எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

புதன் அஸ்தமனம்
புதன் 2022 மார்ச் 06 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். அதன் பின் 2022 மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் புதன் அஸ்தமனமாகிறார். பொதுவாக கிரக அஸ்தமனம் நல்ல விளைவுகளைக் கொடுக்காது. ஆனால் இந்த புதன் அஸ்தமனம் 4 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வாரி வழங்கப் போகிறது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த புதன் அஸ்தமனத்தால் பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பணம் அதிகம் சம்பாதிப்பீர்கள். எந்த ஒரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களாக இருந்தால், இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். வணிகர்களுக்கு சாதகமான காலம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! புதன் அஸ்தமனமாகும் இக்காலத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் கௌரவம் இக்காலத்தில் அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமாக இருக்கும். தாம்பதிய வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவாகவும் சாதகமாகவும் இருக்கும். இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் இக்காலத்தில் முடிவுக்கு வரும். முதலீடு செய்வதற்கு இக்காலம் மிகச்சிறந்த காலமாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த புதன் அஸ்தமன காலத்தில் உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலதிபர்கள் ஏதேனும் புதிய தொழிலைத் தொடங்க நினைத்தால், அதை ஆரம்பிக்க இது சிறந்த காலம். பழைய பண பரிவர்த்தனை பிரச்சனைகளை சரிசெய்ய இது நல்ல காலமாகும்.



Click it and Unblock the Notifications
