Latest Updates
-
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
மகா சிவராத்திரி அன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தின் படி, மகா சிவராத்திரி நாளானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எப்படிப்பட்ட பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்
2022 ஆம் ஆண்டின் மகாசிவராத்திரி மார்ச் 01 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த மகா சிவராத்திரி சிவபெருமானுக்கு உரிய மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் சிவபெருமானுக்கு பால், பூக்கள், விபூதி, தயிர், வில்வ இலைகள் என்று பல பொருட்களால் அபிஷேகம் செய்து சிவனை வழிபடுவார்கள். பலர் விரதம் இருந்து இரவு முழுவதும் தூங்காமல் சிவபெருமானை வழிபடுவார்கள்.

சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களின் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். ஜோதிடத்தின் படி, மகா சிவராத்திரி நாளானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எப்படிப்பட்ட பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரியில் இருந்து நல்ல காலம் ஆரம்பிக்கிறது. மகா சிவராத்திரியால் உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் மேலும் உயரும். வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்கும். பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலைகள் முடிவடையும். சம்பள உயர்வுக்கான வாய்ப்புக்களும் உண்டு. சிவபெருமானின் அருளால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இந்த நாளில், மேஷ ராசிக்காரர்கள் சிவ சாலிசாவை பாராயணம் செய்து, அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.

சிம்மம்
சிவருபெருமானின் அருளால் சிம்ம ராசிக்காரர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் சிறப்பான சாதனைகளைப் புரிவார்கள். புதிய வேலையைப் பெற நினைப்பவர்களுக்கு அல்லது வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நல்ல வருவாயைப் பெற வாழ்க்கையில் பல புதிய வழிகள் திறக்கப்படும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்நாளில் இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு வில்வ இலைகளை வழங்குவது நல்லது. ஒன்றுக்கு மேற்பட்ட ஊடகங்களில் இருந்து பணத்தை சம்பாதிப்பீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. தொழிலை தொடங்க நினைத்தால், அதற்கு இந்த காலம் மிகவும் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் புதிய சிந்தனையுடன் முன்னேறுவீர்கள்.

விருச்சிகம்
மகா சிவராத்திரி இந்த ராசிக்காரர்களை புதிய சாதனைகளைப் படைக்க வைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்க. சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்நாளில், சிவனுக்கு வில்வ இலைகளைப் படைத்து வழிபடுவது இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது. அதோடு சில சாலிசாவைப் பாராயணம் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications