Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
Mahalaya Amavasya: மகாளய அமாவாசையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
Mahalaya Amavasya: இன்று மகாளய அமாவாசை. இந்த மகாளய அமாவாசையில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். முக்கியமாக தானம் செய்வது நல்லது.
துர்மரணம் அடைந்தவர்களுக்கு கண்டிப்பாக திதி கொடுப்பது அவசியம். இந்த மகாளய அமாவாசையில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது நல்லது தோஷம் தீரும். பித்ரு தோஷம் உள்ளவர்கள் பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கால கட்டத்தில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட தோஷங்கள் நீங்கி நன்மைகளும், புண்ணியமும் கிடைக்கும்.

மகாளய பட்ச காலத்தில் வீடுகளை சுத்தமாக வைத்திருந்து முன்னோர்களை வரவேற்க வேண்டும். நாம் அசைவ உணவு சமைத்து சாப்பிடக்கூடாது. முடி, நகம் வெட்டக்கூடாது. தாம்பத்ய உறவில் ஈடுபடக்கூடாது. காக்கைக்கு பிடித்தமான உணவு கொடுக்க வேண்டும்.
மகாளய அமாவாசை தினத்திலும் மகாளய பட்ச காலத்திலும் தானம் செய்வதினாலும் திதி கொடுப்பதனாலும் பூர்வ புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். தோஷமான ஜாதகமாக இருந்தாலும் முன்னோர்களின் ஆசி இருந்தால் நல்லவைகள் நடக்கும். அதே நேரத்தில் நம்முடைய ஜாதகம் யோக ஜாதகமாக இருந்து நாம் முன்னோர்களின் சாபத்தோடு இருந்தால் நமக்கு பாதிப்புகள் அதிகமாகும். எனவே நாம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெறுவோம்.

முன்ஜென்ம புண்ணியம்
நாம் நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல நிலையில் வாழ்வது நம் முன்னோர்கள் செய்த புண்ணியம். எனவேதான் பெற்றோர் செய்த புண்ணியம் தான தர்மங்கள் பிள்ளைகளை சேரும் என்றார்கள். நம் முன்ஜென்மத்திலும் நாம் செய்த புண்ணிய கணக்குதான் இந்த ஜென்மத்தில் நமக்கு நல்லவைகளையும் அதிர்ஷ்டத்தையும் தருகிறது. எனவே ஒருவருக்கு பூர்வ புண்ணியம் நன்றாக அமைந்துவிட்டால் அவருக்கு சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

நல்லவைகளை டெபாசிட் செய்வோம்
பூர்வ புண்ணியம் என்பது நாம பேங்க்ல சேர்த்து வைத்திருக்கும் டெபாசிட் மாதிரி .பேங்க்ல பணம் இருந்தால் தான் எடுத்து செலவுபண்ண முடியும்.விட்ட குறை,தொட்ட குறை, கொள்வினை,கொடுப்பினை, என்ன தவம் செய்தேனோ என்ற வாக்கியங்கள் பூர்வ புண்ணியத்தை குறிப்பிடும் வார்த்தைகள் ஆகும். ஒருவருக்கு ஐந்தாம் இடம், பஞ்சமாதிபதி, பூர்வ புண்ணியம் நன்றாக இருந்தால் நாம் பெற்றெடுத்த குழந்தை தான் நல்லவர்களாக நம் சொல் பேச்சு கேட்பவர்களாக இருப்பார்கள்.

பூர்வ புண்ணியம் நன்மை
லக்னத்தில் குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன், சுபர்களோடு சேர்ந்த புதன் சம்பந்தப்பட்டு அதேபோல ஐந்தாமிடத்தில் இயற்கை சுபர்கள் ஆட்சி உச்சமாக அமர அல்லது பார்க்க நீதி,நேர்மை,இரக்க குணம், பணிவு,பண்பு,தெய்வ பக்தியோடு கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ஐந்தாமிடம் சாத்வீக குணத்தை உடையது. அதாவது ஈவு,இரக்கம், நேர்மை,தயாளகுணம்,இரட்சித்தல் போன்றவை.இந்த பாவகம் பாதிக்கப்பட்டால் கடின மனசை தரும். ஒரு சிலர் ஈவு இரக்கம் இல்லாமல் கடினமனம் கொண்டவராக இருப்பதற்கு காரணம்

பித்ரு தோஷம்
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். சுய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு கேதுகளுக்குடன் எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷமாகும். ஜாதகத்தில் ராகு-கேது 1, 5, 7, 9 இடங்களில் இருந்தாலும் அது பித்ரு தோஷம் ஆகும். ராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும்.

குடும்பத்தில் பிரச்சினை
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சனி சேர்க்கை இருந்தால், அவர்களது வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும். பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு குடும்பம், குழந்தை பிரச்சினையாக இருக்கும். கணவன்-மனைவி சம்பந்தமான பிரச்சினைகளையும் கொடுக்கும்.இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்
பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால் பித்ரு தோஷம் வரும்.
ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும்.தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், தர்ப்பணம் திதி கொடுக்க வேண்டும். செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுக்காவிட்டாலும் பித்ரு தோஷம் பாதிக்கும்.

பெண்கள் திதி தரலாம்
பெண்கள் திதி கொடுக்கலாம் குடும்பத்தில் முன்னோர்கள் இறந்திருந்தால் தானம் கொடுக்கலாம். பெண்கள் செய்யக்கூடாது என்று சொல்வார்கள் மறக்காமல் இந்த மகாளய அமாவாசையில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க திதி தர்ப்பணம் கொடுங்க. முக்கியமாக தானம் செய்யுங்கள். நம் தலைமுறைக்கும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும்.

தானம் கொடுப்பதன் பலன்
மகாளய அமாவாசை தினத்திலும் மகாளய பட்ச காலத்திலும் தானம் செய்வதினாலும் திதி கொடுப்பதனாலும் பூர்வ புண்ணிய பலன்கள் அதிகரிக்கும் வயதானவர்களுக்கு போர்வை, வெயில் மழை பாதிக்காத அளவிற்கு குடை, காலுக்கு செருப்பு வாங்கி தானமாக கொடுக்க பாவங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும். பசுவிற்கு தீவனம், பழம், அகத்திக்கீரை தரலாம் முக்கியமாக காராம்பசுவிற்கு தானம் தர பித்ரு தோஷம் தீரும். வசிஷ்டர், தசரதர், நளமகராஜன் ஆகியோர் மகாளய பட்ச காலத்தில் தானம் செய்த பிறகு மோட்சம் கிடைத்தது

பித்ரு சாபம் நீங்கும்
பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது. சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். ஒருவரின் ஜாதகத்தில் கிரகநிலைகள் யோகநிலையில் இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள். எனவே மகாளய பட்ச காலத்திலும் வரும் மகாளய அமாவாசையிலும் தானம் செய்வோம் பித்ரு கடன் நிறைவேற்றுவோம். தானம் கொடுத்து சாபம் நீங்கப்பெறுவோம்.



Click it and Unblock the Notifications