Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மிதுனம் செல்லும் செவ்வாயால் மே 10 வரை இந்த 3 ராசிக்காரங்க எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவாங்க..
செவ்வாய் 2023 மார்ச் 13 ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்கிறார். மிதுனம் செல்லும் செவ்வாயின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
Mars Transit In Gemini On 13 March 2023: நவகிரகங்களில் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். செவ்வாய் ஒரு ராசியில் குறைந்தது 45 நாட்கள் வரை பயணிப்பார். இந்த செவ்வாய் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தி வக்ர நிலையில் ரிஷப ராசியில் பயணித்து வந்தார். அதன் பின் ஜனவரி 13 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் ரிஷப ராசியில் பயணிக்கத் தொடங்கினார். தற்போது ரிஷப ராசியில் செவ்வாயின் பயணம் முடிவுக்கு வரப்போகிறது.

அதாவது செவ்வாய் 2023 மார்ச் 13 ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் மே 10 ஆம் தேதி வரை இருப்பார். மிதுனம் செல்லும் செவ்வாயின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், அரசு வேலையைப் பெறும் வாய்ப்பையும் பெறுவார்கள். இப்போது மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த செவ்வாய் பெயர்ச்சியானது மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. குறிப்பாக தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள். வேலை இல்லாதவர்களுக்கு புதிய மற்றும் விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் சம்பள உயர்வைப் பெறலாம். வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த செவ்வாய் பெயர்ச்சி காலமானது கன்னி ராசிக்காரர்கள் சாதகமாக இருக்கும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் பணிபுரிபவர்கள் இடமாற்றத்தை விரும்பினால், இக்காலத்தில் அது நடக்க வாய்ப்புள்ளது. இது தவிர தங்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். முக்கியமாக இக்காலத்தில் நிதி நிலையானது வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியானது மங்களகரமானதாக இருக்கும். அனைத்துவிதமான சுகங்களையும் இக்காலத்தில் பெறக்கூடும். மேலும் செவ்வாயின் பார்வை 10 ஆவது வீட்டில் விழுவதால், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் புதிய வேலை கிடைக்கும். நீண்ட காலமாக போட்டி தேர்வுகளை எழுதி வருபவர்கள், இக்காலத்தில் அந்த தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
