Latest Updates
-
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
Mahalaya Amavasya 2022: மஹாளய அமாவாசையின் முக்கியத்துவம், பூஜை முறைகள் மற்றும் பலன்கள்!
மஹாளய அமாவாசை என்பது மஹாளய பட்சம் எனப்படும் 15 நாட்களின் கடைசி நாளில் அனுசரிக்கப்படும் அமாவாசை நாளாகும். இந்த காலமானது. செப்டம்பர் நடுப்பகுதி முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை உள்ள காலத்தில் அனுசரிக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசை என்பது மஹாளய பட்சம் எனப்படும் 15 நாட்களின் கடைசி நாளில் அனுசரிக்கப்படும் அமாவாசை நாளாகும். இந்த காலமானது. புரட்டாசி மாதம் அதாவது, செப்டம்பர் நடுப்பகுதி முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை உள்ள காலத்தில் அனுசரிக்கப்படுவது. இந்த காலம் இறந்த முன்னோர்களைத் திருப்திப்படுத்தும் முக்கியமான காலமாகும். இந்து சர்வபித்ரி அமாவாசை அல்லது பித்ரு பட்ச அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும், இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்க சிறந்த நாள் இதுவே. ஒவ்வொரு ஆண்டும் இந்த குறிப்பிட்ட நாளில் துர்கா தேவி, பூமிக்கு வருகை தருவதாக நம்பப்படுகிறது. அதிலும், மேற்கு வங்காளத்தில் இந்த நாள் துர்கா பூஜை/நவராத்திரி திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த மஹாளய அமாவாசை செப்டம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது.

நேரம் மற்றும் சுப முகூர்த்தம்
நல்ல நேரம் - மதியம் 03.03 மணி முதல் 04.33 மணி வரை
ராகு காலம் - மாலை 04.33 மணி முல் மாலை 06.03 மணி வரை
எமகண்டம் - மதியம் 12.04 மணி முதல் மதியம் 01.33 மணி வரை
அமாவாசை திதி தொடக்கம் - 2022 செப்டம்பர் 25, அதிகாலை 03.12 மணி முதல்
அமாவாசை திதி முடிவு - 2022 செப்டம்பர் 26, அதிகாலை 03.24 மணி வரை

மஹாளய அமாவாசையின் முக்கியத்துவம்
மஹாளய அமாவாசை என்பது மஹாளய பக்ஷத்தின் சக்திவாய்ந்த உச்ச நாளாகும். இந்த நாளில் தர்ப்பணம் செய்வதன் மூலம் உங்கள் முன்னோர்களின் அமைதியற்ற ஆன்மாக்களை திருப்திப்படுத்த முடியும். வானியல் ரீதியாக, இந்த சிறப்பு அமாவாசை நாளில், சூரியனும் சந்திரனும் சேர்ந்து பூமி மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் மீது தங்கள் ஈர்ப்பு விசையைச் செலுத்தி, அவற்றின் ஆற்றலை உயர் மட்டத்திற்கு உயர்த்துகின்றன. புனித நூல்களின் அடிப்படையில், இந்த நாளில் தர்ப்பணம் செய்வது மிகவும் மங்களகரமானதாகவும், புண்ணியமாகவும் கருதப்படுகிறது. மஹாளய பக்ஷத்தின் 14 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் தர்ப்பணம் கொடுக்க தவறினால், இந்த சக்திவாய்ந்த அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தலாம். ஆயுதங்கள் அல்லது விபத்துகளால் உயிரிழந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் இந்த நாள் மிகவும் உகந்ததாகும்.

மஹாளய அமாவாசைக்கு பின்னால் உள்ள புராணங்கள்
மகாபாரத காவியத்தின் அடிப்படையில், கர்ணன் இறந்ததும் அவரது ஆன்மா சொர்க்கத்தை சென்றடைந்தது. அங்கு அவருக்கு உணவாக தங்கம் மற்றும் நகைகள் வழங்கப்பட்டது. உடனே கர்ணன் குழப்பமடைந்து, யமனிடம் தனது இத்தகைய நிலைக்கான காரணத்தைக் கேட்டார். கர்ணன் தான் உயிருடன் இருந்தபோது எல்லா வகையான செல்வங்களையும் மற்றவர்களுக்கு தானம் செய்தார். ஆனால், அவர் தன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து உணவு வழங்கவில்லை என்று யமன் கர்ணனுக்கு பதிலளித்தார். கர்ணன் இறக்கும் வரை தன் முன்னோர்கள் யார் என்று தெரியாததால், அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அவரால் இயலவில்லை. பின்னர், யமன் கர்ணனை 15 நாட்கள் (மஹாளய பக்ஷ காலத்தில்) பூமிக்கு திரும்பிச் செல்ல அனுமதித்தார். இதனால் கர்ணன் தனது முன்னோர்களை திருப்திப்படுத்த உணவு மற்றும் தண்ணீரை வழங்கி தர்ப்பணம் செய்ய முடிந்தது. கர்ணன் இவ்வாறு முன்னோர் வழிபாடுகளைச் செய்துவிட்டு சொர்க்கத்திற்குச் சென்று நிம்மதியாக இருந்தார் என்று கூறப்படுவதுண்டு. வாரி வழங்குவதில் வள்ளலான கர்ணனுக்கே இப்படிப்பட்ட நிலை எனும் போது, மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை மட்டும் தவறி விடக்கூடாது.

மஹாளய அமாவாசை சடங்குகள்
மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு வீட்டிலிருந்தோ அல்லது புனித தலங்களுக்கோ, நீர் நிலைகளுக்கோ சென்று தர்ப்பணம் செய்யவும். கறுப்பு எள்ளுடன் கலந்த அரிசி உருண்டைகளை காகங்களுக்கும், விலங்குகளுக்கும் பிரசாதமாக அளிக்க வேண்டும். இது 'பிண்டம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஒரு பிராமணருக்கு, உங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவளிப்பது 'பித்ரு போஜனம்' என்று அழைக்கப்படுகிறது. சிலர் புனித நூல்களைப் படிப்பதன் மூலமும் தங்கள் நாளைக் கழிக்கிறார்கள். கருட புராணம், அக்னி புராணம், பாகவத புராணம், பகவத் கீதை போன்றவற்றை இந்த நாளில் வாசிக்கிறார்கள். இந்த நாளில் ஏழை மற்றும் இல்லாதவர்களுக்கு உணவு மற்றும் ஆடை தானம் செய்வதும் புண்ணியமாக கருதப்படுகிறது.

மஹாளய அமாவாசையை விரதம் அனுசரிப்பதன் பலன்கள்
மஹாளய அமாவாசை அன்று மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பின்வரும் பலன்களை அளிக்கும்.
* உங்கள் மூதாதையர்களின் அமைதியற்ற ஆன்மாக்களைத் திருப்திப்படுத்தி, அவர்கள் முக்தி அடைய உதவும்
* பணம், உடல்நலம், உறவுகள் மற்றும் தொழில் தொடர்பான உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்
* நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வளமான வாழ்க்கையின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்
* கடந்த காலத்தில் தர்ப்பணம் செய்யாததால் ஏற்பட்ட கெட்ட கர்மாவை கலைத்திட முடியும்
* மூதாதையரின் கெட்ட கர்மாவை நீக்கி, உங்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றியை அடைய உதவிடும்



Click it and Unblock the Notifications