Latest Updates
-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
பணப் பிரச்சனை உங்க கழுத்தை நெறிக்குதா? அப்ப மகாசிவராத்திரி அன்று இந்த சின்ன விஷயத்தை செய்யுங்க...
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகா சிவராத்திரி நாளில் ஒருசில விஷயங்களை செய்வதன் மூலம், பண பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
Maha Shivratri 2023: இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று தான் மகா சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு மகா சிவராதித்திரி பிப்ரவரி 18 ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. இந்த ஆண்டின் மகா சிவராத்திரி இன்னமும் சிறப்பு வாய்ந்தது என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்த நாளில் பிரதோஷம் வருவதோடு, கும்பத்தில் சனியும் சூரியனும் இணைந்துள்ளார்கள்.

மகா சிவராத்திரி நாளில் சிவ பக்தர்கள் அனைவரும் மகா சிவராத்திரி தினத்தில் சிவனின் அருளைப் பெற விரதமிருந்து, சிவனை வழிபடுவார்கள். மேலும் இந்நாளில் சிவனை மனதில் நினைத்து வழிபடுபவர்களின் ஆசைகள் நிறைவேறுவதோடு, வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் நீங்கி, சிவனின் அருளால் வாழ்க்கை சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகா சிவராத்திரி நாளில் ஒருசில விஷயங்களை செய்வதன் மூலம், பண பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இப்போது பிரச்சனைகள் நீங்க மகா சிவராத்திரி தினத்தில் செய்ய வேண்டிய பரிகாரங்களைக் காண்போம்.

வேலையில் பிரச்சனை
நீங்கள் உங்களின் பணியிடத்தில் அதிக பிரச்சனைகளையும் சிரமங்களையும் சந்திக்கிறீர்களா? அப்படியானால் மகா சிவராத்திரி நாளில் விரதமிருந்து சிவலிங்கத்திற்கு தேன் கலந்த நீரால் அபிஷேகம் செய்து, ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை சொல்லுங்கள். இதனால் வேலையில் சந்திக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

பணம் அதிகரிக்க...
எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் சேரமாட்டீங்குதா? உங்கள் கையில் பணம் அதிகம் சேர வேண்டுமா? அப்படியெனில் மகா சிவராத்திரி தினத்தன்று சிவனை நினைத்து விரமிருந்து, தயிர் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யுங்கள். இதனால் உங்கள் கையில் பணம் அதிகம் சேரும் மற்றும் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.

வியாபாரத்தில் லாபம் பெருக...
நீங்கள் சொந்தமாக தொழில் செய்கிறீர்களா? உங்கள் தொழிலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படுவதில்லையா? அப்படியானால் மகா சிவராத்திரி நாளில் கரும்புச்சாறு கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யுங்கள். இது தவிர, தேன் மற்றும் நெய் கொண்டும் அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி செய்வதனால் தொழில்/வியாபாரத்தில் லாபத்தைக் காணலாம்.

விருப்பங்கள் நிறைவேற...
நீங்கள் என்ன நினைத்தாலும் நடக்கமாட்டீங்குதா? உங்களின் ஆசைகள் மற்றும் நீங்கள் விரும்பும் பலனைப் பெற விரும்புகிறீர்களா? அப்படியானால் மகா சிவராத்திரி நாளில் சிவனுக்கு உங்களுக்கு பிடித்த பொருட்களால் அபிஷேகம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம், உங்களின் ஆசைகள் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது.

சிக்கிய பணம் கிடைக்க..
நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்து, அந்த பணம் நீண்ட நாட்களாக கைக்கு வராமல் உள்ளதா? அப்படியெனில் சிவனின் வாகனமான நந்திக்கு பசுந்தீவனத்தை மகா சிவராத்திரி நாளில் வாங்கி கொடுங்கள். இதன் மூலம் சிக்கிய பணம் கிடைக்கும்.
முக்கியமாக மகா சிவராத்திரி நாளில் விரதமிருந்து 108 முறை மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை சொல்லி வந்தால், அகால மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications