Just In
- 10 min ago
வீட்டிலேயே சுவையான பாதாம் கீர் செய்வது எப்படி தெரியுமா?
- 29 min ago
அரிசி நீரை வீணாக்குறீங்களா? இனிமே அப்படி பண்ணாதீங்க... அத எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம் தெரியுமா?
- 1 hr ago
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- 1 hr ago
பிப்ரவரியில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்கு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படப் போகுது...
Don't Miss
- News
எண்ணூர் துறைமுத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. இதன் பொருள் என்ன? எச்சரிக்கைகள் என்னென்ன
- Technology
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- Automobiles
பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!
- Sports
சாஹலுக்கு அநீதி செய்த ஹர்திக் பாண்ட்யா.. முக்கிய வாய்ப்பை தவறவிட்டுடாரே.. கம்பீர் கடும் ஆவேசம்!
- Movies
பன்றி வாயன் முதல் பல உருவ கேலிகள்... எனக்கு அது அதிகமாவே நடந்துருக்கு: எமோஷனலான யோகி பாபு
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
செவ்வாய்-கேது உருவாக்கும் நவபஞ்ச யோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் குறிப்பிட்ட இடைவெளியில் நிகழும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். இந்த யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில் 2022 அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சென்றார். துலாம் ராசியில் கேது பயணித்து வருகிறார். எனவே மிதுனம் சென்ற செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து நவபஞ்சம் யோகத்தை உருவாக்குகிறார்.
ஜோதிடத்தில் இந்த நிலை அசுபமானதாக கருதப்படுகிறது. அதே வேளையில் இந்த யோகத்தால் ஓரளவு நற்பலன் கிடைத்தாலும், 4 ராசிக்காரர்களுக்கு இந்த நவபஞ்ச யோக காலம் வேதனை நிறைந்த காலமாக இருக்கும். இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
நவபஞ்ச யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு வலிமிக்கதாக இருக்கும். ஏனெனில் ஏற்கனவே ராகு உங்கள் லக்ன வீட்டில் அமர்ந்துள்ளார். இதனால் சாதாரணமாகவே நீங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் நவபஞ்ச யோகம் உருவாகியிருப்பதால், உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் மோசமடையலாம். கூட்டு தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். கூட்டு தொழில் தொடங்க நினைத்தால், அதை இக்காலத்தில் தவிர்த்திடுங்கள். விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மார்பு மற்றும் தொண்டை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்
நவபஞ்ச யோக காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சற்று தீங்கு விளைவிப்பதாக இருக்கும். ஏனெனில் செவ்வாய் எதிரி ராசியின் செல்வ வீட்டில் அமர்ந்துள்ளார். மறுபுறம் கேது ஜாதகத்தின் நோய் மற்றும் விபத்து வீட்டில் உள்ளார். எனவே இக்காலத்தில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். தாய்வழி மாமா மற்றும் அத்தையுடன் உறவு மோசமடையலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். முக்கியமாக கர்ப்பிணிகள் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகம் சற்று மோசமாக இருக்கும். ஏனெனில் செவ்வாய் எதிரி ராசியில் 12 ஆவது வீட்டில் உள்ளார். எனவே இக்காலத்தில் நீதிமன்ற வழக்குகளில் தோல்வி அடைவீர்கள். பாட்டி, தாய் மற்றும் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் விபத்து வீட்டில் செவ்வாய் உள்ளார். மறுபுறம், கேது 12 ஆவது வீட்டில் உள்ளார். ஆகவே இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளன. மேலும் வியாபாரிகள் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் இக்காலத்தில் செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இல்லை. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்
நவபஞ்சம் யோகத்தினால் பெறும் அசுப பலன்களைத் தவிர்க்க வேண்டுமானால், கேது மற்றும் செவ்வாய் கிரகத்தின் பீஜ மந்திரங்களை தினமும் பாராயணம் செய்ய வேண்டும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும். முக்கியமாக அனுமனை வழிபட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)