Latest Updates
-
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, 1 மாசத்துல உடல் எடை குறைவதை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு பெரிய நஷ்டம் தேடிவரப்போகுதாம் -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும்
சூரியன் மகர ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான காலமா இருக்கப் போகுது...
சூரியனின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் மகரம் செல்லும் சூரியனால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.
2022 ஆம் ஆண்டில் சூரிய பகவானின் ராசி மாற்றம் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மகர ராசியில் நிகழ்கிறது. இந்நாளில் சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு தனது இடத்தை மாற்றுகிறார். ஜோதிடத்தின் படி, மகர ராசிக்கு சூரியன் செல்வது மிகவும் விசேஷமானது. நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியனின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் மகரம் செல்லும் சூரியனால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மகர சங்கராந்தி
சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் போது தான் தை மாதம் பிறக்கிறது. இது மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் தான் தமிழகத்தில் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இருந்து சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகர்கிறது. இதனால் பூமியில் வாழும் உயிரினங்கள் சூரியனின் முழு ஆசிகளைப் பெற தொடங்குகின்றன. மேலும் இந்நாளில் இருந்து பூமியில் சூரிய ஒளி அதிகம் கிடைக்கிறது. இந்த ஆண்டு மகர சங்கராந்தி ஜனவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ஆண்டு மகர சங்கராந்தி ரோகிணி நட்சத்திரத்தில் தொடங்குகிறது.

ரிஷபம்
இந்த சூரிய பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானது என்பதை நிரூபிக்கப் போகிறது. இந்த சூரியனின் மாற்றத்தால், சிலர் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறப் போகிறார்கள். மேலும் இந்த காலத்தில் வேலைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிப்பதால் மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். தினமும் காலையில் குளித்துவிட்டு சூரிய பகவானை வணங்கினால், சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, சமூகத்தில் மரியாதை அதிகரித்து, தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி நன்மைகளைத் தரும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்களில் வெற்றி உண்டாகும். அதே வேளையில் சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் இந்தக் காலகட்டத்தில் தேர்வில் தேர்ச்சி பெறலாம். பொருளாதார நிலை மேம்படும். சம்பள உயர்விற்கான வலுவான வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் உங்களுக்குத் தேவையான பணப் பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மொத்தத்தில், இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

விருச்சிகம்
ஜோதிடத்தின் படி, இந்த சூரிய பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு மங்களகரமானது என்பதை நிரூபிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் பாராட்டைப் பெறுவார்கள். தினசரி வருமானம் உயரும் வாய்ப்பு உண்டாகும். அதே நேரத்தில் நிலம் தொடர்பான வேலையில் இருப்பவர்களும் ஆதாயம் அடைவார்கள்.

மகரம்
சூரியன் மகர ராசிக்கு மாறியிருப்பதால், மகர ராசிக்காரர்களுக்க பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் வெற்றியும், கௌரவமும் கூடும். அதுமட்டுமின்றி அரசு வேலையில் இருப்பவர்களுக்கும் பதவி உயர்வு கிடைக்கும். அதே வேளையில் அரசு வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.



Click it and Unblock the Notifications