Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
சூரியன் மீன ராசிக்கு செல்வதால் இன்று முதல் அடுத்த ஒரு மாதம் இந்த ராசிக்காரர்களின் பிரச்சனை அதிகரிக்கும்...!
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். பொதுவாக சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நுழையும் நாள் சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். பொதுவாக சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நுழையும் நாள் சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சூரியன் மீன ராசிக்குள் நுழையும் நாள் மீன சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.

ஜோதிடத்தில் சூரியன் நவகிரகங்களின் ராஜா என்றும், ஆன்மாவின் கிரகம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய சூரியன் தனது நண்பரான வியாழன் என்னும் குரு பகவானின் ராசிக்குள் நுழைவதால், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் நிச்சயம் காணப்படும். குறிப்பாக இந்த சூரிய பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மீன ராசிக்குள் சூரியன் நுழைவதால், மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படும். மாணவர்களின் தன்னம்பிக்கை குறையும். இதனால் மாணவர்கள் படிப்பில் தீவிரமாக இருக்கமாட்டார்கள். முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இது சரியான காலம் அல்ல. ஒருவேளை முதலீடு செய்தால், நிதி இழப்பை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால் நிதி பிரச்சனையை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இக்காலத்தில் பேசும் போதும், உங்கள் நடத்தையிலும் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
சூரியன் மீன ராசிக்கு செல்வதால், கடக ராசிக்காரர்களுக்கு இக்காலம் சவால் நிறைந்ததாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமத்தை சந்திக்கலாம். மாணவர்கள் படிப்பில் சில தடைகளை சந்திக்கக்கூடும். கடின உழைப்பு இக்காலத்தில் நல்ல பலனைத் தராது. எங்கேனும் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை சற்று ஒத்தி வையுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மீன ராசிக்கு செல்வதால், இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மோசமடையக்கூடும். குறிப்பாக பெரியவர்களுடனான உறவு மோசமாகும். ஏனெனில் இக்காலத்தில் நீங்கள் மிகவும் கோபமாக இருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தையும், குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். நிதி நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், நிதி பிரச்சனையை சந்திப்பீர்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

தனுசு
இந்த சூரிய பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நன்றாக இல்லை. பங்குச் சந்தை மற்றும் ஊக சந்தைகளுடன் தொடர்புடையவர்கள் இக்காலத்தில் பண இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே முதலீடு செய்யும் போது அல்லது எந்த ஒரு பரிவர்த்தனை செய்யும் போதும் கவனமாக இருங்கள். இந்த காலகட்டத்தில், தனிப்பட்ட வாழ்க்கையில் சில திடீர் பிரச்சினைகளை சந்திக்கலாம். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பாதுகாப்பற்றதாக உணர்வார்கள். அதற்காக வேலையை மாற்ற இக்காலம் சரியானது அல்ல.

கும்பம்
சூரியன் மீன ராசிக்கு செல்வதால், கும்ப ராசிக்காரர்களுக்கு இக்காலம் சற்று வேதனை நிறைந்ததாக இருக்கும். உங்கள் செலவுகள் அதிகரிப்பதால் வருமானத்தைப் பற்றி கவலைப்படுவீர்கள். எனவே செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது. குறுக்குவழியில் சம்பாதிக்க முயற்சிக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் சாதகமாக இல்லை. திடீரென்று சோர்வாகவும், பலவீனமாகவும் உணர்வீர்கள். இதனால் எந்த வேலையையும் செய்ய இது கடினமாக இருக்கும். அதே வேளையில் இதுவரை பாதிக்கப்பட்ட நோய்களால் மீண்டும் பாதிக்கப்படலாம். இதனால் உங்கள் நம்பிக்கை சற்று குறைய ஆரம்பிக்கும்.



Click it and Unblock the Notifications
