Latest Updates
-
வெயில் கொடுமையா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
புதன் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இதயம் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் விசித்திரமான 5 அறிகுறிகளை பட்டியலிட்ட இதய நோய் நிபுணர்! -
வெயில் கொடுமையா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், வீடு ஜில்லென்று மாறும்! -
தேர்தலும், அரசியல் கட்சிகளும் இல்லாத அதிசய நாடுகள் - இந்த நாடுகளில் ஏன் தேர்தல் நடத்தப்படுவதில்லை தெரியுமா? -
Tamil Nadu Election Results 2026: நடிகர்களின் கட்சிகளும்.. முதல் தேர்லில் பெற்ற வாக்குகளும்.. - ஓர் பார்வை -
ஒரே நாளில் உருவாகும் இரட்டை துவித்வாதச யோகம்: மே 11-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் சீக்கிரம் குறையும்... -
இன்றைய ராசிபலன் 04 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க யாரையும் நம்பாமல் இருப்பதுதான் நல்லது -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
மாணிக்கவாசகர் மேல் மட்டும் சிவபெருமானுக்கு ஏன் பாசம் அதிகம் தெரியுமா?
மார்கழி மாதம் என்றாலே, எப்படி ஆண்டாள் திருப்பாவைக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடலுக்கும் அளிக்கிறோம். மாணிக்கவாசகர் மீது இறைவன் சிவப
இறைவன் ஒருவர் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தால் அவருக்காக அடியும் வாங்கிக் கொள்வார் என்பதை சிவன் மீது மாணிக்கவாசகர் வைத்திருந்த அன்பின் மூலம் உணர்ந்து கொள்ளலாம். பெண்கள் சிவபெருமானை புகழ்ந்து பாடவேண்டும் என்பதற்காகவே, மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை எழுதினார். சிவபெருமான் திருவண்ணாமலையில் ஆதியும் அந்தமும் காணமுடியாதபடி மலையாக வீற்றிருப்பதை உணர்த்துவதற்காக, 'ஆதியும் அந்தமும் இல்லா அருப்பெரும் ஜோதியே' எனப் பாடினார். திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்த பெண்கள் திருவெம்பாவை பாடல்களை பாடி அண்ணாமலையாரை துதித்தனர்.

மார்கழி மாதம் என்றாலே, எப்படி ஆண்டாள் திருப்பாவைக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடலுக்கும் அளிக்கிறோம். அது மட்டுமல்லாமல், எந்த ஒரு சின்னஞ்சிறிய கோவிலாக இருந்தாலும், சைவ சமயக் குறவர்கள் என்றழைக்கப்படும் நால்வர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் சிலைகள் கண்டிப்பாக இருக்கும்.
அதில், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு மாணிக்கவாசகருக்கு உண்டு. இவர்கள் மூவரையும் திருவிளையாடல் புரிந்து தடுத்தாட்கொண்டு தன்னோடு இணைத்துக்கொண்டார். ஆனால் மாணிக்கவாசகரிடம் தன்னுடைய திருவிளையாடலை நடத்தியதோடு நில்லாமல், ஆதியும் அந்தமும் இல்லாத தன்னைப் பற்றி பாடல் பாடச்சொல்லி, அதை தானே தன் கைப்பட எழுதி, அதற்கு திருவாசகம் என்று பெயரிட்டு கையொப்பமும் இட்டு கொடுத்துள்ளார் என்றால், மாணிக்கவாசகர் மேல் இறைவன் எந்த அளவுக்கு பாசம் வைத்திருப்பார்.

மாணிக்கவாசகருக்காக இறைவன் வாங்கிய அடி
திருவொற்றியூரில் சுந்தரரின் நட்புக்காக சங்கிலியார் நாச்சியாரிடம் காதல் தூது சென்றாரோ, அதே போல், மாணிக்கவாசகர் மீது வைத்திருந்து பாசத்திற்கு கட்டுப்பட்டு தான், மாணிக்கவாசகரை காப்பாற்ற, வைகையில் வெள்ளம் வரச்செய்து, புட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னன் கையினால் அடியும் வாங்கினார். இதிலிருந்து நமக்கு புரிவது, இறைவன் ஒருவர் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தால் அவருக்காக அடியும் வாங்கிக் கொள்வார் என்பது. அவர் அடி வாங்கியதால் தான் திருவாசகம் என்ற ஒப்பற்ற நூல் உருவானது.

மனிதன் கடவுளுக்கு சொன்னது
திருவாசகம் நூலைப் பற்றி சொல்லும் போது, மனிதன் கடவுளுக்கு சொன்னது என்கின்றனர். கடவுள் மனிதனுக்கு சொன்னது பகவத் கீதை, மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள், மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் என்பார்கள். அதனால் தான் திருவாசகத்தைப் பற்றி முழுவதும் அறிந்தவர்கள் சொல்வது திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார், என்று.

திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து
எப்படி, மகாபாரதம் என்னும் காவியத்தை வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமான் தன்னுடைய தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி எழுதினாரோ, அது போலவே, தன்னுடைய படைப்பான திருவாசகம் என்னும் நூலை சொல்லச் சொல்ல தில்லையம்பலத்து அரசனான நடராஜரே தன் கைப்பட ஏட்டில் எழுதி திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து என்று தன் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். அனைவருமே திருவாசகத்திற்கு விளக்கம் கேட்க, மாணிக்கவாசகர் திருவாசகத்திற்கு பொருள் இவனே என்று தில்லை நடராஜரை கை காட்ட, அப்போது அங்கு தோன்றிய பேரொளியில் கலந்து சிவனோடு இரண்டர கரைந்து கலந்துவிட்டார்.

வள்ளலார் புகழ்ந்த திருவாசகம்
மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் பெருமையை உணர்ந்த வள்ளலார் சுவாமிகள்
வான்கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்று வானளாவ புகழ்ந்துள்ளார்.

திருவெம்பாவை திருவண்ணாமலை
மாணிக்கவாசகர் திருவாசகம், திருக்கோவையார், சிவபுராணம், திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி உள்பட பல நூல்களை எழுதியிருந்தாலும், திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் தான் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சிவாலயங்களில் பாடப்பட்டு வருகிறது. திருவாசகம் எப்படி பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான திருச்சிற்றம்பலத்தில் எழுதப்பட்டதோ. அது போலவே, திருவெம்பாவை நூலும் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் தான் எழுதப்பட்டது.

பாவை நோன்பு
பாண்டிய நாட்டிலிருந்து தலயாத்திரை புறப்பட்ட மாணிக்கவாசகர், திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் இருக்கும் அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் தங்கியிருந்தார். அப்போது மார்கழி மாதம் என்பதால், திருவண்ணாமலை பகுதியில் வாழ்ந்து வந்த பெண்கள், அங்கிருந்த குளத்தில் நீராடிவிட்டு பாவை நோன்பிருப்பது வழக்கம்.

ஆதியும் அந்தமும் இல்லா அருப்பெரும் ஜோதி
அது போல், பெண்கள் சிவபெருமானை புகழ்ந்து பாடவேண்டும் என்பதற்காகவே, மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை எழுதினார். சிவபெருமான் திருவண்ணாமலையில் ஆதியும் அந்தமும் காணமுடியாதபடி மலையாக வீற்றிருப்பதை உணர்த்துவதற்காக, ‘ஆதியும் அந்தமும் இல்லா அருப்பெரும் ஜோதியே‘ எனப் பாடினார்.

உள்ளம் உருகிய சிவபெருமான்
திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்த பெண்கள் திருவெம்பாவை பாடல்களை பாடி அண்ணாமலையாரை துதித்தனர். அந்த பாடல்களை கேட்டு எம்பெருமான் ஈசனும் மிக்க மகிழ்ச்சியடைந்தார். திருவெம்பாவை பாடலில் உள்ளம் உருகி மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தார். தற்போது அந்த இடத்தில் தான் மாணிக்கவாசகருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் திருவெம்பாவை
திருவெம்பாவை பாடல்கள் அன்றைய கால கட்டத்திலேயே தமிழ் மந்திரம் என்ற பெயரில் சயாம் (தாய்லாந்து) நாட்டுக்கு சென்றது. மன்னருக்கு முடிசூட்டும் தருணத்திலும், திருவிழா காலத்திலும் சயாம் நாட்டில் திருவெம்பாவையை பாடுகின்றனர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் சொல்லப்படும் ‘ஏலோர் எம்பாவாய்' என்ற சொற்றொடர் அப்படியே நாளடைவில் மருவி, லோரி பாவாய் என்றழைக்கப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமச்சிவாயம் வாழ்க
ஓம் நாதன் தாள் வாழ்க
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி....



Click it and Unblock the Notifications