Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது...
Mangal Rashi Parivartan 2022: செவ்வாய் மகர ராசிக்கு செல்வதால் இந்த ராசிக்காரங்க மிகவும் கவனமா இருக்கணும்...
மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் ஒரு உமிழும் கிரகம். இத்தகைய செவ்வாய் தனுசு ராசியில் இருந்து வெளியேறி, மகர ராசிக்கு பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 02.46 மணிக்கு இடம் பெயர்கிறார்.
மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் ஒரு உமிழும் கிரகம். இத்தகைய செவ்வாய் தனுசு ராசியில் இருந்து வெளியேறி, மகர ராசிக்கு பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 02.46 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்த ராசியில் செவ்வாய் ஏப்ரல் 07 ஆம் தேதி வரை இருந்து, பின் கும்ப ராசிக்கு இடம் பெயர்வார்.

செவ்வாயின் நட்பு கிரகங்கள் சூரியன், குரு மற்றும் சந்திரன் ஆகியவை ஆகும். சுறுசுறுப்பான மற்றும் உமிழும் கிரகமான செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால், அது மங்கள தோஷம் உருவாக்கும். இத்தகைய செவ்வாய் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஆதாயங்கள், வளர்ச்சி, வெற்றி மற்றும் செழிப்பு ஆகியவற்றை அனுபவிப்பார்கள். கடந்த காலத்தில் நீங்கள் செய்த முயற்சிகள் மற்றும் கடின உழைப்பால் உங்கள் பணியிடத்தில் அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கும். பணியிடத்தில் உள்ள ஒவ்வொரு சவாலையும் நீங்கள் மிகவும் திறம்பட எதிர்கொள்வீர்கள். நிதி நிலைமை சீராகவும் வசதியாகவும் இருக்கும்; இருப்பினும், இந்த கட்டத்தில் நிதி முதலீடு அல்லது பெரிய கொள்முதல் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் விரும்பிய வெற்றியைப் பெற நேர்மையான முயற்சியில் ஈடுபட வேண்டும். திருமணமான தம்பதிகளின் காதல் வாழ்க்கை தொடர்ந்து மகிழ்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். நீங்கள் இரத்த அழுத்த பிரச்சனை உள்ள ஒரு நபராக இருந்தால், உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்,

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சமூகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். வணிகர்கள் தங்கள் முயற்சிகளால் ஆதாயங்களையும், லாபத்தையும் பெறுவார்கள். பணியிடத்தில் உள்ள சூழ்நிலை உங்களுக்கு சவாலாக இருக்கலாம். உங்கள் காதல் வாழ்க்கை மிதமானதாக இருக்கலாம். மேலும் உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல் போகலாம். திருமணமான தம்பதிகள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இந்த காலம் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, எனவே உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருங்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால், எந்த முதலீட்டையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் சில கடந்த கால முதலீடுகள் பலனளிக்கும். தொழில் ரீதியாக இந்த காலகட்டம் உங்களுக்கு சற்று கடினமாக இருக்கலாம். குறிப்பாக உங்கள் வேலையில் முன்னேற்றம் அடையும்போது தடைகளை சந்திக்க நேரிடும். சிலர் வழக்கு விவகாரங்களில் சிக்கலாம். உங்கள் துணையுடன் தொடர்பு கொள்ளும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காய்ச்சல், சோர்வு அல்லது உடல் வலி போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையில் முன்னேறும் போது சில சிக்கல்களை சந்திக்கலாம். உடன் பணிபுரிபவர்களுடன் எந்தவிதமான வாக்குவாதத்தையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகள் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். உங்கள் திருமண வாழ்க்கையில், துணையுடன் தவறான புரிதல் உருவாகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனையால் அவதிப்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் சட்டச் சிக்கல்களில் சிக்கலாம். தொழில் ரீதியாக, உங்கள் செயல்திறன் படிப்படியாக மேம்படும். மேலும், வெற்றியைப் பெறுவதற்கான உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். நிதி ரீதியாக நீங்கள் ஆடம்பர விஷயங்களுக்காக பணத்தை செலவழிக்கலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். அரசியல்வாதிகள் இக்காலத்தில் பதவியைப் பெறலாம். விளையாட்டு மற்றும் தடகளத் துறைகளில் இருப்பவர்களுக்கு வெற்றியும், புகழும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். அதோடு, உங்கள் தாயாரின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் திருமணமான சில தம்பதிகள் கள்ள உறவுகளில் ஈடுபடலாம். தொழில் வாழ்க்கையில், சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். உங்கள் புதிய பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தாமதமாகலாம். நிதி ரீதியாக, நீண்ட கால முதலீடுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் செலவுகளும் உயரக்கூடும். மேலும் உங்கள் குழந்தைகள்/குடும்பத்திற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால், உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் உங்கள் வேலையில் பிஸியாக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் வளர்ச்சி, பதவி உயர்வு, வெகுமதி மற்றும் அங்கீகாரத்தைப் பெற வாய்ப்புள்ளதால், உங்கள் முயற்சியில் உறுதியாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், ஒரு புதிய சொத்தை வாங்க வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, பங்குச் சந்தை அல்லது சொத்துக்களில் முதலீடு செய்வது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தராது. எனவே எந்த ஒரு தொகையையும் முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு மற்றும் சண்டைகள் ஏற்படலாம். உங்கள் துணையைப் புரிந்துகொள்வது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். மேலும் இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளாதீர்கள். ஏனெனில் இது உங்கள் உறவை மேலும் அழிக்கக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சில கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் சட்டச் சிக்கலில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. வேலை காரணமாக பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அந்த பயணத்தால் நல்ல பலன்களையும் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடனான உங்கள் உறவிலும் நீங்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அனுபவிக்கலாம். நிதி ரீதியாக இந்த காலம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் செய்த முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுக்கு ஏதேனும் நோய்கள் இருந்தாலும், இக்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே சொத்து தொடர்பான சில தகராறுகளை சந்திக்க நேரிடலாம். வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது MNCகளுடன் தொடர்புடையவர்கள் இந்த காலகட்டத்தில் பணப் பலன் மற்றும் தொழில் வளர்ச்சியைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள், தங்கள் தொழிலில் மிகவும் கவனமாக இருக்கவும். எந்த நிதி அல்லது முதலீடுகள் தொடர்பான முடிவை எடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் நடத்தையில் சில மாற்றங்கள் ஏற்படும். உங்கள் இயல்பில் நீங்கள் கொஞ்சம் ஆக்ரோஷமாக மாற வாய்ப்புள்ளது. எனவே இந்த காலத்தில் நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில், சில மன அழுத்தம் இருக்கலாம். அதிகப்படியான கோபத்தால், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிதி ரீதியாக, புதிய சொத்து வாங்குவதற்கும் தேவையான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் இதுவே நேரம். பணியிடத்தில், மேலதிகாரிகளுடனான உறவுகள் மிதமானதாகவே இருக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் உங்கள் வேலையை மாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அசிடிட்டி பிரச்சனைகள், அதிகப்படியான உழைப்பின் காரணமாக காய்ச்சல் போன்றவை ஏற்படலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சிறு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும் இப்பயணத்தால் பலன் குறைவாகவே கிடைக்கும். உங்கள் உயர் அதிகாரிகளிடம் உங்களிடம் கடுமையாக நடந்து கொள்வது போன்று இருக்கும். இருப்பினும், இக்காலத்தில் உங்கள் கடின உழைப்பும் முயற்சியும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய மந்திரம். வேலை மாற்றம் அல்லது இடமாற்றம் பெற இது சரியான நேரம் அல்ல. இந்த காலகட்டத்தில், நீங்கள் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. நிதி ரீதியாக இந்த ஆண்டில் பெரிய நிதி முடிவுகளை எடுக்காதீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் துணையுடன் நீங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலப் பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சந்திக்கும் அனைத்து சிரமங்களிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் வளர்சசியைப் பெற வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளிடமிருந்து வெகுமதிகளையும் அங்கீகாரத்தையும் நீங்கள் பெறலாம். சட்ட விஷயங்களிலும் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும். நிதி ரீதியாக இந்த காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கடந்த கால முதலீடுகள் பலனளிக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் காதல் வாழ்க்கை மலரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











