Latest Updates
-
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம்
மகா சிவராத்திரியில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு சிவனின் முழு அருள் கிடைப்பதோடு, செல்வமும் பெருகுமாம்..!
2023 மகா சிவராத்திரியில் இருந்து சில ராசிக்காரர்கள் சிவபெருமானின் அருளைப் பெறவுள்ளார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைப் பார்ப்போம்.
Maha Shivratri 2023: மாதந்தோறும் சிவராத்திரி வரும். ஆனால் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாசி மாத மகா சிவராத்திரி நாளில் தான் பார்வதி தேவி விரதமிருந்து சிவனின் பாதியானார். இது தவிர இன்னும் பல முக்கிய நிகழ்வுகள் இந்த சிவராத்திரி நாளில் நிகழ்ந்ததால், மகா சிவராத்திரி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில் மகா சிவராத்திரியானது பிப்ரவரி 18 ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. இந்த சிவராத்திரி சனிக்கிழமை அன்று வருவதோடு, சனி பிரதோஷம் என்பதால், இது இன்னமும் சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரியாக கூறப்படுகிறது. சிவனின் அருளைப் பெற விரும்புபவர்கள், மகா சிவராத்திரி நாளில் விரதமிருந்து சிவனை வழிபட்டால், சிவனின் பரிபூர்ண அருள் கிடைப்பதோடு, வாழ்வில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, செல்வம் பெருகும். அதோடு இந்த மகா சிவராத்திரியில் இருந்து சில ராசிக்காரர்கள் சிவபெருமானின் அருளைப் பெறவுள்ளார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைப் பார்ப்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி நாளில் இருந்து அட்டகாசமாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்களுக்கு சிவனின் அருள் கிடைப்பதோடு, வருமானத்தில் அதிகரிப்பும் ஏற்படப் போகிறது. இது மட்டுமின்றி, பல புதிய வேலை வாய்ப்புக்களும் கிடைக்கப் போகிறது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சிவனின் ஆசியைப் பெறப் போகிறார்கள். மேலும் சிவராத்திரிக்கு பின் இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் இந்த சிவராத்திரி நாளில் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வீடு, வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சிவராத்திரியில் சிவபெருமானின் அருளால் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கப் போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக மற்றும் செழிப்பாக இருக்கும்.

துலாம்
மகா சிவராத்திரியில் கிடைக்கும் சிவனின் அருளால் துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வருமானத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சிவராத்திரிக்கு பிறகான காலம் அட்டகாசமாகவும், சாதகமாகவும் இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி விரதம் இருந்தால், இந்த ராசிக்காரர்களின் பல விருப்பங்கள் நிறைவேறும். முக்கியமாக வியாபாரிகள் சில முக்கியமான நபர்களை சந்திப்பதோடு, அவர்களின் உதவியால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பலன் இந்த சிவராத்திரிக்கு பின் கிடைக்கும்.

கும்பம்
வருகிற மகா சிவராத்திரியில் இருந்து கும்ப ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்குகிறது என்றே கூறலாம். ஏனெனில் சிவராத்திரிக்கு பின் இவர்கள் எந்த ஒரு வேலையை செய்தாலும், அதில் வெற்றியைக் காண்பார்கள் மற்றும் சில திடீர் பண ஆதாயங்களும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் புதிய வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
