Latest Updates
-
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம்
உங்க ஆசை நிறைவேறணுமா? அப்ப மகா சிவராத்திரி அன்று உங்க ராசிப்படி சிவனை வழிபடுங்க...
மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் விரதமிருந்து சிவனை வழிபட்டு வந்தால், சிவனின் அருளால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதுவும் சிறப்பான பலனைப் பெற, ஒவ்வொரு ராசிக்காரரும் அவர்களின் ராசிப்படி சிவனை வழிபட வேண்டும்.
Maha Shivratri 2023: அம்மனுக்கு நவராத்திரி என்றால், சிவனுக்கு மகாசிவராத்திரி. இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாத சிவராத்திரி தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த சிவராத்திரி சிவன் பார்வதியின் திருமண இரவாக கருதப்படுகிறது. இந்நாளில் தான் பார்வதி தேவி விரதமிருந்து சிவனின் பாதியானார் மற்றும் இதுப்போன்று பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் விரதமிருந்து சிவனை வழிபட்டு வந்தால், சிவனின் அருளால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதுவும் சிறப்பான பலனைப் பெற, ஒவ்வொரு ராசிக்காரரும் அவர்களின் ராசிப்படி மகா சிவராத்திரி நாளில் சிவனை வழிபட வேண்டும். இப்போது ஒவ்வொரு ராசிக்காரரும் எப்படி சிவனை வழிபட வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு சிவப்பு சந்தனம் மற்றும் சிவப்பு நிற மலர்களால் பூஜை செய்ய வேண்டும். மேலும் "ஓம் நாகேஸ்வராய நம" என்னும் மந்திரத்தை 51 முறை அல்லது 108 முறை சொல்ல வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி அன்று மல்லிகை பூக்களால் சிவனுக்கு பூஜை செய்ய வேண்டும். அத்துடன் சிவபெருமானின் ருத்ராஷ்டகத்தை சொல்ல வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு ஊமத்தம் பூ வாங்கி கொடுத்து வழிபட வேண்டும். மேலும் சிவபெருமானுக்கு ஊமத்தம் பூவால் பூஜை செய்யும் போது, ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மகா சிவராத்திதி நாளன்று சிவபெருமானுக்கு பசும்பாலால் அபிஷேகம் செய்வதோடு, சிவபெருமானின் ருத்ராஷ்டகத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி அன்று சிவனின் அருளைப் பெற விரும்பினால், சிவாலயத்தில் அமர்ந்து, ஸ்ரீ சிவ சாலிசாவை சிவராத்திரி இரவு முழுவதும் சொல்ல வேண்டும்.

கன்னி
கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் சிவபெருமானுக்கு ஊமத்தம் பூ மற்றும் பாங் போன்ற பொருட்களை மகா சிவராத்திரி நாளில் வாங்கி கொடுத்து, ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை சொல்வதோடு, சிவ சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் தயிர் அல்லது பாலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, சிவாஷ்டகம் மற்றும் சிவன் சஹஸ்ரநாமத்தை பாராயம் செய்ய வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் ரோஜா மற்றும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். அதோடு, ஓம் அங்கரேஷ்வராய நம என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.

தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் சிவனின் அருளைப் பெற மகா சிவராத்திரி நாளன்று மஞ்சள் நிற பூக்களை வாங்கி சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அத்துடன் சிவாஷ்டகத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் ஊமத்தம் பூ, பாங் போன்றவற்றை வாங்கி சிவனுக்கு கொடுக்கு சிவபெருமானை வழிபட வேண்டும். இது தவிர, ஓம் பார்வதி நாதயை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரி நாளன்று பால், தயிர், சர்க்கரை, நெய், தேன் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து சிவனுக்கு அபிஷேகம் செய்வதோடு, ஓம் நமசிவாய நமஹ என்ற மந்திரத்தையும், சிவாஷ்டகத்தையும் பாராயணம் செய்ய வேண்டும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்தம், தயிர், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பூக்களை வாங்கி கொடுக்க வேண்டும். அதோடு ஓம் பாமேஸ்வராய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
