Latest Updates
-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
மகா சிவராத்திரி அன்று இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க.. இல்லன்னா சிவனின் கோபத்துக்கு ஆளாவீங்க...
சிவனை வழிபடும் போது விதிகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நற்பலன் கிடைக்காது. மேலும் சிவபெருமானுக்கு ஒருசில பொருட்களை படைத்து வழிபடக்கூடாது.
Maha Shivratri 2023: சிவபெருமானை நினைத்து மேற்கொள்ளும் மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்று தான் மகா சிவராத்திரி விரதம். இந்த மகா சிவராத்திரியானது மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியில் வரும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18 ஆம் தேதி, அதுவும் சனி பிரதோஷத்தன்று வருகிறது. மேலும் இந்த மகா சிவராத்திரியில் சனி, சூரியன் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ஆண்டு மகா சிவராத்திரி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

பொதுவாக ஒவ்வொரு கடவுளை வழிபடும் போதும், அந்த கடவுளுக்கு பிடித்தமான மற்றும் மகிழ்விக்கும் பெருட்களை வாங்கி படைப்போம். ஆனால் அந்த கடவுளுக்கு பிடிக்காத பொருட்களை வாங்கிக் கொடுக்கும் போது, அதன் விளைவாக கெடுபலன்களைப் பெறுவதோடு, அந்த கடவுளின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். அந்த வகையில் சிவனை வழிபடும் போது, அவருக்கு வில்வ இலை, பாங், ஊமத்தம் பூ, பால், சந்தனம் ஆகியவற்றைக் கொண்டு வழிபடுவது நல்லது.
சிவனை வழிபடும் போது விதிகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நற்பலன் கிடைக்காது. மேலும் சிவபெருமானுக்கு ஒருசில பொருட்களை படைத்து வழிபடக்கூடாது. அவ்வாறு செய்தால் அது சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாக்கும். இப்போது எந்த பொருட்களை எல்லாம் சிவனுக்கு படைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

துளசி
துளசியில் லட்சுமி தேவி வாசம் செய்கிறார். அப்படிப்பட்ட துளசியை சிவபெருமானுக்கு எப்போதும் படைக்கக்கூடாது. லட்சுமி தேவி விஷ்ணு பகவானின் மனைவி. எனவே லட்சுமி தேவி குடியிருக்கும் துளசியை மற்ற கடவுகளுக்கு வழங்கக்கூடாது. முக்கியமாக சிவனுக்கு துளசியை படைப்பது பாவமாக கருதப்படுகிறது.

சங்கை பயன்படுத்தக்கூடாது
சிவபெருமானை வழிபடும் போது சங்கை பயன்படுத்தக்கூடாது. நிறைய பேர் சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போது, நீரை சங்கில் நிரப்பி அபிஷேகம் செய்வார்கள். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. ஏனெனில் சிவபெருமான் சங்கச்சூர்ணா என்ற அரக்கனை அழித்ததால், இவ்வாறு செய்வது கெட்டதாக கருதப்படுகிறது. எனவே தான் சிவனை வழிபடும் போது, சங்கு பயன்படுத்தப்படுவதில்லை.

மஞ்சள்
மஞ்சள் என்ன தான் மங்களகரமான பொருளாக இருந்தாலும், சிவபெருமானை வழிபடும் போது பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் சுடுகாட்டில் சிவன் வசிக்கம் போது, மஞ்சள் சுப காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. எனவே தான் சிவ வழிபட்டால், மஞ்சள் தடை செய்யப்பட்டுள்ளது.

சிவப்பு நிற பொருட்கள்
சிவனை வழிபடும் போது சிவப்பு நிற பொருட்கள் எதையும் பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக செம்பருத்தி போன்ற சிவப்பு நிற பூக்களை சிவனுக்கு படைக்கக்கூடாது. இந்த பூ சிவனை மகிழ்ச்சியுற செய்வதற்கு பதிலாக கோபத்தை தான் வரவழைக்கும்.

தாழம்பூ
தாழம்பூ சிவபெருமானுக்கு படைக்கக்கூடாத பூக்களில் முதன்மையானது. ஒருவேளை அந்த பொருட்களை சிவனுக்கு படைத்தால், சிவனின் அருள் கிடைப்பதற்கு பதிலாக கோபத்திற்கே ஆளாக நேரிடும். ஏனெனில் புராணத்தில் தாழம்பூ சிவனிடம் சாபத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

குங்குமம்
மஞ்சளுக்கு அடுத்தப்படியாக குங்குமம் மங்களகரமான பொருளாக கருதப்படுகிறது. அதனால் தான் இறைவனை வழிபடும் போது குங்குமம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சிவபெருமானுக்கு குங்குமத்திற்கு பதிலாக சந்தனம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சிவனுக்கு குங்குமத்தை படைக்கக்கூடாது. அவ்வாறு செய்வது சிவனை அவமதிப்பதற்கு சமம் என்று நம்பப்படுகிறது. எனவே மறந்தும் சிவனுக்கு குங்குமத்தை படைக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications