Latest Updates
-
உங்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதற்கு காரணம் இதுதானாம் - ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி - ஷாக் ஆகாதீங்க -
ஜூலை இறுதியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வாழைப்பூ வாங்குனா இந்த மாதிரி திருநெல்வேலி ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
கோவைக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 04-ல் நிகழும் சுக்கிரன்-கேது சேர்க்கை இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
1 மாதம் வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்! -
சாணக்கிய நீதி படி இந்த 4 வீடுகளில் வசிப்பவர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும் ஏழையாகத்தான் இருப்பார்களாம் -
சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. -
தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க மனஅழுத்தத்தால் கஷ்டப்பட போறாங்களாம்
எப்பவும் பர்ஸ் நிறைய பணம் இருக்கணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க...
உங்க மனசுக்கு பிடிச்சவங்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்கணும்னு நினைக்கறீங்களா? அவங்களுக்கு மணிபர்ஸ் கிப்ட் கொடுங்க. அவங்களுடைய பாக்கெட் நிறைய பணம் இருந்து கிட்டே இருக்கும்.
நாம் வைத்திருக்கும் பர்ஸானது நம்முடைய கை காசை போட்டு வாங்கவே கூடாது. நம்முடைய மனதுக்கு பிடித்தமானவர் அல்லது அம்மா, அப்பா, மனைவி, குழந்தை என பிரியமானவர்கள் யாராவது வாங்கிக் கொடுத்த பர்ஸாக இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படி இருந்தால் தான் நம்முடைய பர்ஸில் பணம் நிரந்தரமாக இருக்கும். நம்முடைய வருமானமும் கூடும். எனவே, நம்முடைய பர்ஸில் பணம் சேரவேண்டுமானால் அன்பளிப்பாக கொடுத்ததாக இருந்தால் நல்லது.
நம்முடைய பர்ஸில் குறிப்பாக ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் அவசியம் இருக்கவேண்டும். இந்த இரண்டையும் எப்போதும் செலவழிக்கவே கூடாது. என்னதான் தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் கூட அதை எடுத்து செலவழிக்கவே கூடாது.
பர்ஸில் வைக்கக்கூடிய வகையில் ஒரு சிறிய அளவில் பச்சை பட்டுத் துணி அல்லது ஒரு பச்சை காகிதத்தில் ஐந்து ஏலக்காய்களை வைத்து முடிச்சு போட்டு பர்ஸில் வைத்துக்கொள்வது அவசியம். பச்சை நிற பட்டுத் துணி அல்லது பச்சை காகிதத்தில் ஏலக்காய்களை வைத்து கட்டி அதை பர்ஸில் வைத்துக்கொண்டால், பணம் அநாவசியமாக செலவாகாது.

பர்ஸ் நிறைய பணம்
நம்மில் பெரும்பாலானவர்கள் பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள். மாதச்சம்பளம் வாங்குபவர்களில் வெகு சிலர் மட்டுமே பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை விடாமல் தொடர்ந்து பின்பற்றி வருபவர்கள். மற்றவர்கள் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கமே இல்லாதவர்கள் தான். அடுத்தவர்கள் வைத்திருக்கும் பர்ஸை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவதோடு சரி. அதற்கு முக்கிய காரணம் வாங்கும் சம்பளம், வாங்கிய அன்றைக்கே காணாமல் போவது தான். கையில வாங்குனேன் பையில போடலே... காசு போண எடம் தெரியல என்று பாட்டு பாடியே நாட்களை நகர்த்திக் கொண்டு வருபவர்கள்.

பணம் இருக்கும் பர்ஸ்
அப்படியே பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொண்டாலும் கூட, அதில் தேவைக்கு ஏற்ப பணம் வைத்திருப்பார்களா என்றால் கிடையாது. வெறும் பந்தாவுக்காக மட்டுமே பர்ஸ் வைத்துக் கொள்வார்கள். அந்த பர்ஸும் சற்று கிழிந்ததாக இருக்கும். அந்த பர்சை திறந்து பார்த்தால் பணம் மட்டும் இருக்காது. அதைத் தவிர மெடிக்கல் ஷாப் பில், ஒரு வருஷத்துக்கு முந்தி எடுத்த பஸ் டிக்கெட், அல்லது பழைய பஸ் பாஸ், ஒரு சினிமா டிக்கெட் என தேவையில்லாத ஐட்டங்களை மட்டுமே பர்ஸுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். போனால் போகிறதென்று ஒரு கிழிந்த ஐந்து ரூபாய் நோட்டோ அல்லது ஒரு சில சில்லறை நாணயங்களையோதான் வைத்திருப்பார்கள்.

அழுக்கு மூட்டை பர்ஸ்
வெகு சிலர் மட்டுமே பர்ஸை முறையாக பயன்படுத்துபவர்களாக உள்ளனர். பர்ஸில் எப்போதும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக நிரம்பி வழியும். அந்த ரூபாய் நோட்டுக்களை அவர்கள் எடுக்கும் லாவகமே அலாதியானதாக இருக்கும். சிலருக்கு பர்ஸில் பணம் அவ்வப்போது வந்தாலும், வந்த சுவடு தெரியாமல் உடனடியாக கரைந்து விடும். அதற்கு முக்கிய காரணம் பணத்தை முறையாக பர்ஸில் வைக்காமல், ஏதோ ஒரு அழுக்கு பையில் அழுக்கு துணிகளை திணிப்பது போல் திணித்து வைப்பார்கள். பணத்திற்கு மதிப்பளிக்காமல் ரூபாய் நோட்டுக்களை கசக்கி திணித்து வைப்பார்கள்.

மகாலட்சுமி வாசம்
பணம் என்பது மகாலட்சுமி வாசம் செய்யும் இருப்பிடமாகும். நம் வீட்டில் பூஜை அறையை எப்படி சுத்தமாக வைத்திருப்போமோ, அதே போல் தான் நாம் வைத்திருக்கும் பர்ஸையும் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்படி இல்லாமல் ரூபாய் நோட்டுக்களை சுருட்டியோ அல்லது இஷ்டத்திற்கு மடித்தோ வைத்தால், மஹாலட்சுமி எப்படி வருவாள். அந்த பர்ஸை பார்த்தாலே காத தூரத்திற்கு ஓட்டம் எடுப்பாள். அதற்கு கொடுக்கும் மரியாதையை கொடுத்தால் தான் மஹாலட்சுமியும் நம்முடைய பர்ஸில் நிரந்தரமாக குடியேறுவாள்.

புத்தம் புதிய கரன்சி நோட்டுக்கள்
உதாரணத்திற்கு யாராவது ஒரு வெளிநாட்டவரை பார்த்தால், அவரிடம் இருக்கும் பர்ஸை கேட்டு வாங்கிப் பாருங்கள். அந்த பர்ஸில் இருக்கும் வெளிநாட்டு கரன்ஸிகள் அனைத்துமே புத்தம் புதியாதாக கொஞ்சமும் கசங்காமல் அழுக்கில்லாமல் இருக்கும். காரணம் அவர்கள் பணத்திற்கு கொடுக்கும் மதிப்பு தான் காரணம். அதே சமயம் நம்முடைய பாக்கெட்டில் இருக்கும் பர்ஸை திறந்து பாருங்கள். அனைத்து நோட்டுக்களுமே கசங்கி தான் இருக்கும். காரணம், நானும் பர்ஸ் வைத்திருக்கிறேன் பேர்வழி என்று வெளியில் காட்டிக்கொள்வதற்கு தான்.

பணத்தை ஈர்க்கும் பர்ஸ்
நாம் வைத்திருக்கும் பர்ஸில் எப்போதும் பணம் இருக்க வேண்டும் என்றால், அதை முறையாக பராமரிப்பது அவசியமாகும். மேலும் நாம் வைத்திருக்கும் பர்ஸும் அழகாகவும், பணத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கவேண்டியது அவசியமாகும். அதற்கு நாம் வாங்கும் பர்ஸானது அழகிய பச்சை வண்ணம், பர்ப்பிள், நேவி ப்ளூ, பிங்க் போன்ற நிறங்களில் இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருந்தால் பர்ஸில் பணம் எளிதில் சேரும். மேலும் நாம் வாங்கும் பர்ஸும் ரூபாய் நோட்டுக்கள் கசங்காமல் எளில் நுழையும் வகையில் இருக்க வேண்டியது அவசியம்.

எண்கோண வடிவ கண்ணாடி
நாம் வைத்திருக்கும் பர்ஸில் ஒரு கண்ணாடி குறிப்பாக அது எண் கோணவடிவத்தில் இருக்க வேண்டியது அவசியமாகும். காரணம் கண்ணாடி என்பது பிரதிபலிக்கக்கூடியதாகும். கண்ணாடி பர்ஸில் இருந்தால், பர்ஸில் இருக்கும் பணத்தையும் பன்மடங்காக பெருக்கி காட்டும் என்பது நம்பிக்கையாகும். முக்கியமாக பர்ஸில் பணம் எப்போதும் பணம் இருக்கவேண்டியது அவசியமாகும். பணம் இல்லாமல் வெறும் பர்ஸாக இருந்தால், எப்போதும் பர்ஸில் பணம் சேராது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஒரு ரூபாய் நாணயம்
நம்முடைய பர்ஸில் குறிப்பாக ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் அவசியம் இருக்கவேண்டும். இந்த இரண்டையும் எப்போதும் செலவழிக்கவே கூடாது. என்னதான் தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் கூட அதை எடுத்து செலவழிக்கவே கூடாது. கூடவே, பர்ஸில் வைக்கக்கூடிய வகையில் ஒரு சிறிய அளவில் பச்சை பட்டுத் துணி அல்லது ஒரு பச்சை காகிதத்தில் ஐந்து ஏலக்காய்களை வைத்து முடிச்சு போட்டு பர்ஸில் வைத்துக்கொள்வது அவசியம்.

பச்சை நிற பட்டுத்துணியில் ஏலக்காய்
பச்சை நிற பட்டுத் துணி அல்லது பச்சை காகிதத்தில் ஏலக்காய், கொஞ்சம் சோம்பு, பச்சைக் கற்பூரம் போட்டு கட்டி அதை பர்ஸில் வைத்துக் கொண்டால், பணம் அநாவசியமாக செலவாகாது. கூடவே நம்மை கடன் வாங்குதில் இருந்து தப்பிக்க வைக்கும். கடன் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது நிச்சயம். ஒருவேளை நாம் ஏற்கனவே கடன் வாங்கியிருந்தாலும் கூட, வெகு சீக்கிரத்தில் அந்த கடனை அடைக்கும் வகையில் நம்முடைய பர்ஸில் பணம் சேர்ந்துவிடும்.

அன்பளிப்பாக கொடுங்க
இவை அனைத்திற்கும் மேலாக நாம் வைத்திருக்கும் பர்ஸானது நம்முடைய கை காசை போட்டு வாங்கவே கூடாது. நம்முடைய மனதுக்கு பிடித்தமானவர் அல்லது அம்மா, அப்பா, மனைவி, குழந்தை என பிரியமானவர்கள் யாராவது வாங்கிக் கொடுத்த பர்ஸாக இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படி இருந்தால் தான் நம்முடைய பர்ஸில் பணம் நிரந்தரமாக இருக்கும். நம்முடைய வருமானமும் கூடும். எனவே, நம்முடைய பர்ஸில் பணம் சேரவேண்டுமானால் அன்பளிப்பாக கொடுத்ததாக இருந்தால் நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்களும் உங்க மனதிற்கு பிடித்தவர்களுக்கு மணிபர்ஸ் வாங்கி அன்பளிப்பாக கொடுங்க நிறைய பணம் சேரும்.



Click it and Unblock the Notifications