Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் தரித்திர யோகம்: இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்...
2022 அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். அப்படி செல்லும் போது தரித்திர யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் 4 ராசிக்காரர்கள் சற்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் அல்லது கிரகங்களின் சேர்க்கை மனித வாழ்வில் மட்டுமின்றி உலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். இப்படி மாறும் போது, அதன் விளைவாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கும்.

அந்த வகையில் 2022 அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். அப்படி செல்லும் போது தரித்திர யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனால் இந்த யோகத்தால் 4 ராசிக்காரர்கள் சற்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம் வாருங்கள்.

ரிஷபம்
இந்த தரித்திர யோகம் மிகவும் வேதனை நிறைந்ததாக இருக்கும். ஏனெனில் செவ்வாய் செவ்வாய் பெயர்ச்சியின் போது முதல் வீட்டில் சுப கிரகம் இல்லாததால், ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் வலுவிழந்து இருப்பார். இதன் விளைவாக பண இழப்பை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சற்று மெதுவாகவே நடக்கும். இக்காலத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் சிரமப்படுவீர்கள்.

சிம்மம்
இந்த செவ்வாய் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிக பிரச்சனைகளை உருவாக்கும். மேலும் இந்த ராசியின் அதிபதியான சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி துலாம் ராசிக்கு செல்வார். அதோடு முதல் வீட்டில் சுப கிரகம் எதுவும் இல்லை. எனவே இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதிர்ஷ்டம் சற்று குறைவாகவே இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் எந்த லாபத்தையும் பெற முடியாமல் அவதிப்பட நேரிடும்.

விருச்சிகம்
செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் தரித்திர யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய் எதிரி ராசியில் உள்ளார். இதனால் தரித்திர யோகம் உருவாகிறது. அதே வேளையில் கேதுவின் 9 ஆவது அம்சமும் விழுகிறது. மேலும் மையத்தில் எந்த ஒரு சுப கிரகமும் இல்லை. ஆகவே இக்காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்காதீர்கள். பரிவர்த்தனைகளில் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் வருமானம் சற்று குறைவாகவே இருக்கும்.

கும்பம்
தரித்திர யோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் சற்று அதிகம் பாதிக்கப்படலாம். ஏனெனில் உங்கள் ராசிநாதனான சனி பகவான் 12 ஆவது வீட்டில் உள்ளார். மேலும் மையத்தில் எந்த ஒரு சுப கிரகமும் இல்லை. அதிர்ஷ்ட ஸ்தானத்தின் அதிபதியான சுக்கிரன் பலவீனமான நிலையில் உள்ளார். ஆகவே இக்காலத்தில் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இக்காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காது. மேலும் குழந்தைகளைப் பற்றிய கவலை சற்று அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications