Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
நோய்க்கு காரணம் எல்லாம் கிரகக் கோளாறுதான் - பரிகாரம் இருக்கு
மனிதராக பிறந்த எல்லோருக்குமே ஏதாவது ஒரு கால கட்டத்தில் நோய்கள் ஏற்படும். சில நோய்கள் எளிதில் குணமாகிவிடும். சில நோய்கள் அறுவை சிகிச்சை வரை கொண்டு போய் விடும். ஜாதகத்தில் நவகிரகங்கள் சரியில்லாத நிலையில
நவகிரகங்களும் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களை கட்டுப்படுத்துகின்றன. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். ராகு கேது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் மனித உடம்பின் பாகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. எந்த கிரகம் பாதிக்கப்படுகிறதோ அந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உடலின் பாகம் பாதிக்கப்படும்.

தலை, இருதயம் சூரியனின் கட்டுப்பாட்டிலும், முகம், தொண்டை சந்திரன் கட்டுப்பாட்டிலும், கைகள், தோள்கள் செவ்வாயின் கட்டுப்பாட்டிலும், மார்பு புதன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. வயிறு, உடல் தோல் பாகம் குருவின் ஆதிக்கத்திலும் அடிவயிறு, பிறப்பு உறுப்பு சுக்கிரன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அதே போல தொடை, கால்,பாதம் சனியின் ஆதிக்கத்தின் கீழும் வரும். இராகு, கேதுக்கள் நிழர் கிரகம் என்பதால் மனித உடலில் இடம் கொடுக்கப்படவில்லை.

கிரகக் கோளாறுகள்
ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஆறாம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். ஒருவருக்கு எப்படிப்பட்ட நோய் வரும், அந்த நோய் எளிதில் தீருமா, அல்லது கடனாளி ஆக்கி விடுமா என்று ஆறாமிடத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நவகிரகங்களில் எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் என்ன நோய் வரும் என்று பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்தால் நோய்களில் இருந்து குணமடையலாம். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு கேது என நவகிரகங்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்த செய்யும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

சூரியன் - சந்திரன்
ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டால் மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை ஏற்படும். சந்திரன் பாதிக்கப்பட்டால் மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் ஏற்படும்.

செவ்வாய் - புதன்
செவ்வாய் பாதிக்கப்பட்டால் மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிக்கப்படும். புதன் பாதிக்கப்பட்டால் இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் ஏற்படும்.

குரு, சுக்கிரன், சனி
குரு பாதிக்கப்பட்டால் தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு நோய் ஏற்படும். சுக்கிரன் பாதிக்கப்பட்டால் கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படும். சனி பாதிக்கப்பட்டால் மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிக்கப்படும்.

ராகு - கேது
ராகு பாதிக்கப்பட்டால் அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் ஏற்படும். அதுவே கேது பாதிக்கப்பட்டால் புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு ஏற்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி
ஜாதகத்தில் 6 ஆம் பாவாதிபதியுடன் எந்த கிரகம் சேர்க்கை பெற்று இருந்தாலும் அந்த கிரகத்திற்குரிய நோய்கள் வரக்கூடும். ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நவகிரக வழிபாடு அவசியம். முக்கியமாக குரு, சூரியனை வழிபட வேண்டும். உடல் கட்டமைப்பு மற்றும் எலும்பின் காரகர் சனி பகவான் ஆவார். அவர் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருந்தாலே நோய்கள் எட்டிப்பார்க்காது.

குல தெய்வ வழிபாடு
உடம்பில் நோய் பாதிப்பு குறைந்து நோய் எதிர்ப்பாற்றல் பெற குல தெய்வ வழிபாடு அவசியம். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். அமாவாசை நாட்களில் பித்ரு வழிபாடு எனும் முன்னோருக்கு செய்யும் திதிகளை சரியாக செய்தாலே நோய்கள் பாதிப்பு ஏற்படாது.

சூரிய நமஸ்காரம்
தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும். நோய்களில் இருந்து தப்பிக்க குரு, சூரியன் சந்திரன் இவர்களை வழிபடுவது சிறந்த பலனளிக்கும். தேவ மருத்துவரான தன்வந்திரி வழிபாடு மிகச்சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் தன்வந்திரி வழிபாடு செய்யலாம்.



Click it and Unblock the Notifications
