Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு வலிமையானவங்கனு அவங்களுக்கே தெரியாதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஒருவரின் பிறந்த ராசியைக் கொண்டு அவர்களின் ஆளுமைகளின் நுணுக்கங்களை அலசுவதன் மூலம் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
சிலருக்கு மிகவும் அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் சூழ்நிலைகளைத் தீர்க்கும் திறன் உள்ளது. அவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் அல்லது காயப்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் ஒரு குழப்பத்தை உருவாக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். இதற்கு மன உறுதியும், நிலைத்தன்மையும் தேவைப்படும், அது மன வலிமையுள்ளவர்களிடம் மட்டுமே இருக்கும்.

ஒருவரின் பிறந்த ராசியைக் கொண்டு அவர்களின் ஆளுமைகளின் நுணுக்கங்களை அலசுவதன் மூலம் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். எனவே மனதளவில் வலிமையான, ஆனால் அதைப் பற்றி எதுவும் தெரியாத ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அவர்களின் மனவலிமையை உணரவில்லை ஆனால் அவர்கள் அதில் மிகவும் தலைசிறந்தவர்கள். எவ்வாறானாலும் பிறரால் மாற்ற முடியாத அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். கன்னி ராசிக்காரர்கள் தனக்காக நிற்பதன் முக்கியத்துவத்தை அறிவார்கள், எனவே அவர்கள் எப்போதும் அனைவருக்கும் மேலாகவும், வலுவாகவும் இருப்பதை உறுதி செய்கிறார்கள்.

சிம்மம்
அவர்கள் மிகவும் தலைசிறந்தவர்கள் மற்றும் புத்திசாலிகள். அவர்கள் உண்மையிலேயே பெரிய விஷயம் எது நடந்தாலும் அமைதியாக இருக்கும் சகிப்புத்தன்மை அவர்களுக்கு இருக்கிறது. தீர்வுக்காக பொறுமையாக காத்திருப்பார்கள், பிறகு தேவைப்படும்போது நடவடிக்கை எடுப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டவர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்கள் தங்களைக் காட்டிக்கொடுக்கும் போது மிகவும் வேதனைப்படுகிறார்கள், ஆனாலும் அவர்களின் மனஉறுதியில் எந்த மாற்றமும் இருக்காது. அவர்கள் முடிவெடுப்பதால் யாருக்கும் எந்த சிரமமும் ஏற்படாத வகையில் அவர்கள் நிச்சயமாக சிறந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். இருப்பினும், விருச்சிக ராசிக்காரர்கள் மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது.

தனுசு
தனுசு ராசி மிகவும் வலுவான ராசிகளில் ஒன்றாகும். அவர்கள் சுதந்திரமானவர்கள் மற்றும் அவர்களின் சிறந்த துணையாக அவர்களே இருப்பார்கள். அதைப் பற்றிய அகங்காரமோ பெருமையோ அவர்களிடம் இல்லை. அவர்களின் கடினமான, சுதந்திரமான இயல்பு மற்றும் அவர்கள் விரும்பியதைச் செய்யும் திறனுக்காக எல்லோரும் அவர்களைப் போற்றுகிறார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மற்றவர்கள் தங்கள் முடிவை பாதிக்க விடமாட்டார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால், அதை இறுதிவரை கடைப்பிடிப்பார்கள். அவர்கள் குறிப்பாக யாரையும் சார்ந்திருப்பவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் ஒழுக்கம் மற்றும் விழுமியங்களில் மிகவும் கண்டிப்பானவர்கள்.

மனவலிமையை உணர்ந்த ராசிகள்
மிதுனம், கடகம், ரிஷபம், கன்னி, துலாம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள், அது அவர்களுக்குத் தெரியும். சில நேரங்களில் அவர்கள் மற்றவர்களுக்கு முன்னால் தங்கள் திறன்களைப் பற்றி பெருமை கொள்ள விரும்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications











